ஸ்ரீ
உங்கள் வாஸ்து அனுபவத்தில் எந்த செயலை மன்னிப்பே இல்லாத மிகப் பெரிய பாவ செயலாக சொல்வீர்கள்?
என்னுடைய வாஸ்து அனுபவத்தில் 2 செயல்களை மன்னிப்பே இல்லாத பெரிய பாவ செயல்களாக என்னால் குறிப்பிட முடியும் என்றால் அது
- வட்டி தொழில் மற்றும்
- கலப்பட தொழிலை தான் அவ்வாறு சொல்ல முடியும்.
பெற்ற தாயை கொன்றவனுக்கு கூட பாவ மன்னிப்பு உண்டு. ஆனால் வட்டித் தொழில் செய்பவனுக்கும், கலப்படம் செய்பவனுக்கும் எக்காலத்திலும் பாவ மன்னிப்பே கிடையாது.
இந்த இரண்டு தொழில் செய்வோருக்கும் வாஸ்து என்றுமே வேலை செய்யாது.
இந்த இரண்டு தொழில் சம்பந்தப்பட்டவர்களையும் அறவே நம் அருகில் வர விடாமல் ஒதுக்கி புறம் தள்ளுவது நம்முடைய மொத்த வாழ்வுக்கே நன்மை பயக்கும்.
இது போன்றவர்களை நம்முடன் வைத்து கொள்வது என்பது நம் சவபெட்டிக்கு நாமே அடித்துக்கொள்ளும் கடைசி ஆணியாகும் என்பதை நினைவில் வைத்து கொள்ளுமாறு அன்புடன் கூறிக் கொள்கின்றேன்.
திருவே தஞ்சம்; திருவரங்கனே தஞ்சம்;
தஞ்சமடைந்த நம் ராமாநுஜனே தஞ்சம்
ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!!
நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!!
வாழ்க வளமுடன்
என்றென்றும் அன்புடன்
ஆண்டாள் பி. சொக்கலிங்கம்