March 01 2018 0Comment

அஞ்சானி மாதவ மலை பனிலிங்கம்

அஞ்சானி மாதவ மலை பனிலிங்கம் :

இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு முக்கிய இந்துக் குடைவரை கோயில்,அமர்நாத் கோயில் ஆகும்.

இக்கோயில் 5,000 ஆண்டு பழமையானதாகவும் இந்து புராண காலத்தில் மிக முக்கியமானதாகவும் கருதப்படுகிறது.

மணாலி: காஷ்மீர் அமர்நாத் கோயில் பனிலிங்கம்போல் இமாச்சல பிரதேசம் சோலாங் பகுதியில் உள்ள கோயிலில் 10அடி பனிலிங்கம் உருவாகியுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் இறுதியில் தொடங்கி ஆகஸ்ட் முதல் வாரம் வரை காஷ்மீரில் உள்ள அமர்நாத் குகைக் கோயிலில் பனிலிங்கம் உருவாவது  விசேஷம்.

லட்சக்கணக்கான பக்தர்கள் பனிலிங்கத்தை தரிசிக்க செல்கின்றனர். அதுபோல் இமாச்சல பிரதேசத்திலும் மற்றொரு பனி லிங்கம் உருவாகியுள்ளது.

மணாலியிலிருந்து 14 கி.மீட்டர் தூரத்தில் சோலாங் பகுதியை அடுத்துள்ள அஞ்சானி மாதவ மலைக் கோயிலில் பனிலிங்கம் உருவாகிறது.

டிசம்பர் மாதத்தில்  உருவாக தொடங்கும் பனிலிங்கம் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் அதிகபட்சமாக 10 அடி உயரம்வரை வளர்கிறது. அஞ்சானி பனிலிங்கத்தை தரிசிக்கவும்  சுற்றுவட்டார பகுதியிலிருந்து மட்டுமல்லாமல் இந்தியா முழுவதிலும் இருந்தும் பக்தர்கள் ஆயிரக்கணக்கில் வருகின்றனர்.

துறவி ஒருவர் இந்த பனிலிங்கத்தை கண்டுபிடித்து இறுதி மூச்சு வரை வழிபட்டார். ஊர் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் உதவியுடன் துறவியே அந்த  இடத்தை பராமரித்தும் வந்தார்.

ஏப்ரல் மாதம் வரை இந்த பனிலிங்கம் காணப்படும். இதுபற்றி அப்பகுதியை சேர்ந்தவர்கள் கூறும்போது,‘மணாலி பகுதியில் இருக்கும் ஒரே சிவன் கோயில் இதுதான். இந்த ஆண்டு சிவராத்திரி தினத்தை விமரிசையாக கொண்டாட ஊர் மக்கள் எண்ணி உள்ளனர்‘ என்றனர்.

Share this:

Write a Reply or Comment

10 + 1 =