விதையை_நோக்கி….
தமிழ் வாழ
தமிழர்கள் வெல்ல
தமிழர் பண்பாடு தழைத்திட
உலகம் முழுவதும் வாழும்
தமிழர்களின் பிரதிநிதிகள்
(ஏறத்தாழ 80 நாடுகளில் இருந்து)
அகண்டத் தமிழ் உலகம்
என்கின்ற பெயரில்
கோவையில் 2024 ஜனவரி முதல் வாரத்தில் நடக்க இருக்கின்ற மாநாட்டில் பங்கேற்க இருப்பதால்
அகண்ட தமிழ் உலக மாநாட்டின்
முதற் கட்ட ஆயத்த பணிகளுக்காக
சென்னையில் இருந்து கோவையை நோக்கி நீண்ட நெடிய பயணம் இன்று (20/05/2023)
வழியில் பெருந்துறை புறவழி சாலையில் அமைந்துள்ள அருக்காணி அம்மன் மெஸ்ஸில் காலை சிறப்பான கிராமத்து சுவையுடன் சைவ உணவு
பார்த்து ரசிப்பதற்கும், தெரிந்து கொள்வதற்கும் பல ஆயிரம் விஷயங்கள் பயணங்களில் மட்டுமே கிடைக்கும் என்பதற்கு இந்த பயணமும் விதிவிலக்கல்ல
அந்த வகையில் எப்பொழுதெல்லாம் ந(க)ரத்திலிருந்து
கிராமங்கள் வழியாக பயணப்படுகிறேனோ அப்பொழுதெல்லாம் மனம் மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கும்
காரணம் கிராமத்தில் மனிதர்கள் மட்டும் சந்தோஷமாக வாழவில்லை
கிராமத்து ஆடு மாடுகளும் சந்தோஷமாக வாழ்கின்றன
மொத்தத்தில்
கிராமத்தில் உள்ள மக்கள் வாழ்கிறார்கள்…
நகரத்தில் உள்ள மக்கள் பிழைக்கிறார்கள்…
என்பதை ஒவ்வொரு முறையும் கிராமங்கள் உணர்த்திக் கொண்டே இருக்கின்றன.
இந்தப் பெரிய உண்மையை நன்கு உணர்ந்து புரிந்து கொண்டதால்
சோத்துப் பிழைப்புக்காக இன்று நகரத்தில் இருக்க வேண்டிய சூழ்நிலை இருந்தாலும்
வெகு விரைவில் வாழ்வதற்கான முயற்சியில் வெற்றியடையும் வரை என் பயணம் தொடரும்/ தொடர்கின்றது
முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்