October 11 2018 0Comment

ஆதிஜெகன்னாத பெருமாள் கோயில்:

ஆதிஜெகன்னாத பெருமாள் கோயில்:

 

திருப்புல்லாணி ஆதிஜெகன்னாத பெருமாள் கோயில் 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்று. 

#ராமாயண வரலாற்றுடன் தொடர்புடையதான திருக்கோயில். இத்திருத்தலத்திலிருந்து நான்கு கி.மீ தொலைவில் சேதுக்கரை உள்ளது. 

ராமர் அவதாரம் புரிய அருள் புரிந்த பெருமாளும், சயனராமரும் அமைந்துள்ளனர். 

#தலவரலாறு :

புல்லவர், காலவர், கண்ணவர் எனும் மூன்று மகரிஷிகளின் தவத்திற்காக பெருமாள் அரச மரமாகவும் ஆதிஜெகநாதப்பெருமாளாகவும் காட்சியளித்த திருத்தலம். 

இந்த ஜெகந்நாதர் தசரதருக்கு ராமபிரான் அவதாரம் புரிய அருளியவர் என்பதால் பெரிய பெருமாள் என்றும் அழைக்கப்படுகின்றார்.

சீதையை மீட்க இலங்கைக்கு கடலில் பாலம் அமைக்க சமுத்திர ராஜனை அழைக்க மீன்களுக்கு இடையேயான வழக்கை தீர்த்து வைக்கச் சென்றதால் அழைப்பிற்கு உடனே வராமல் சமுத்திர ராஜன் தாமதிக்கவே கரையில் மூன்று நாட்கள் ராமபிரான் தங்கியிருந்த திருத்தலம்.

தாமதமாக வந்த சமுத்திர ராஜன் காரணம் கூறி மன்னிப்பு வேண்டினார்.இந்த சமுத்திரராஜன் சமுத்திரராணியுடன் சயனராமர் சன்னதியின் முன்மண்டபத்தில் அமைந்துள்ளனர்.

Share this:

Write a Reply or Comment

three × one =