நிம்மதியை தேடிய
பயணத்தின் நடுவே சற்று
சிறு பிள்ளைகளிடம்
வயது மறந்து
இடம் மறந்து
விளையாடும் சுகம்
சொல்லி மாளாது….
இடம் கோவில்குளம் திருநெல்வேலி
புது விளக்குமாறு சுத்தமாகப் பெருக்கும் என்றாலும் பழசுக்கு தான் மூலை முடுக்கெல்லாம் நன்கு பரிச்சயமாயிருக்கும் என்பதை நிரூபிக்கும் வகையில் தான் ஒவ்வொரு முறை என் கிராமத்திற்கு நான் செல்லும்போது கிடைக்கும் அனுபவங்கள் அதை மெய்ப்பித்துக் கொண்டிருக்கின்றன
நகரத்தின் சொகுசு வாழ்க்கையை விட கிராமத்தின் யதார்த்த வாழ்க்கை நம் மனதுக்கு ஏனோ மிகவும் பிடித்தமாக இருக்கின்றது….
சடையாண்டி தாத்தாவும்
லட்சுமி ஆச்சியும்
லாலா கடை அல்வாவும்
பாபநாசம் தண்ணீரும்
குற்றால சாரலும்
அம்பை பலசாறு கடைகளும்
பெரிய வண்டி மரித்த அம்மனும்
கல்யாணி தியேட்டரும்
கம்பி விளக்கும்
செம்பருத்தி பூவும் என
எங்கள் ஊருக்கான அடையாளங்கள்
நினைக்கும் போது மனதை அசைத்துப் பார்த்து விடுகின்றன…
பார்க்கின்ற அத்தனை பேரையும் மாமாவாகவும் அத்தையாகவும்
தாத்தாவாகவும் ஆச்சியாகவும்
இனி வேறு எந்த உலகத்தில்
பார்க்க முடியும்
நகரத்தை விட்டு நகர மறந்த
நான் கிராமத்தை நோக்கி
நகரமே (நரகமே) வேண்டாம் என்று….
முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
https://www.youtube.com/shorts/Y22QmhggQhU
Share this: