கோதையும் கோவிந்தனும்

ஸ்ரீ

ஆண்டாள் பாதம்

என்றும் அன்புடன்

ஆண்டாளுக்கு அடுத்து எனக்கு, என்னுடைய வாழ்க்கையில் மிக முக்கியமானவர்கள் என சிலர் உண்டு. அதில் மிக, அதி முக்கியமானவர் என் நண்பர், சகோதரர் மண்ணச்சநல்லூர் திரு.திருகோவிந்தன் அவர்கள்.

திருச்சி மண்ணச்சநல்லூரை சேர்ந்த இவர் மிகப்பெரிய அளவில் தரமான முறையில் அரிசி வியாபாரம் செய்து கொண்டிருப்பவர்.

நான் ஆண்டாளுக்கு உழைத்ததை விட இவர் உழைத்த உழைப்பின் அளவு இமயமலை உயரம்.

அது எனக்கு மட்டும் புரிந்த உண்மை….

இவர் நல்ல மனிதர்; சிறந்த பண்பாளர்;

என்னை போன்றே ஆண்டாளே கதியென்று இருப்பவர். அப்படிப்பட்ட இவருக்கு கண் பாதிப்புக்குள்ளாகி மிகவும் சிரமப்பட்டு கொண்டிருக்கின்றார்.

குணம் வேண்டி….

உங்கள் எல்லோரிடமும் நான் மிகவும் வேண்டி விரும்பி கேட்டுக் கொள்வது என்னவென்றால் உங்கள் பிராத்தனையில் இவருக்கும் ஒரு இடம் கொடுத்து இவர் நல்ல அளவில், பூரண குணமடைய ஆடி பூரமான ஆகஸ்ட் 16 அன்று ஆண்டாள் கோவிலுக்கு நீங்கள் வரும்போது ஆண்டாளிடம் விண்ணப்பிக்க கேட்டுக் கொள்கின்றேன்.

இவருக்கு பணமோ, பொருளோ பிரச்சினை என்றால் கொடுத்து உதவிடமுடியும்.

கண் அல்லவா இங்கு பிரச்சினை… அவருடைய கண் பிரச்சினை சரியாக நாம் அனைவரும் ஆண்டாளிடம் முறையிட்டு நம் கூட்டுப் பிராத்தனை மூலம் தீர்வு காண விரும்புகின்றேன்.

நம் கூட்டுப் பிராத்தனை இவரை குணமாக்கும் என மனதார திடமாக, உறுதியாக நான் நம்புகின்றேன்.

ஆண்டாளிடம் ஒரு சிறிய வேண்டுகோள்: –

உன்னைத் தவிர வேறு உலகம் அறியா என்னுடைய மரணம் தான் ஒருகால் இவரை வாழவைக்கும் என்றால் நாளை என்கின்ற ஒன்று எனக்கு இல்லாமலும், விடியாமலும் போகட்டும் என் திருகோவிந்தனுக்காக….

உன்னை நம்புகின்ற, உன்னை மட்டுமே நம்பும் நல்லவர்களை தயவு செய்து காப்பாற்று….

காப்பாற்றியதற்கு நன்றி…

திருவே தஞ்சம்; திருவரங்கனே தஞ்சம்;
தஞ்சமடைந்த நம் ராமநுஜனே தஞ்சம்

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!!
நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!!

வாழ்க வளமுடன்
என்றென்றும் அன்புடன்
ஆண்டாள் பி. சொக்கலிங்கம்

Share this:

Write a Reply or Comment

one + 7 =