கபிஸ்தலம் ஜி.கே.வாசன் மூப்பனார்
குன்னியூர் சாம்பசிவ ஐயர், பூண்டி வாண்டையார், கபிஸ்தலம் மூப்பனார் எங்களிடம் இல்லாமல் போனாலும் நான் உங்களை நம்பி வந்திருக்கின்றேன் என்று பேரறிஞர் அண்ணாதுரை பலமுறை மக்களை பார்த்து சொல்லியது உண்டு – அவருடைய கூட்டங்களிலே,
பேரறிஞர் அண்ணாவே ஆச்சரியமாக பார்த்து மேற்கோள் காட்டி சொன்ன ஒரு குறிப்பிட்ட குடும்பத்தின் இன்றைய, நிகழ்கால தலைமுறை தலைவரான திரு.ஜி.கே.வாசன் அவர்களை பார்த்து பேசிய போது எனக்கு ஏற்பட்ட அனுபவம் பலாவில் மலைத்தேன் ஊற்றி சாப்பிட்டதை விட சுவையானதாக இருந்தது.
அவரை சந்திக்க சென்றதன் நோக்கம் தாயார் ஆண்டாளுக்காக சரியான நேரத்தில் குரல் கொடுத்தற்காக மார்கழி புரட்சி குழுவின் சார்பாக நன்றி சொல்வதற்காக.
பெரிய மனிதரை பார்க்க மரியாதை நிமித்தமாக நிறைய சுவையான பழங்களை எடுத்து சென்றிருந்தேன் நண்பர் ஸ்ரீதருடன்.
அதிர்ந்து போனேன் பழத்தை கொடுத்த பின் அவர் சொன்னதை கேட்டு.
எனக்கு எதற்கு இவ்வளவு பழம். நான் மரியாதைக்காக இரண்டு எடுத்து கொள்கின்றேன். தயவு செய்து பணத்தை எனக்காக விரையம் செய்ய வேண்டாம் என்று கூறி நாங்கள் எடுத்து சென்ற பழங்களை திருப்பி கொடுத்து விட்டார்.
தாயார் பிரசாதம் கொடுத்தபோது காலணியை கழட்டி விட்டு மிகுந்த பவ்யமாக வாங்கி கொண்டார்.
பரம்பரை குணம் என நினைத்து கொண்டேன். நானெல்லாம் நிறைய மாற வேண்டும் என தாயார் ஆண்டாள் இவர் வாயிலாக அறிவுரை கூறியது போலிருந்தது.
புலிக்கு பிறந்தது பூனை ஆகுமா… ????!!!!!
நிறைய தெளிவைப் பெற்றேன்.
நன்கு தெளிந்தேன் இவரை சந்தித்த பிறகு – குறிப்பாக பணிவு என்றால் என்ன என்று அவர் நடவடிக்கையால் வகுப்பு எடுத்தது போல் இருந்தது…..
நாங்கள் நேரம் ஒதுக்கியதற்கு நன்றி சொன்ன பிறகு வாசன் ஐயா அளந்து ஆனால் ஆழமாக அழுத்தத்துடன் பேசினார்.
காகித பூவிற்கே வாசனை தர விரும்புகிறவர்கள் வாழும் தமிழகத்தில் அத்தனை வாசனையையும் தனக்குள் வைத்திருந்தும் அதை வெளிக்காட்டாத குணம் வாசன் ஐயா போல எத்தனை பேருக்கு இருக்கும்????!!!!
அவரை விட்டு பிரியும் போது மனதிற்குள் நினைத்து கொண்டேன்
வாசனின் வாசனை சரியான தருணத்திலே நுகரப்படும் மக்களால்.
அந்த தினம் வெகு விரைவில் வரும் என்கின்ற நம்பிக்கை ஆலமர அடிவேர் போல என் மனதிற்குள் வியாபித்து விட்டது.
பொழுதும் விடியும்
பூவும் மலரும்
வாசனையும் ஒரு நாள் வந்தே தீரும்
அதற்கு தாயாரும், நரசிம்மனும் இவருக்கு என்றும் துணை இருப்பார்கள்
நன்றி திரு.வாசன் ஐயா அவர்களுக்கு.
நன்றி வாய்ப்பை உருவாக்கி கொடுத்த ஹிந்து திரு.ஸ்ரீதர் அவர்களுக்கு…..
சர்வம் கிருஷ்ணார்ப்பணம்
ஆண்டாள் பி.சொக்கலிங்கம்
Share this: