தெளிவான பார்வைக்கு வைட்டமின் ஏ
வைட்டமின் – ஏ யின் முக்கியப் பணி, தெளிவான கண் பார்வையைத் தருவதுதான். புரதச்சத்துத் தயாரிப்பில் பங்குகொள்வதன் மூலம், உடலில் உள்ள செல்களின் வளர்ச்சிக்கும், உடலுக்கு அதிக எதிர்ப்பு சக்தியைக் கூட்டவும், ஈறுகளை வலுப்படுத்தவும், செரிமானத்துக்கும் உதவுகிறது. மேலும், சருமப் பாதுகாப்புக்கும், நரம்பு மற்றும் எலும்புகளை உறுதியாக்கவும் வைட்டமின் ஏ தேவை.
பற்றாக்குறை ஏற்படாமல் தடுக்க…
இது மாம்பழ சீசன்… இப்போது வாங்கிச் சாப்பிட்டால் நான்கு மாதத்துக்கு தேவையான வைட்டமின் ஏ உடலில் சேரும்.
தினமும் 200 கிராம் கேரட், பால் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
காய்கறி, பழங்கள் சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு மீன் எண்ணெய் மாத்திரை, மருந்து கொடுக்கலாம்.
Share this: