April 16 2019 0Comment

தெய்வநாயகேஸ்வரர் திருக்கோயில்:

தெய்வநாயகேஸ்வரர் திருக்கோயில்:
தேவர்கள் படைக்கு தலைமையேற்று சம்ஹhரத்திற்கு சென்றதால் இத்தலத்து சிவன், தெய்வநாயகேஸ்வரர் என்றும், அரம்பையர்களுக்கு அருளியதால், அரம்பேஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார்.
இதனால், அரம்பையங்கோட்டூர் எனப்பட்ட இத்தலம் காலப்போக்கில் எலும்பியங்கோட்டூர் என்று மருவியது. தட்சனால் சாபம் பெற்ற சந்திரன், இங்குள்ள மல்லிகாபுஷ்கரணி தீர்த்தத்தில் நீராடி சுவாமியை வணங்கி சென்றுள்ளார். இதில் நீராடி சுவாமியை வணங்கினால் மறுபிறவி இல்லை என்பது நம்பிக்கை.
இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார், தீண்டாத்திருமேனியான சிவன், கொன்றை மலரின் இதழைப்போன்று காட்சி தருகிறார்.
தினமும் கோபூஜை நடக்கும் இத்தலத்து சிவனை, வருடத்தில் ஏப்ரல் 2 – 7 , செப்டம்பர் 5 – 11 வரையில் சூரியன் தனது ஒளிக்கற்றையைப்பரப்பி பூஜிக்கிறார்.
சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 246 வது தேவாரத்தலம் ஆகும்.
#சிறப்பம்சங்கள் :
இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். வருடத்தில் ஏப்ரல் 2 – 7 , செப்டம்பர் 5 – 11 வரையில் சூரியன் தனது ஒளிக் கற்றையைப்பரப்பி பூஜிக்கிறார்.
காஞ்சிபுரத்திலிருந்து 25கி.மீ, சென்னையிலிருந்து 60கி.மீ தொலைவில் உள்ளது. சென்னை பூந்தமல்லியில் இருந்து பேரம்பாக்கம் சென்று அங்கிருந்து ஆட்டோவில் செல்லலாம்.
Share this:

Write a Reply or Comment

eighteen + twenty =