கருமாரி அம்மன்

திருவேற்காடு கருமாரி அம்மன் கோவில் !

⭐ தமிழ்நாட்டில் சென்னையிலிருந்து 20கி.மீ. தொலைவில் திருவேற்காட்டில் அமைந்துள்ளது.திருவேற்காடு எனும் பெயருக்கு தெய்வீக மூலிகைகள் நிறைந்த வனம் என்பது பொருளாகும்.

⭐ மூலவர்: தேவி கருமாரியம்மன்

⭐ தல விருட்சம் : கருவேல மரம்

⭐ தீர்த்தம் : வேலாயுத தீர்த்தம்

⭐ பழமை : 500-1000 வருடங்களுக்கு முன்

⭐ ஊர் : திருவேற்காடு

#தல வரலாறு :

⭐ தேவி கருமாரியம்மன் ஒரு நாடோடியாகத் திரிந்ததாகவும் அந்தப் பருவத்தில் அவர் சூரியக்கடவுளுக்குக் குறி சொல்வதற்காகச் சென்றதாகவும், அவரை அடையாளம் காணாத சூரியக்கடவுள் உரிய மரியாதை தராமல் அவரை அவமதித்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.

இதனால் கோபமடைந்த தேவி கருமாரியம்மன் சூரியக்கடவுளின் இடம் விட்டகன்றவுடன் சூரியனின் ஜொலிப்பும் பிரகாசமும் மறைந்து உலகம் இருண்டுவிட்டதாகவும், பின்னர் சூரியபகவன் அம்மனிடம் மன்னிப்பு கேட்டதாகவும், அதற்கேற்ப வாரத்தின் 7ஆவது நாளை தேவிகருமாரித் தினமாகக் கடைபிடிக்கும்படி அம்மன் கேட்டுக்கொண்டதாகவும் புராணக்கதை உள்ளது. எனவே இந்தத் தலத்தின் அம்மனுக்கான சிறப்பு நாளாக ஞாயிற்றுக்கிழமை அமைந்துள்ளது.

#தல சிறப்பு :

⭐ கருமாரியம்மன், மூலஸ்தானத்தில் சுயம்பு வடிவில் காட்சி தருகிறாள்.

⭐ இந்த தலத்தின் அம்மனுக்கான விசேஷ நாளாக ஞாயிற்றுக்கிழமை பின்பற்றப்பட்டு வருகிறது. அந்நாளில் ஏராளமான பக்தர்கள் இக்கோவிலுக்கு வருகை தந்து தங்கியும் செல்கின்றனர். இங்கு மிகப்பெரிய நாகப்புற்று உள்ளது.

#தலப் பெருமைகள்:

இங்கு தேவி கருமாரி அம்மன் சுயம்புவாக, நாகப்புற்றுள் எழுந்தருளியுள்ளார். மேலும் ”மரச்சிலை அம்மன்” என்ற சன்னதி இத்தலத்தில் உண்டு.

மூலவர்: தேவி கருமாரி அம்மன்
பெருமை : சுயம்பு
சிறப்பம்சம் : நாகபுற்று
வழிபாடு : விளக்குபூஜை
தலமரம் : வெள்வேலம்
தீர்த்தம் : புஷ்கரணி
பதிகம் : சம்பந்தர் தேவாரம்
புராணபெயர் : வேலங்காடு

#திருவிழாக்கள் :
ஆடிப் பெருந்திருவிழா
தை மாதம் பிரம்மோற்சவம்
மாசி மகம்
நவராத்திரி
பௌர்ணமி, செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமைகளில் கோயிலில் பக்தர்களின் வருகை பெருமளவில் இருப்பது சிறப்பு
தமிழ் மற்றும் ஆங்கில புத்தாண்டு, தீபாவளி, பொங்கல் ஆகிய சிறப்பு நாட்களில் அம்மனுக்கு சிறப்பு அபிசேக ஆராதனைகள் நடைபெறும் போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர்

Share this:

Write a Reply or Comment

3 × 3 =