வஸ்து vs வாஸ்து: –

ஸ்ரீ

Vastu

என்றும் அன்புடன்

சமீபத்தில் திருசெங்கோட்டிற்கு வாஸ்து பணிக்காக செல்ல சந்தர்ப்பம் கிடைத்தது. என் வாழ்க்கையில் சில, பல மகிழ்ச்சியான தருணங்களில் ஒன்றாகி போனது இந்த திருசெங்கோடு பயணம்.என் வாழ்நாளில் ஓர் வீட்டிற்கு வாஸ்து பணிக்காக சென்று ஏறத்தாழ  4 ¼ மணி நேரம் செலவிட்டது திருசெங்கோட்டில் தான் இருக்கும்.

பொதுவாக என்னை வாஸ்து பார்க்க கூப்பிட்டுவிட்டு வீட்டில் உள்ளவர்கள் தான் அதிகம் பேசுவார்கள். மாறாக இந்த வீட்டில் உள்ள மனிதர்கள் என்னை நிறைய பேச வைத்து விட்டார்கள். இந்த வீட்டில் உள்ள மனிதர்களின் வாழ்வியல் முறை என்னை நிறைய பேச வைத்து விட்டது.

4 ¼ மணி நேரம் செலவிட்டு  வீட்டை சுற்றி பார்க்கும் அளவிற்கு வீடு ஒன்றும் பெரிய வீடல்ல. சிறிய வீடாக இருந்தாலும் இந்த வீட்டில் வசிப்பவர்களின் மனம் பெரியது. இந்த வீட்டை பெங்களூரிலிருந்து 10 முறை வாஸ்து நிபுணர் ஒருவர் வந்து இருந்து கட்டி கொடுக்கின்றார்; இருந்தாலும் பல இழப்புகள் காரணமாக அதை சரி கட்ட அதன் பின் சென்னை பிரமிடு வியாபாரி ஒருவர் வீட்டிற்கு எந்த விதத்திலும் உதவாத பிரமீடுகளை 1 ½ லட்சத்திற்கு வியாபாரம் செய்து விட்டு போகின்றார். பிரமீடுகளை வாங்கி உபயோகப்படுத்தி பார்த்த பின் தானே அது எந்த விதத்திலும் வேலை செய்யாது என்பது வாங்கியவர்களுக்கு தெரிய வரும். அந்த விதத்தில் அது வாங்கியவர்களுக்கு தெரிய வந்த பின் சென்னையை சேர்ந்த சித்தர் வழி வந்தவர் என தன்னை கூறி கொள்ளும் ஒரு வாஸ்து விஞ்ஞானியின் தொடர்பு இவர்களுக்கு கிடைகின்றது.அவரும் வீட்டை இடிக்காமல், உடைக்காமல் வீட்டிற்குள் தகடுகள் புதைத்து, வீட்டை Energize செய்து, அவர்களுடைய பிரச்சினைகளை சரி செய்து  தருவதாக ரூ.5 லட்சம் பேரம் பேசுகின்றார். அந்த நேரத்தில் ஏதோ ஒரு வகையில் என்னுடைய பெயர் அவர்களுக்கு தெரிய வருகிறது. என்னை நம்பி அழைக்கின்றார்கள். சென்றேன். சந்தித்தேன். சந்தித்த பின் நான் அவர்களிடம் தெளிவாக  சொன்னது: –

  • என் வாழ்க்கையில் நான் இதைவிட சிறந்த கூட்டுக் குடும்பத்தை பார்க்கவில்லை. எப்போதும் இப்படியே ஒற்றுமையாக இருக்கவும் என அவர்களிடம் கூறி, அவர்கள் வீடு கட்டிய இடத் தேர்வு  சரியாக இல்லாவிட்டாலும் சிறிய செலவீனங்களுடன் கூடிய சிறிய மாற்றங்களை குறித்து கொடுத்தேன்.
  • உங்களின் பெண் குல தெய்வம் உங்கள் பக்கத்திலேயே இருக்கின்றது. நீங்கள் அதனிடம் சரணாகதியாகும் பொது எல்லாம் சரியாகி விடும்…
  • வீட்டில் உள்ள 5 பெண்களை குறிப்பிட்டு இவர்களை எல்லாம் பத்திரமாக, சந்தோஷமாக பார்த்து கொள்ளவும். இவர்கள் சிரித்தால் வீடு சிரிக்கும்; வீடு செழிக்கும்; வீட்டில் சந்தோஷம் கொப்பளிக்கும்.
  • நன்றியோடு இருங்கள்
  • நிறைய உதவி புரியுங்கள்

சொல்லி முடித்து கிளம்பிவிட்டேன் – ஒரு திருப்தியான வேலை முடித்த சந்தோஷத்துடன்.

மஹா ஆண்டாள் வாஸ்து குடும்பத்திற்காக: –

நாம் மஹா ஆண்டாள் வாஸ்துவை கற்று கொண்டவுடன் செய்ய வேண்டிய விஷயங்கள்: –

  1. வாஸ்துவை வியாபாரம் ஆக்குபவர்களை மக்கள் மூலமே ஒதுக்க வைப்போம்.
  2. பரிகாரம் இல்லாத, எளிமையான வாஸ்துவை உலகம் முழுவதும் எடுத்து செல்வோம்.
  3. நல்ல வாஸ்து என்றால் மஹா ஆண்டாள் வாஸ்து நிபுணர்கள் தான் என அனைவரின் நினைவிற்கும் வர வேண்டும் என்கின்ற அளவிற்கு உழைப்போம்.
  4. பயிற்சி பெற்ற பின் அவரவர் பாதையில் தனியே பயணிப்போம். நேரம் கிடைக்கும் பொது கூடி மகிழ்வோம்.
  5. அனைவரும் உடனடியாக தனி தனியே website தொடங்கி ஒரே கருத்தை ஊர் முழுவதும் அறிய முற்படுவோம்.

ஏற்கனவே வாஸ்து பயிற்சி பெற்றவர்களான –

ஈரோடு திரு.ஜெகன்னாதன் மலேசியா மக்களுக்கு வாஸ்து பார்த்து கொண்டிருக்கின்றார்; இந்த வாரத்தில் இருந்து ஒவ்வொரு புதன்கிழமை இரவும் 7:30 மணிக்கு Live ஆக Lotus TV – யில் பேச உள்ளார்.

சேலம் அன்பழகன், சென்னை ராஜ்குமார், ஆட்டையாம்பட்டி பழனியப்பன், கோவில்பட்டி சபரிநாதன், தருமபுரி அமிர்தலிங்கம், தருமபுரி சக்திவேல், திருவண்ணாமலை விஜய் விமந்தன், பொள்ளாச்சி கதிரவன், சென்னை சுப்பிரமணியன், திருநெல்வேலி நாசர், செய்யாறு குப்புசாமி, பெரம்பலூர் சண்முகம் ஆகியோரின் பணி மிக சிறப்பாக அனைவரும் பெருமை படத்தக்க வகையில் உள்ளது.

மற்றவர்களுக்கும் இதே கடின உழைப்புடன் புத்திசாலித்தனமாக செயல்பட்டால் மாற்றத்தை நமக்குள் முதலில் கொண்டு வந்து, பின் இந்த மண்ணிற்கும் கொண்டு வர முடியும் என தீர்மானமாக நம்புகின்றேன்.

எல்லாம் சரியாக இருக்கும் என்ற நம்பிக்கையுடன் வாஸ்து பயிற்சி வகுப்பு – III நிறைவு விழாவில் மதுரையில் சந்திப்போம்.

பயிற்சி பெற்ற அனைவரும் 100 வீடுகளின் தகவலுடன் வர வேண்டும் என்பதை நினைவில் நிறுத்தி கொள்ளுமாறு அன்புடன் கேட்டு கொள்கின்றேன்

 

திருவே தஞ்சம்; திருவரங்கனே தஞ்சம்;
தஞ்சமடைந்த நம் ராமாநுஜனே தஞ்சம்

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!!
நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!!

வாழ்க வளமுடன்
என்றென்றும் அன்புடன்
ஆண்டாள் பி. சொக்கலிங்கம்

Share this:

Write a Reply or Comment

5 × 5 =