அருள்மிகு கல்யாணராமர் திருக்கோயில் வரலாறு
மூலவர் : கல்யாணராமர்
தீர்த்தம் : கல்யாண புஷ்கரணி
ஊர் : மீமிசல்
மாவட்டம் : புதுக்கோட்டை
ஸ்தல வரலாறு:
இலங்கையில் இருந்த சீதையை மீட்க வானரப்படை சகிதமாக ராம, லட்சுமணன் சென்றனர். அவர்கள் மீமிசல் பகுதிக்கு வந்தனர். அப்பகுதி மக்கள் ராமருக்கு உதவி செய்தனர். இதற்கு கைமாறாக சீதையை மீட்டு வரும் போது, மீமிசலில் திருமணக் கோலத்தில் ராமர், சீதை ஆகியோர் லட்சுமணனுடன் இங்கு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அந்த இடத்தில் சரபோஜி மன்னர் கல்யாணராமர் சுவாமி கோயிலைக் கட்டி திருப்பணிகள் செய்தார்.
ராவணனிடம் போரிட்டு வெற்றி பெற்ற கல்யாணராமர் எழுந்தருளியிருப்பதால், தினமும் கடலுடன் போராடி தங்கள் வாழ்க்கையை ஓட்டும் மீனவ சமுதாயத்தினரும் தங்களுக்கும், தொழிலுக்கும் பங்கம் ஏற்படாமல் இருக்க இவரை வழிபாடு செய்கின்றனர்
கோயில் சிறப்புகள்:
- கர்ப்பக் கிரகத்தில் ராமர், சீதை, லட்சுமணன் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கின்றனர். அருகில் ஆஞ்சநேயரும் எழுந்தருளியிருப்பது சிறப்பு.
- இக்கோயிலில் உள்ள இறைவன் கல்யாண ராமசாமி, இறைவி மங்களநாயகி மற்றும் அர்ச்சுனவனேசுவரர் இறைவி பிருகத் குஜலாம்பிகை ஆகியோர் உள்ளனர்.
- இக்கோயில் இராமாயணத்தோடு தொடர்புடையதாகக் கருதப்படுகிறது. மகரிஷிகள் மற்றும் முனிவர்களின் வேண்டுகோளை ஏற்று இராமர், கல்யாணராமனாகக் காட்சி தந்த சிறப்பு பெறறது.
- இலங்கை இருக்கும் திசை நோக்கி காட்சியளிக்கும் ராமர் கோயில் கர்ப்பக் கிரகத்தில் ராமர், சீதை, லட்சுமணன் நின்ற கோலத்தில் அருள் பாலிக்கின்றனர். அருகில் ஆஞ்சநேயரும் எழுந்தருளியுள்ளார். இதேவடிவில் உற்சவ மூர்த்திகளும் காணப்படுகின்றனர்.
- இங்கு வரும் குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகளுக்கு, தானியமான கருப்பு உளுந்தை, முகுந்தமாலா என்று கூறப்படும் மந்திரத்தை உச்சரித்து 90 நாட்களுக்கு தேவையான அளவு பிரசாதமாகத் தருகின்றனர். இதனை 90 நாட்கள் சாப்பிடுவதன் மூலம் குழந்தை பாக்கியம் கிடைப்பதாகவும் நம்பிக்கையுள்ளது. அத்துடன் ராமர் சன்னதியில் தவழ்ந்த நிலையில் இருக்கும் ஐம்பொன்னால் செய்யப்பட்ட சந்தானகிருஷ்ணன் விக்ரகத்தை பூஜித்து, குழந்தை பாக்கியம் கோரி வரும் பக்தர்களுக்கு வழங்குகின்றனர்.
திருவிழா:
ராம நவமி, வைகுண்ட ஏகாதசி, அனுமன் ஜெயந்தி, கிருஷ்ண ஜெயந்தி.
திறக்கும் நேரம்:
காலை 7 மணி முதல் 12 மணி வரை,
மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு கல்யாணராமர் திருக்கோயில்
மீமிசல்,
புதுக்கோட்டை.
போன்:
+91 99658- 64048
அமைவிடம்:
புதுக்கோட்டையிலிருந்து அறந்தாங்கி வழியாக மீமிசல் செல்லலாம். தூரம் 68 கி.மீ.,. புதுக்கோட்டை, அறந்தாங்கியிலிருந்து நேரடி பஸ்கள் உண்டு. பஸ் ஸ்டாண்ட் அருகில் கோயில் உள்ளது.