கடவுள் எனும் முதலாளி
கண்டெடுத்த தொழிலாளி
கடவுள் எனும் முதலாளி
கண்டெடுத்த தொழிலாளி…..
காய்கறி,பால் மற்றும் மளிகை பொருட்களின் விலை
ஏறி விட்டது என பொங்குபவர்களுக்கான
பதிவு…!!!
தக்காளி விலை ஏறிவிட்டது,
வெங்காயம் விலை ஏறிவிட்டது,
பருப்பு விலை ஏறிவிட்டது,
பால் விலை ஏறிவிட்டது,
இவைகள் தான் அனைத்து வகையான மக்களின் தினசரி குமுறல்களாக இன்றும் இருந்து கொண்டிருக்கின்றது
நான் தெரியாமல் கேட்கிறேன்…
என் மகனை என்ஜினியர் ஆக்குவேன்
என் மகனை டாக்டர் ஆக்குவேன்
என் மகனை கலெக்டர் ஆக்குவேன்
என் மகனை வக்கீல் ஆக்குவேன்
என்று சபதம் மேற்கொள்ளும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை விவசாயி ஆக்குவேன் என்று என்றும் ஏன் கூறுவதில்லை????
COLGATE விலை ஏறலாம்
HAMAM SOAP விலை ஏறலாம்
PEPSI விலை ஏறலாம்
CINEMA TICKET விலை ஏறலாம்
KFC CHICKEN விலை ஏறலாம்
CHICKEN BRIYANI விலை ஏறலாம்
GOLD விலை ஏறலாம்
DIAMOND விலை ஏறலாம்
உயிரையும் கொல்ல கூடிய
சாராயம் மற்றும் சிகரெட்டின்
விலை ஏறலாம்
ஆனால் இது நாள் வரை
இந்த விலை ஏற்றங்களை கண்டித்து நம்மில் எத்தனை பேர் இதற்காக கேள்வி கேட்டுள்ளோம்????
விவசாயம் செய்யும் எளியவர்களை
கேள்வியால் துளைக்கும் நாம்
இதர கார்பரேட் நிறுவனங்களின் பொருட்கள் விலையேறினால் மட்டும் அமைதியாக இருப்பது ஏன்???
சிறு காய்கறி கடைகளில் விலையினை குறைத்து கேட்டு மல்லுகட்டும் நாம்,
ஷாப்பிங் மால்களிலும்,
பெருவணிக வளாகங்களிலும் எவ்வளவு விலை கூடியிருந்தாலும், பகட்டால் வாய் மூடி மௌனியாக இருந்து பொருட்களை வாங்கி குவிப்பது ஏன்???
6 மாதம் 1 வருடம் ,
தண்ணீர் இல்லாமல்
எத்தனையோ செலவு செய்து,
வியர்வை சிந்தி
கஷ்டப்பட்டு அறுவடை செய்து ,
கொஞ்சம் கூட லாபம் இல்லாமல்
ஒரு பொருளை விற்க விவசாயி மட்டும் என்ன விதி விலக்கா..?????
விவசாயி என்ன REMOTE CONTROL-இல் அரிசியையும் , பருப்பையும் உருவாக்குகிறானா???
இல்லை, JAVA, C++, PHP PROGRAM மூலமாக உட்கார்ந்த இடத்தில் code எழுதி அரிசியையும் காய்கறியையும் பருப்பையும் உருவாக்கி கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறார்களா???
கால்வயிறு கஞ்சி
குடித்துவிட்டு ஒவ்வொரு விவசாயியும்
விவசாயம் செய்வதால்தான்
நாம் மூன்று வேலையும்
சோறு சாப்பிடுகிறோம்
என்பதை நாம் மறந்து விட்டோம்…..
நாம் தீச்சட்டி எடுத்து
வேண்டினாலும் சாமி
சோறு போடாது
விவசாயி மண்வெட்டி
எடுத்தால் மட்டுமே
நம் பசியை போக்க முடியும்
என்பதை நாம் மறந்து விட்டோம்…..
தான் உழைத்த பணத்தை
வங்கியில் போடாமல்
நாம் சாப்பிட வேண்டும் என்று
நம் உணவுக்காக மண்ணில்
போடுகிறவன் தான் விவசாயி
என்பதை நாம் மறந்து விட்டோம்…..
பிற இடங்களில் செய்யும் தொழிலே தெய்வம் என்பார்கள். ஆனால் தெய்வமே ஒரு தொழில்
செய்தால் அது விவசாயம்
என்பதை நாம் மறந்து விட்டோம்…..
பணம் சம்பாதிக்க ஆயிரம்
தொழில் இந்த பூமியில்
இருந்தாலும் உணவைச்
சம்பாதிக்க விவசாயம்
மட்டும்தானே இருக்கின்றது
என்பதை நாம் மறந்து விட்டோம்…..
படைப்பவன் மட்டுமே
கடவுள் அல்ல
மற்றவர்களின் பசிக்காக
பயிரிடுபவனும் கடவுள்தான்
என்பதை நாம் மறந்து விட்டோம்…..
பழைய கஞ்சியை
உண்டு பிரியாணி அரிசியை
அறுவடை செய்கிறான் விவசாயி
இதுவரை விளம்பரத்தில்
ஈடுபடாத ஒரே தொழில் விவசாயம்….!!
ஏனென்றால் விவசாயம்
என்பது தொழிலல்ல
விவசாயிகளுக்கு உயிர்
என்பதை நாம் மறந்து விட்டோம்…..
தகுதி பார்க்கும் மக்களே!!!!
விவசாயிகளின் கால்பட்ட அரிசியைத் தான் கழுவி
நாம் உண்கின்றோம் என்பதை மறந்து விட வேண்டாம்….
படித்தால் தான் வேலை,
கை நிறைய சம்பளம் என்று சொல்லித்தரும் சமூகம்
விதைத்தால் தான் சோறு என்று சொல்லித் தர மறந்துவிட்டது.
அதனால் தான் விவசாயம் அழிந்து கொண்டிருக்கிறது….
பல நூறு கோடி வாடிக்கையாளர்கள் இருந்தும் நஷ்டத்தில் இயங்கும் ஒரே நிறுவனம் விவசாயம் மட்டும் தான்.!!!
என்பதை நினைவில் நிறுத்தி
விவசாயியையும்,
விவசாயத்தையும்
நாம் வாழ்வதற்காகவது
வாழ விடுவோம்……
இல்லையேல்,
கடைசி மரமும் வெட்டுண்டு
கடைசி நதியும் விஷமேறி
கடைசி மீனும் பிடிபடும்போதுதான்
நம் மண்டைக்கு தெரிய வரும்
பணத்தை சாப்பிட முடியாதென்று..!!!!
என்றும் அன்புடன்
டாக்டர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
Share this: