கலைஞர்
உதய சூரியனுக்கு நிரந்தர ஒய்வு
இளைய சூரியனுக்கு வழி விட்டு……..
பெய்யும் அத்தனை மழையும் தேனாகலாம்
இருக்கும் அத்தனை மணலும் பொன்னாகலாம்
ஆனாலும் அவையாவும் நீயாகுமோ?
தமிழை ஆண்டவனுக்கு
இந்தியாவின் சாக்கிரட்டீசுக்கு
தமிழ்நாட்டின் மார்டின் லூதர் கிங்குக்கு
ஓய்வறியா உழைப்பிற்கு
நிரந்தர ஒய்வு
நீங்கள் இல்லா தமிழகம் சாத்தியமா?????
பகலை பகலுக்கு முந்திய இரவும்,
இரவை இரவுக்கு முந்திய பகலும் தீர்மானிப்பது
உண்மையாகவே இருந்து விட்டு போகட்டும்
ஆனால் இன்னும் செய்து முடிக்க சில பணி இருக்க
எதிலும் அவசரம் காட்டா நீங்கள் இன்று மட்டும்
அவசரப்பட்டு எடுத்த பணியை அப்படியே விட்டு விட்டு சென்றது சரியா?????
சில கேள்விகள் விடை இல்லாமலே இருக்கட்டும்/போகட்டும்
மீளாத் துயரில்
உங்கள் உழைப்பு மற்றும் தமிழுக்கு என்றும் நிரந்தர அடிமை
Dr.ஆண்டாள் P சொக்கலிங்கம்
Share this: