June 30 2022 0Comment

வேதாத்திரியம் கற்றுக் கொடுத்த ரகசியம்

வேதாத்திரியம் கற்றுக்
கொடுத்த ரகசியம்

பிரபஞ்சம் என்றால் என்ன?
இயற்கை

இயற்கைக்கு கடவுள் என்றும் பெயர் உண்டு.

அப்போ முருகன், சிவன் பெருமாள், அல்லா, ஏசு எல்லாமே கடவுளா அல்லது பிரபஞ்சமா????

அந்தந்த காலகட்டத்தில் பிரபஞ்சத்தை பக்தி மார்க்கத்தில் வழியே மக்களுக்கு எளிமையாக புரிய வைக்க, தன்னை உணர்ந்தோர் ஏற்படுத்திய தெய்வ குறியீடுகள் என்று எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஞான மார்க்கத்தில்
வான்காந்த களம்
என்று கூறுவார்கள்
அதன் பின்னர் தான்
ஜீவகாந்தம்.

இரண்டுமே ஒன்றுதான்.

இருக்கும் இடம் தான்
வேறு வேறு என்பதே உண்மை.

நாம் கோவிலில் போய்
தெய்வமே எனக்கு இதை
கொடு என்பதும்
பிரபஞ்சமே இதைக்
கொடு என்பதும்

அடிப்படையில் வெவ்வேறாக
தெரிந்தாலும் இரண்டு
வேண்டுதலும் ஒன்றுதான்.

குறியீடுகள்தான் வேறு வேறு
என்பது தான் அதனுள் ஒளிந்திருக்கும் சூட்சுமம்.

மழைத்துளி நீ என்றால்
கடல் தான் பிரபஞ்சம் @ கடவுள்
இரண்டுமே நீ(ர்)தான்…..

கடல் நீர் ஆவியாகி மேகமாகி மழையாக மாறுகிறது.
நீரை கடல், மேகம், குளம், ஆறு
என்று இடத்திற்கேற்றவாறு
பல்வேறு பெயரில் குறிப்பிடுகிறோம்.

வெவ்வேறு பெயராக
வெவ்வேறு இடங்களில்
அழைக்கப்பட்டாலும் மேற்சொன்ன அனைத்திலும் ஒளிந்திருப்பது
நீர் தான். எனவே அனைத்துக்கும் அடிப்படை நீர் தான் என்பதை கவனத்தில் கொள்ளவும்…

அதுபோல பிரபஞ்சம்
என்பது கடல்
நாம் பிரபஞ்சத்தில்
ஒரு துளி

இன்னும்
ஆழமாக சென்றால்
பிரபஞ்சம் வான்காந்தம்.
நாம் ஜீவகாந்தம்.

பிரபஞ்சத்திடம் வேண்டுவதும் நமக்குள் நாமே
வேண்டிக் கொள்வதுதானா
என்றால் விடை:
ஆம்!!!!

பிரபஞ்சத்திற்கு நாம் சொல்லும்
நன்றி நன்றி என்பது நமக்காக
எப்படி வேலை செய்கின்றது???

உங்களுக்கு யாராவது நன்றி என்று சொல்லும்போது நீங்கள் என்ன நினைப்பீர்கள் என்பதை கவனத்தில் எடுத்துக் கொள்ளுங்கள்.நன்றி என்கிற அந்த மந்திர வார்த்தையை கேட்ட பிறகு உங்களுக்கு ஏற்பட்ட மாற்றத்தில் தான் ஒளிந்து கொண்டு இருக்கின்றது உங்களுக்கான பதில்.

ஒருவர் வேண்டியது ஜீவகாந்த சுழற்சியில் பதிந்து,
எண்ணங்களாக, பிரபஞ்சமாகிய
வான் காந்த முழுவதும் பரவி,
ஒரு செயலை செய்ய தகுந்த சூழ்நிலையை ஏற்படுத்துகிறது

அந்த சூழ்நிலை மாற்றத்தை உருவாக்குகின்ற ஒரே விஷயம் நன்றி என்கின்ற ஒத்தை
வார்த்தை தான் என்பது மிகக் கூர்மையாக கவனிக்க வேண்டிய விஷயம்.

இதே போல் தான் கோவிலில்
நாம் வேண்டுவதும் …..
சொற்கள் மட்டும்
வேறு அவ்வளவுதான்…

பிரபஞ்சத்திடம் வேண்டுவது எல்லாம் நிறைவேறுமா?????

கடவுள் @ பிரபஞ்சம் ஒன்றும் ஏமாளி அல்ல.

உங்கள் கர்ம வினைக்கேற்ப
என்ன விளைவோ
அதைத்தான் கொடுப்பார்.

கூட்டியும் கொடுக்கமாட்டார்.
குறைத்தும் கொடுக்க மாட்டார்.
செயல் விளைவு தத்துவப்படி…

கடைசியில் பார்த்தால் எல்லாமே
நம் எண்ணங்களால் தான்
என்பது உங்களுக்கு புரியும்.
நல்லது நினைத்தால்
நல்லது நடக்கும்.
கெடுதல் நினைத்தால்
கெடுதல் நடக்கும் என்பதை அனைவரும் நினைவில்
நிறுத்திக் கொள்ள வேண்டும்

நிறைவாக

எண்ணத்தின் வெளிப்பாடே
எல்லா செயல்களும் என்பதால்
நேரத்தை வீணடிக்காமல் இனிமேலாவது
எண்ணத் தூய்மையில்
கவனம் செலுத்துவோம்….

என்றும் அன்புடன்

டாக்டர் ஆண்டாள் P.சொக்கலிங்கம்

Share this:

Write a Reply or Comment

18 − four =