அருள்மிகு நாகேஸ்வரர் திருக்கோயில் வரலாறு
மூலவர் : நாகேஸ்வரர், நாகநாதர்
அம்மன் : பெரியநாயகி, பிருஹந்நாயகி
தல விருட்சம் : வில்வம்
தீர்த்தம் : மகாமகக்குளம், சிங்கமுக தீர்த்தம் (கிணறு)
புராண பெயர் : திருக்குடந்தைக் கீழ்க்கோட்டம்
ஊர் : கும்பகோணம்
மாவட்டம் : தஞ்சாவூர்
ஸ்தல வரலாறு:
ஒரு காலத்தில் பூமியை நாகங்களின் தலைவனான ஆதிசேஷன் தாங்கிக்கொண்டிருந்தான். மக்கள் செய்த பாவங்களால் அவனால் பூமியை சுமக்க இயலவில்லை. உடல் சோர்வு ஏற்பட்டது. எனவே திருக்கயிலாயம் சென்று சிவபெருமானை வேண்டினான். உலகை தாங்குவதற்கு உரிய தியை தரும்படி அவரிடம் கேட்டுக்கொண்டான். ஆதிசேஷனின் முறையீட்டுக்கு மனம் இரங்கிய சிவபெருமான், எவ்வளவு காலமானாலும் ஒரே ஒரு தலையினால் இந்த உலகை தாங்கும் தியை தருவதாக உறுதியளித்தார். பரிபூரண தி பெற்ற ஆதிசேஷன் பிரளய காலத்தில் அமுத கும்பத்திலிருந்து வில்வம் விழுந்த இடமான கும்பகோணத்தின் ஒரு பகுதிக்கு வந்தான். அங்கு லிங்கம் பிரதிஷ்டை செய்து பூஜித்தான். நாகராஜன் பூஜித்ததால் இறைவனுக்கு நாகேஸ்வரர் என்ற பெயர் ஏற்பட்டது.
ஒரு காலத்தில் வெள்ளத்தில் மிதந்துவந்த அமுத கும்பத்தின் உச்சியிலிருந்த வில்வம் தவறி விழுந்தது. அந்த இடம் வில்வவனம் என போற்றப்பட்டது அவ்விடத்தில் இக்கோயில் அமைந்ததால் சுவாமிக்கு வில்வனேசர் , பாதாள பீஜநாதர் ஆகிய பெயர்களும் வழங்கப்படுகின்றன. மடந்தை பாகர், செல்வபிரான் என்றும் சுவாமிக்கு பெயர்கள் உண்டு.
கோயில் சிறப்புகள்:
- முதலாம் ஆதித்த சோழனால் தொடங்கப்பட்டு முதலாம் பராந்தக சோழன் ஆட்சியில் முடிக்கப்பட்டது. கோயில் சுவர்களில் உள்ள கல்வெட்டுகள் பிற்கால சோழர், பாண்டிய மற்றும் விஜய நகர நாயக்கர் மற்றும் தஞ்சாவூர் மராட்டிய மன்னர்களின் பல்வேறு மானியங்கள் மற்றும் பங்களிப்புகளைக் குறிப்பிடுகின்றன.
- இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
- இத்தலத்தில் சித்திரை மாதத்தில் சூரியன் ஒளி 11, 12, 13 தேதிகளில் லிங்கத்தின்மீது படும்.
- நாகராஜாக்கள் வழிபட்ட தலமாதலின் ‘திருநாகேச்சுரம்’ எனப் பெயர் பெற்றது. நாகராஜன் ஒரு சிவராத்திரியில் நான்கு யாமங்களில் முதல் யாமத்தில் வில்வவனமான குடந்தைக் கீழ்க்கோட்டத்திலும் இரண்டாம் யாமத்தில் சண்பக வனமான இத்திருநாகேச்சரத்திலும், மூன்றாவதில் வன்னி வனமான திருப்பாம்பரத்திலும், நான்காம் யாமத்தில் புன்னைவனமான நாகைக்காரோணத்திலும் வழிபட்டுப் பேறு பெற்றான். இந்த நான்கு தலங்களும் நாகராசன் பெயராலேயே வழங்கப்படுதல் கண்கூடு.
- சிவபெருமானை மட்டுமே வணங்கி வந்த பிருங்கி முனிவரைக் கண்டு வெகுண்ட பார்வதி தேவி, இறைவனைக் குறித்து அர்த்தநாரீசுர வடிவம் வேண்டி இத்தலத்தில் செண்பக மரத்தடியில் கடுந்தவம் புரிந்தார்.
- நந்தி சேரும் திருநாகேச்சரம் என்று தேவாரம் பேசுகின்றது.
- ஆதிசேஷன், தக்ஷன், கார்க்கோடகன் (மூவரும் நாகராஜாக்கள்), கௌதமர், நந்தி, நளன், பராசரர், பகீரதன்முதலியோர் வழிபட்டு பேறு பெற்றனர்.
- சூரியன் இங்கே வழிபட்டுப் பேறுபெற்றார்.
- விநாயகர் வழிபட்டுக் கணங்களுக்கு அதிபதியானார்.
- கௌதமர் வழிபாடு செய்து அகலிகையை அடைந்தார்.
- நளன் இங்கே வணங்கி, இழந்த தன் மனைவியைப் பெற்றான்.
- பராசர முனிவர் வழிபட்டு பாவம் நீங்கினார்.
- பாண்டவர்கள் வழிபட்டு இழந்த தம் செல்வத்தை மீண்டும் பெற்றதோடு இப்பெருமானுக்குக் கார்த்திகை மாத விழாவினையும் நடத்தினர்.
- வசிட்ட முனிவர் வழிபட்டு நலம் பெற்றார்.
- ஒரு குருவியின் கட்டளைப்படி இந்திரன் இங்கே வழிபட்டு மேன்மையுற்றான்.
- பிரமனும், பகீரதனும் வழிபட்டுப் புனிதமடைந்தனர்.
- சித்திர சேனன் எனும் மன்னன் வைகாசியில் விழா நடத்தி, வழிபட்டு நற்புத்திரனை அடைந்தான்.
- ஒரு சிவயோகி கோயிலிலுள்ள புற்பூண்டுகளைப் போக்கிப் புனிதரானார்.
- சௌனக முனிவர் காம மயக்கத்திற்குக் கழுவாய் இங்கே பெற்றார்.
- சேக்கிழார் திருப்பணி செய்த பெருமையுடையது. அவர் மிகவும் நேசித்த தலம். இதனால் தம் ஊரான குன்றத்தூரில் இப்பெயரில் ஒரு கோயிலைக் கட்டினார்.
- காலையில் குடந்தைக் கீழ்க்கோட்டம், நண்பகலில் திருநாகேச்சுரம், மாலையில் திரும்பாம்புரம் என்று ஒரே நாளில் வழிபடுவது விசேஷம் என்பர்.
திருவிழா:
மகாமகத்தன்று சுவாமி இங்கிருந்து மகாமக குளத்திற்கு தீர்த்தவாரிக்கு செல்வது மிகப்பெரிய விசேஷம். இதுதவிர நவராத்திரி, திருவாதிரை, பங்குனி பெருவிழா ஆகியவைவிசேஷம்.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 12.30 மணி வரை,
மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு நாகேஸ்வரர் திருக்கோயில், (குடந்தைக் கீழ்க்கோட்டம்) கும்பகோணம் – 612 001.
தஞ்சாவூர் மாவட்டம்.
போன்:
+91- 435-243 0386.
அமைவிடம்:
கும்பேஸ்வரர் கோயிலின் கிழக்கு திசையில் கோயில் அமைந்துள்ளது.