என்னை எனக்கு அறிமுகப்படுத்திய
1981 முதல் 1988 வரை சென்னை சாந்தோம் மேல்நிலை பள்ளியில் படித்த போது
நிறைய ஆசிரியர்கள்
நெருக்கமாக இருந்தாலும்
அதில் மறக்கவே முடியாதவர்கள் இருவர்
ஒருவர் கெமிஸ்டரி எடுத்த திருவேலிக்கேணி சம்பத் சார்
எனக்கு அவரையும் அவர் எடுத்த கெமிஸ்டரியையும் இன்று வரை ரொம்ப பிடிக்கும்
ஏனோ அவருக்கு என்றுமே என்னை பிடிக்காது
அதனால் அவருடன் தொடர்பில் இருக்க முடியவில்லை
மற்றொருவர் பிசிக்ஸ் எடுத்த ரவிச்சந்திரன் சார்
இவர் எடுத்த பிசிக்ஸ் ஏனோ எனக்கு என்றைக்குமே
பிடிக்காது என்றாலும்
இவரை என்றைக்குமே எனக்கு பிடிக்கும்
என்பதால்
ஒரு நெருங்கிய தொடர்பில் இன்று வரை
இவருடன் இருக்க முடிகின்றது
ஏறத்தாழ 30 வருடங்கள் கழித்து
பாடம் எடுத்து களைத்து போனவரை
அவர் ஒய்வு பெற்றார் என்ற செய்தி
கேள்விப்பட்டு மரியாதை நிமித்தமாக
சந்தித்து சில மணி நேரம்
உரையாடிவிட்டு வந்தேன்.
என் வாழ்க்கை
இயங்குவதே
இந்த உரையாடல்களால் தான்
என்பதை நிரூபிக்கும்
வகையில் இருந்தது
இந்த சந்திப்பு
எத்தனை உசரம் போனாலும்
ஏற்றி விட்ட ஏணியை
மதிப்பவன் எப்படி உள்ளான்
எட்டி உதைத்தவன்
அடைந்த கதி என்ன
என்பதை நிறைய இடங்களில்
நான் பார்த்திருக்கின்றேன்
எது எப்படி இருந்தாலும்
ஏணிக்கு எந்த நிலையிலும் எந்த ஏற்றமும்
இல்லாமல் நின்ற இடத்திலேயே
நிற்பது தானே நிரந்தர உண்மை.
நான் சந்தித்த இந்த ஏணி சற்று
மாறுபட்டு எங்களை மட்டும் அல்லாமல்
தன் இரண்டு செல்வங்களையும்
சென்னை ஐ.ஐ.டி வரை கொண்டு சென்றுள்ளது
சற்று நிம்மதியான செய்தி
இவரை சந்தித்த சந்தோஷமே
ஏணிகளுக்கு ஓய்வு என்று ஏதுவும்
இல்லை என்பதை உறுதிபடுத்தியதால்
பள்ளியில் கேட்க மறந்த
பிசிக்ஸ் சம்பந்தமான சந்தேகத்திற்கு
இன்று அவரை சந்தித்த போது
கேள்வி கேட்க வைத்து
விடை புரிய வைத்தது
ஆள் மேல் இடி விழுந்த பிறகு
இடி விழும் பலனைப் பற்றிப்
பஞ்சாங்கத்தில் பார்ப்பதில் என்ன பயன்;
எதிர்காலத்தை சரியாக கணிக்க
அதை நாமே உருவாக்க வேண்டும்;
நாளைய மழை அறியும் எறும்பாய் இரு
நேற்றைய மழைக்கு இன்று குடை பிடிக்கும்
காளானாய் இராதே;
நேரத்தைத் தள்ளிப் போடாதே;
தாமதத்தால் அபாயமான முடிவே ஏற்படும்;
என்பதை சிறு வயதிலேயே புரிய வைத்தவர்
உடனான இந்த சந்திப்பு
நிறைய யோசிக்க வைத்தது
நிறைய யோசிக்க வைக்கும்
நிறைய யோசிக்க வைக்கின்றது
ஒரு நாடு முன்னேற நல் ஆசிரியர்களே முக்கியம்
எந்த நாட்டில் ஆசிரியர்களுக்கு அதிகம் சம்பளம்
வழங்கப்படுகின்றதோ
அந்த நாடே வாழும்
மற்றவை வீழும்
கற்பித்த ஆசிரியர்களை போற்றுவோம்
வளமான நாட்டை வசமாக்குவோம்
Share this: