April 16 2019 0Comment

அஞ்சலி வரத ஆஞ்சநேயர் திருக்கோயில்

அஞ்சலி வரத ஆஞ்சநேயர் திருக்கோயில்:
அனுமனை வணங்குபவர்களை சனிபகவானும் அண்டமாட்டான் என்பது நம்பிக்கை. ஓ ராமா! உன் நாமாவையோ, இந்த அனுமன் நாமாவையோ யார் கூறுகிறார்களோ, அவர்களிடம் நான் ஒரு நொடி கூட இருக்க மாட்டேன், என்று ராமனிடம் சத்தியம் செய்து விட்டு சனி பகவான் தன் இருப்பிடம் சென்றதாக கூறுவர்.
ராமாயண கதாநாயகன் ராமனின் வலதுகரமான ஆஞ்சநேயர் மார்கழி மாதம் மூல நட்சத்திரத்தில் அவதரித்தவர். அனுமனை சிவனின் அவதாரம் என கூறுவதுண்டு. வாயுபகவானுக்கும், அஞ்சனாதேவிக்கும் மகனாக பிறந்த அனுமனுக்கு பவனசுதன், மருத்சுதன், பவனகுமார், பஜ்ரங்கபலி, மகாவீரர் என்ற பெயர்களும் உண்டு.
ராமநாமத்தை தவிர வேறு எதையும் அறியாத அவர் தன் னலமில்லாத வீரனாக திகழ்ந் தார். அவர் மிகச்சிறந்த ராம பக்தன். ராமனுக்கு பணிவிடை செய்வதற்காகவே வாழ்ந்தவர். அடக்கம், தைரியம், அறிவுக்கூர்மையுடன் திகழ்ந்தவர்.
எல்லா தெய்வீக குணங்களும் அவரிடம் இருந்தன. பிறரால் செய்யமுடியாத செயல்களை இவர் ராமநாமத்தை உச்சரித்துக் கொண்டே செய்து முடித்தவர். சாதாரண செயல்களை செய்து விட்டு தங்களை தாங்களே தற்பெருமையாக புகழ்ந்து கொண்டிருக்கும் இந்த உலகில் அனுமன் தன் அறிவைப் பற்றியோ, தனது தொண்டைப் பற்றியோ பிறரிடம் கூறியது கிடையாது.
அத்துடன் பணத்தையோ, பதவியையோ எதிர்பார்க்காதது மட்டுமின்றி தற்புகழ்ச்சியாக ஒரு வார்த்தை கூட சொன்னதும் கிடையாது.
 நான் ராமனின் சாதாரண தூதன், அவரது பணியை செய்வதற்காகவே வந்துள்ளேன். எனக்கு ராமனின் அருளால் அச்சமோ, மரணபயமோ கிடையாது. ராமனுக்கு தொண்டு செய்யும் போது நான் மரணமடைய நேரிட்டால் அதை வரவேற்கிறேன் என்று சொன்னவர்.
வணங்குபவர் களுக்கு வணக்கம் சொல்லும் ஆண்டவனான ஆஞ்சநேயர் தமிழகத்தில் ஐந்து இடங்களில் அஞ்சலி ஹஸ்த நிலையில் விஸ்வரூபத்தில் அருள்பாலிக்கிறார். அஞ்சலி ஹஸ்தம் என்றால் வணங்கிய நிலை என்பதாகும். இதில் மிகவும் பழமையானது சுசீந்திரம் தாணுமாலயன் கோயிலில் உள்ள 18 அடி உயர ஆஞ்சநேயர்.
 சின்னாளபட்டி ஆஞ்சநேயர் நைமிசாரண்யத்தில் கண்டெடுக்கப்பட்ட மிகப்பெரிய #சாளக்கிராமத்தினால் ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 அழகான ஆஞ்சநேயர், சுந்தர புருஷன் என்று பக்தர்களால் அன்பாக அழைக்கப்படும் அளவுக்கு இந்த 16 அடி உயர ஆஞ்சநேயரின் புகழ் தமிழகமெங்கும் பரவிக் கிடக்கிறது.
ஆஞ்சநேயர்களில் கதாயுதத்துடன் இருப்பவர் இவர் ஒருவர் மட்டுமே. சமீப காலத்தில் உருவான இந்தக் கோயில், அவரது விஸ்வரூபம் போல, தமிழகத்தின் பல பகுதிகளிலும் விரைவிலேயே பிரபலமாகி விட்டது.
 இங்கு ஆஞ்சநேயர் அஞ்சலிஹஸ்த நிலையில் கதாயுதத்துடன் அருள்பாலிப்பது இத்தலத்தின் தனி சிறப்பாகும்.இவரது வலது கண் சூரியன். இடது கண் சந்திரன். இவரது கேசம் ஒளிவட்டம் போல வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.சிவனைப்போல் ஜடாமுடி என அருள்பாலிக்கும் இவரைப் பார்த்தால் அவரும் நாமும் பேசிக் கொண்டிருப்பதுபோல் தோன்றும்.
மதுரையிலிருந்து திண்டுக்கல் செல்லும் வழியில் உள்ள சின்னாளபட்டியிலிருந்து 1கி.மீ தூரத்தில் உள்ள மேட்டுப் பட்டியில் கோயில் அமைந்துள்ளது. திண்டுக்கல், செம்பட்டியிலிருந்து பஸ் வசதி உள்ளது.
Share this:

Write a Reply or Comment

one × 1 =