அருள்மிகு வராகீசுவரர் திருக்கோயில் வரலாறு
மூலவர் : வராகீசுவரர்
அம்மன் : கவுரீஸ்வரி
தல விருட்சம் : வில்வம்,
புராண பெயர் : வராகேசம்
ஊர் : தாமல்
மாவட்டம் : காஞ்சிபுரம்
ஸ்தல வரலாறு:
ஒரு முறை இரண்யாக்ஷன் என்ற அசுரன், பூமா தேவியைக் கடலுக்கு அடியில் கடத்திச் சென்று மறைத்து வைத்தான். இந்த அசுரன் இரண்யகசிபுவின் சகோதரன் ஆவான். இரண்யாக்ஷனின் இந்த செயலால் பூமியில் வாழ்ந்த உயிர்கள் அனைத்தும் துன்பம் அடைந்தன. உலக இயக்கம் நின்று போனது. தேவர்கள் அனைவரும் மகாவிஷ்ணுவிடம் சென்று பூமியைக் காத்தருளும்படி வேண்டி நின்றனர். இதையடுத்து மகாவிஷ்ணு, வராக (பன்றி) அவதாரம் எடுத்து, கடலுக்குள் சென்று இரண்யாக்ஷனை அழித்து பூமாதேவியை மீட்டுக் கொண்டு வந்தார். அசுரனை அழித்த பின்னரும் வராகரின் அவேசம் அடங்கவில்லை. இதையடுத்து அவர் கடலை கலக்கிக் கொண்டிருந்தார். இதனால் கடலில் வாழ்ந்த உயிரினங்கள் அனைத்தும் துன்பம் அடைந்தன. இதனைக் கண்ட முனிவர்களும், தேவர்களும், மகாவிஷ்ணுவின் கோபத்தை கட்டுப்படுத்தும்படி சிவபெருமானை வேண்டினர்.
சிவபெருமான், வேடன் வடிவில் தோன்றி, வராக அவதாரத்தில் இருந்த மகாவிஷ்ணுவுடன் மோதினார். வராகத்தின் கொம்பை உடைத்து, அவற்றை தனது அணிகலனாக ஆக்கிக்கொண்டான். இதற்கு பிறகு வராக உருவில் இருந்த திருமாலின் கோபம் தணிந்தது. பின்னர் திருமால், சிவபெருமானை வழிபட்டு வேடன் வடிவில் தோன்றி, வராகனை வீழ்த்தி அதன் கொம்புகளை உடைத்து அவற்றைத் தனது அணிகலன் ஆக்கினார். பின்னர் திருமால், இத்தல சிவபெருமானை வழிபட்ட பேறுபெற்றார் என்று காஞ்சி புராணம் கூறுகிறது.
கோயில் சிறப்புகள்:
- வராக அவதாரத்தில் இருந்த மகாவிஷ்ணு, சிவபெருமானை வணங்கி வழிபட்டதால், இத்தல இறைவன் வராகீசுவரர் என்றும், பன்றீசுவரர் என்றும் அழைக்கப்படுகின்றார். இந்த வரலாறு நிகழ்ந்த இடம் தாமல் என்ற திருத்தலமாகும்.
- கருவறையில் மேற்கு முகமாய் இறைவன் வராகீசுவரர் காட்சி தருகிறார். வட்ட வடிவ ஆவுடையாராக சிவலிங்கத் திருமேனியில் இறைவன் ஆசி வழங்குகின்றார். இவரே பன்றீசர், திருப்பன்றீசுவரர், திருப்பன்றீசுவரமுடையார், தாமலுடையார் எனப் பல்வேறு பெயர் களில் அழைக்கப்பட்டவர். இன்று இவரது திருப்பெயர் வராகீசுவரர் என்பதாகும்.
- தெற்கு முகமாக கவுரி அம்மன் சன்னிதி அமைந்துள்ளது. இந்த அம்மன், திருக்கோவில் புனரமைப்பின்போது புதிதாக உருவாக்கியதாகும். எனினும் அன்னை நின்ற கோலத்தில் எழிலோடு காட்சி தந்து அருளாசி வழங்குகின்றார். அம்மனின் எதிரே சிம்ம வாகனத்திற்கு பதிலாக யானை வாகனம் இருக்கிறது. அன்னை சகல சம்பத்துக்களையும் அள்ளித் தருபவள் என்பதால், அன்னையை சம்பத்கவுரி என்றும் அன்போடு அழைக்கின்றனர்.
- மாசி மாத ரத சப்தமி அன்றும், மகத்தன்றும் மாலை வேளையில், இத்தல இறைவனை, சூரியன் தன் ஒளிக்கதிர்களால் தழுவி வழிபடுவது தனிச்சிறப்பு.
- சரபேஸ்வரருக்கு, லிங்கத் திருமேனி இத்தலத்தில் அமைந்துள்ளது. நூற்றியெட்டு லிங்கம் அமைந்துள்ளதும்,
- பல்லவர்கள், சோழர்கள், ராஷ்டிரகூடர்கள், பாண்டியர்கள், விஜயநகர மன்னர்கள் என பல்வேறு மன்னர் களும் போற்றி வழிபட்ட திருக்கோவிலாக தாமல் சிவாலயம் திகழ்கின்றது. மன்னர்கள் காலத்திலேயே இவ்வூர் பல்வேறு போர்களைச் சந்தித்ததை வரலாறு நமக்கு எடுத்துரைக்கிறது.
- ஜெயங்கொண்ட சோழமண்டல தாமல் கோட்டத்தில், தாமர் நாட்டு, தாமநல்லூர் என பழங்காலக் கல்வெட்டு குறிப்பிடுகிறது. தாமல் என்பதற்கு தடாகம் அல்லது குளம் என்று பொருள் கொள்ளலாம். இந்த ஊரில் மிகப்பெரிய பல்லவர் காலத்து ஏரி இருப்பது இதனை உறுதி செய்கின்றது.
- 35 மீட்டர் நீளமும், 30 மீட்டர் அகலமும் கொண்டு இவ்வாலயம் அமைந்துள்ளது. ஆலயத்தினை ஒட்டி அழகிய திருக்குளம் உள்ளது. மேற்கு நோக்கிய 7 நிலை ராஜகோபுரம், அண்மையில் திருப்பணியின் போது அடியார்களால் எழுப்பப்பட்டுள்ளது.
- இத்தலத்தில் கி.பி. 10-ம் நூற்றாண்டைச் சார்ந்த தாமோதரப் பெருமாள் ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயம் கி.பி. 15 மற்றும் 16-ம் நூற்றாண்டில் விஜயநகர மன்னர்களால் புனரமைக்கப்பட்ட செய்தியை வரலாறு கூறுகிறது.
- இவ்வூரில், நரசிம்மர் பூஜித்த நரசிங்கேஸ்வர ஆலயம், திரவுபதி அம்மன் ஆலயம், பொன்னியம்மன் ஆலயம் உள்ளிட்ட பழமையான ஆலயங்களும் அமைந்துள்ளன.
- இத்தலத்தைச் சுற்றி ஜடாயுவுக்கு மோட்சம் தந்த திருப்புட்குழி என்ற திவ்ய தேசம், திருப்பாற்கடல், காவேரிப்பாக்கம் பஞ்சலிங்கேஸ்வரர், அம்பி சிவாலயம் உள்ளிட்ட பழமையான ஆலயங்களும் உள்ளன.
திருவிழா:
பிரதோஷம், ரத சப்தமி
திறக்கும் நேரம்:
காலை 7 மணி முதல் 12 மணி வரை,
மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு வராகீசுவரர் திருக்கோவில்,
தாமல், 631551
காஞ்சிபுரம்
போன்:
9994706276
அமைவிடம்:
சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில சென்னைக்கு மேற்கே 83 கிலோமீட்டர் தொலைவிலும், காஞ்சீபுரத்திற்கு வடகிழக்கே 14 கிலோமீட்டர் தூரத்திலும் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி தாமல் அமைந்துள்ளது.