February 04 2024 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் விக்கிரமசிங்கபுரம்

  1. அருள்மிகு சிவந்தியப்பர் திருக்கோயில் வரலாறு

 

மூலவர்        :     சிவந்தியப்பர்

அம்மன்         :     வழியடிமைகொண்டநாயகி

தல விருட்சம்   :     வில்வம்

தீர்த்தம்         :     வாணதீர்த்தம் அருவி (பாணதீர்த்தம்)

ஊர்            :     விக்கிரமசிங்கபுரம்

மாவட்டம்       :     திருநெல்வேலி

 

ஸ்தல வரலாறு:

முன்காலத்தில் சிவந்தியப்பர் என்ற சிற்றரசர் இந்தப் பகுதியை ஆட்சி செய்து வந்தார். சிறந்த சிவ பக்தரான அவர், தன்னுடைய நிர்வாகம் திறம்பட இருக்கவும், மக்களின் வாழ்க்கை சிறக்கவும் தன்னுடைய ஆட்சிக்குட்பட்ட பகுதியில் சிவ ஆலயம் ஒன்று அமைக்க வேண்டும் என்று எண்ணினார். அதன்படி இந்தத் தலத்தில் சிவலிங்கம் ஸ்தாபனம் செய்து கோவில் எழுப்பினார். இதையடுத்து மன்னனின் பெயராலேயே, இறைவனும் அழைக்கப்படலானார். இங்கு வீற்றிருக்கும் இறைவன், அரசர் போல இருந்து மக்களைக் காப்பார் என்று கூறப்படுகிறது. எனவே அரசருக்குச் செய்யும் மரியாதைப் போலவே, சிவலிங்கத்தின் மீது தலைப்பாகை சூட்டி அலங்கரிக்கும் வழக்கம் பழங்காலத்தில் இருந்துள்ளது. ஆனால் இப்போது இந்த முறை வழக்கத்தில் இல்லை.

 

கோயில் சிறப்புகள்:

  • ஆலயத்தில் வீற்றிருக்கும் இறைவன் திருநாமம் ‘சிவந்தியப்பர்’ என்பதாகும். அம்பாளின் திருநாமம் வழியடிமை கொண்ட நாயகி. தலவிருட்சம் வில்வம். தல தீர்த்தம் வாண தீர்த்தம் அருவி (பாணதீர்த்தம்).

 

  • சிவன் சன்னதி நுழைவு வாயிலில் பைரவர், அதிகார நந்தி இருவரும் எதிரெதிரே உள்ளனர்.

 

  • பிரகாரத்தில் ஆறுமுக நயினார் இருக்கிறார். இவருடன் உள்ள வள்ளி, தெய்வானை இருவரும் ஒருவரையொருவர் பார்த்தபடி நிற்பது விசேஷ அம்சம்.

 

  • இத்தலத்தில் சிவன், தலையில் தலைப்பாகை கட்டியபடி காட்சி தருகிறார்.

 

  • அம்பாள் வழியடிமை கொண்டநாயகி தனியே தெற்கு நோக்கியபடி இருக்கிறாள்.

 

  • நடராஜர் தனிச்சன்னதியில் இருக்கிறார்.

 

  • பொதுவாக தெட்சிணாமூர்த்தி இடது கையில் ஏடு அல்லது அக்னியை ஏந்தியபடிதான் காட்சி தருவார். இத்தலத்தில் இவர் தன் இடக்கையை, காலுக்கு கீழ் இருக்கும் நாகத்தின் தலை மீது வைத்தபடி இருப்பது வித்தியாசமான அமைப்பாகும்.

 

  • ஆறுமுக நயினார் (முருகப்பெருமான்) வீற்றிருக் கிறார். இவருடன் வள்ளி – தெய்வானை உள்ளனர். பொதுவாக முருகப்பெருமானுடன் இருக்கும் வள்ளி, தெய்வானை இருவரும் முருகருக்கு வலது பக்கமும், இடது பக்கமுமாக இருந்து பக்தர்களை பார்ப்பது போல் அமைந்திருக்கும். ஆனால் இந்த ஆலயத்தில் ஆறுமுகநயினாருக்கு வலது பக்கமும், இடதுபக்கமுமாக இருக்கும் வள்ளி, தெய்வானை இருவரும் ஒருவரை ஒருவர் நேருக்கு நேர் பார்த்துக்கொள்ளும்படியாக நின்றபடி அருள்பாலிக்கின்றனர். இதுவேறு எங்கும் இல்லாத சிறப்பம்சமாகும்.

 

  • இத்தலத்தின் அருகில் உள்ள பாபநாசம் தளத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ உலக அம்மையின் பேரருளைப் பெற்ற ஸ்ரீ நமச்சிவாய கவிராயர் வாழ்ந்த புண்ணிய தலமாக இந்த தலம் விளங்குகின்றது.

 

  • இந்த திருக்கோயிலில் திருவனந்தல், கால சந்தி, சாயரட்சை, அர்த்த சாம பூஜை, நான்கு கால பூஜை என அனைத்து பூஜைகளும் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசித் திருவிழா 10 நாட்கள் கொடி ஏற்றப்பட்டு பத்து நாட்களும் சுவாமி அம்பாள் திருவீதி உலாவும் நடைபெறுகிறது.

 

திருவிழா: 

புரட்டாசியில் பிரம்மோற்ஸவம், ஐப்பசியில் திருக்கல்யாணம்.

 

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 9 மணி வரை,

மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்

 

முகவரி:  

அருள்மிகு சிவந்தியப்பர் திருக்கோயில்,

விக்கிரமசிங்கபுரம்- 627 425,

திருநெல்வேலி மாவட்டம்.

 

போன்:    

+91- 4634 – 223 457.

 

அமைவிடம்:

திருநெல்வேலியில் இருந்து 45 கி.மீ., தூரத்தில், விக்கிரமசிங்கபுரம் உள்ளது. பாபநாசம் பஸ்களில் சென்று மூன்று விளக்கு பஸ் ஸ்டாப்பில் இறங்கி கோயிலுக்குச் செல்லலாம்.

 

Share this:

Write a Reply or Comment

5 × 4 =