திருவிரிஞ்சிபுரம் மார்கபந்தீஸ்வரர் கோவில் :
வேலூர் மாவட்டத்தில் பாலாற்றங்கரையில் அமைந்த மற்றொரு சிவத்தலம் விரிஞ்சிபுரம். இது ஷீரமாநதி (ஷீரம் என்பதற்கு வடமொழியில் பால் என்று பொருள்) என்றழைக்கப்படும் பாலாற்றின் தென்கரையில் அமைந்துள்ளது.
சுமார் 1300 ஆண்டுகள் பழமையானது.
இத்தலம் தேவாரப்பாடல் பெற்ற தலம் என்ற சிறப்பினை உடையது.
இத்தலத்து வடக்கு பக்க கோபுர வாயில் எப்போதும் திறந்தே இருக்கும். இதன் வழியாக தேவர்கள் தினமும் இறைவனை வழிபடுவதாக செய்தி. திருவாரூர் தேரழகு. திருவிரிஞ்சை மதிலழகு. கோவிலின் மதில் சுவர்கள் உயரமானவை அழகானவை.
தல சிறப்பு :
இறைவன் : மார்க்கபந்தீஸ்வரர், மார்க்க சகாயர், வழித்துணைநாதர்.
இறைவி : மரகதாம்பிகை.
தல மரம் : பனை மரம்
தீர்த்தம் : பாலாறு, சிம்மதீர்த்தம்
இத்தலம் மிக்க பழமையான ஒன்று. அடி முடி காணும் போட்டியில் பொய் கூறிய பிரம்மாவின் தலை கொய்யப்பட்டவுடன் அவர் இறைவியை வேண்ட, இறைவி இத்தலத்து இறைவனை நோக்கி தவமியற்ற பிரம்மனுக்கு அறிவுரை வழங்கினார். பிரம்மனும் இறைவனை நோக்கி தவமியற்ற பிரம்மனின் சாபம் போக்க பிரம்மனை மனிதனாய் பிறக்க வைக்கிறார் இறைவன். பிரம்மன், சிவசர்மன் என்ற பெயரில் மனிதனாய் பிறக்க தக்க தருணத்தில் வந்து இறைவனே பிரம்மனுக்கு உபதேசம் செய்து ஆட்கொண்டார்.
பிரம்ம உபதேச தலம் :
சிவசர்மன் சிறுவனாக இருந்ததால் லிங்கத்திற்கு (லிங்கம் உயரமாக இருந்ததால்) நீருற்ற முடியவில்லை. சிவசர்மனாக பிறந்த பிரம்மன் தன் ஊழ்வினை தவற்றை உணர்ந்து, இறைவனிடம் முடியை காண இயலவில்லை என்று வேண்ட அவரும் தனது முடியை சாய்ந்து கொடுக்கிறார். அண்ணாமலையில் இறைவனின் முடியை காணாத பிரம்மா இத்தலத்தில் தான் இறைவனின் முடியை கண்டார். லிங்கம் சுயம்பு லிங்கமாக சற்று முன்னோக்கி சாய்ந்துள்ளது. பிரம்மா உபதேசம் பெற்ற தலம்.
தல பெருமைகள் :
இத்தலத்து இறைவனை வணங்கிடில் கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்குவர் என்பது திண்ணம். இத்தலத்து இறைவன் சிவசர்மனாகிய பிரம்மனுக்கு உபநயனம் செய்வித்து ஒரு முகூர்த்த காலத்தில் 4 வேதங்கள், 6 சாஸ்த்திரங்கள், 18 புராணங்கள் மற்றும் 64 கலைகளையும் போதித்து ஆட்கொண்டவர். பிரம்மனுக்கு சிவபெருமானே சிவ தீட்சை அளித்த தலம் என்ற சிறப்புடையது இத்தலம். நாமும் இத்தலத்தில் சிவ தீட்சை பெற்றால் அதை விட பெரிய பேறு இவ்வுலகில் இல்லை.
இத்தலத்து இறைவன் அறிவின் சிகரம். இத்தலத்து இறைவன் பிரம்மனுக்கு போதித்து வழிகாட்டியதால் மார்க்க சகாயர் என்றழைக்கப்படுகிறார். இத்தலத்து இறைவன் மிளகு வணிகருக்கு வழித்துணையாக சென்றதால் வழித்துணை வந்த நாதர் என்றும் அழைக்கப்படுகிறார்.
அதிசய பனைமரம் :
இந்த கோவில் வளாகத்துக்குள்ள அதிசய பனைமரம் இருக்கிறது. இம்மரம் ஒரு ஆண்டில் வெண்மையான காய்களையும்இ மறு ஆண்டில் கருமையான காய்களையும் காய்ப்பது தனி சிறப்பு.
தொண்டை மண்டத்தில் பனைமரம் தல விருட்சமாக இருக்கும் தலங்கள் இரண்டு. அதில் ஒன்று விரிஞ்சிபுரம்.
கோயில் முழுவதும் அறிவியல் புதிர்கள்:
பார்க்க மைல் கல் மாதிரி இருக்கும் இந்த கல் உண்மையில் ஒரு காலச்சக்கரம். அதாவது மணி கடிகாரம்.
சூரிய கடிகாரம்
மேன் வெர்சஸ் வைல்டு என்று ஒரு நிகழ்ச்சியில் பியர்ல் கிரில் என்பவர் சொல்லித்தான் இந்த சூரிய ஒளி கடிகாரம் பற்றி நிறைய பேருக்கு தெரிந்திருக்கும். ஆனால் நம் முன்னோர்கள் இந்த சூரிய கடிகாரத்தை வடிவமைத்துள்ளனர்.
அதிசய கிணறு
அறுங்கோண வடிவில் ஆறு பக்கமும் படிக்கட்டுகள் கொண்டு ஒரு பெரிய கிணறு போல இருந்த இது தற்போது புற்கள் வளர்ந்து காணப்படுகிறது.
சிங்கத் தீர்த்தம்
சிங்கமுகம் கொண்ட அமைப்பு வழியாக சென்றால் சிறய பாதை கொண்ட கிணறு ஒன்று வரும். இதுதான் சிங்க தீர்த்தம்.
இங்கு பலவிதமான அற்புதங்கள் இருக்கின்றன. அவற்றை சிலையாக வடிவமைத்து வைத்துள்ளனர். அவற்றின் பொருள் என்னவென்று தெரியவில்லை என்றாலும் கட்டிடக்கலைக்காக கண்டுகளிக்கலாம்.
மண்டபங்கள்
இந்த கோயிலின் அழகே இதன் மண்டபங்கள்தான். அப்படி ஒரு செதுக்கல். காண்போரை எளிதில் மயங்கச்செய்யும் அழகு.
சிற்பக் கலை
யாழி தன் தலையில் தாங்கும் தூண்கள், குதிரை வீரனை உக்கிரத்தோடு தாக்கும் சிங்கம், மதம் கொண்ட யானையுடன் மல்லுக்கட்டும் பாகன் இன்னும் பல என அனைத்தையும் கூர்மையாக கவனிக்கனும்.
மண்டபத்துக்குள் மண்டபம்
இந்த கோயிலின் மண்டபத்துக்குள் இன்னொரு மண்டபம் மாதிரியான அமைப்பு உலகில் எங்கேயும் இல்லையாம். அப்படி ஒரு சிறப்பு இந்த மண்டபத்துக்கு.
கருவறையில் இயற்கையாக எழுந்த ருத்ராட்ச பந்தல் இருக்கு. இது இயற்கையாக எழுந்ததாக கோயில் நிர்வாகம் சொல்லகிறது.
கால இயந்திரத்தின் நுழைவு வாயில் போல அமைந்திருக்கும் மண்டபத்தின் அமைப்பு இன்னும் இங்கு மர்மங்களை குவித்து வைத்துள்ளது. அறிவியலாளர்கள் கூட குழம்பி செல்லும் இந்த கோயில் வேலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.
Share this: