May 18 2018 0Comment

ஸ்ரீஸ்ரீஸ்வயம்பிரகாச சச்சிதானந்த சரஸ்வதி மகா ஸ்வாமிகள்:

ஹரிஹரபுரம் – துங்கா நதி தீரத்தில் அமைந்திருக்கும் புனிதத் தலம்;

தட்ச பிரஜாபதி யாகம் செய்த யாக பூமி;

அகத்தியர் தவமியற்றிய தவபூமி;

ஆதிசங்கரர் சனாதன தர்மத்தைச் செழிக்கச் செய்த ஞானபூமி.

இந்த ஷேத்திரத்தில் ஸ்ரீ ஆதிசங்கராசார்ய

சாரதா லக்ஷ்மிநரசிம்ம பீடத்தை ஏற்படுத்தி,

 

ஸ்ரீஸ்ரீஸ்வயம்பிரகாச கிருஷ்ண யோகேந்திர மஹா ஸ்வாமிக்கு மந்திர தீட்சை கொடுத்து, பீடாதிபதியாக நியமித்தார்.

 

அத்துடன், அகத்தியர் பூஜித்த ஸ்ரீலக்ஷ்மிநரசிம்ம சாளக்கிராம வழிபாட்டுக்கும் நியமங்களை வகுத்துத் தந்தார்.

 

இந்த பீடத்தின் இன்றைய பீடாதிபதி ஸ்ரீஸ்ரீஸ்வயம்பிரகாச சச்சிதானந்த சரஸ்வதி மகா ஸ்வாமிகள். இந்தக் கோயிலை மிக பிரமாண்டமாக நிர்மாணித்து, ஸ்ரீ வஜ்ரஸ்தம்ப லக்ஷ்மிநரசிம்மரைப் பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில் கடந்த ஏழு ஆண்டுகளுக்கும் மேலாகப் பாடுபட்டு வருகிறார்.

 

மகா ஸ்வாமிகள் அவர்களை ஸ்ரீ வஜ்ரஸ்தம்ப லக்ஷ்மிநரசிம்மர் கும்பாபிஷேகம் சம்பந்தமாக இன்று சந்தித்து உரையாடிய போது எடுத்த படங்கள்…

 

 

 

 

Share this:

Write a Reply or Comment

19 + 14 =