June 19 2022 0Comment

பறவைகளிடமிருந்து நாம் சில பாடங்களை படிப்போம்…

பறவைகளிடமிருந்து நாம் சில பாடங்களை படிப்போம்…

1. இரவு நேரம் ஒன்றும் சாப்பிடுவதில்லை

2. இரவு நேரங்களில் ஊர் சுற்றுவதில்லை

3. தன் பிள்ளைகளுக்கு தக்க சமயத்தில் வாழ்க்கைக்கான பயிற்சிகளை அளிக்கின்றன

4. மூக்குமுட்ட உண்ணுவதில்லை. எவ்வளவு தானியங்களை இட்டு கொடுத்தாலும் தேவையானவற்றை மட்டும் கொத்திவிட்டு பறந்து செல்கின்றன. போகும் போது எதையும் எடுத்து போவதில்லை

5. இருள் சூழும்போதே உறங்க துவங்குகின்றன. அதிகாலை ஆனந்தமாய் பாட்டு பாடி எழுகின்றன

6. தனது ஆகாரத்தை அவை மாற்றுவதில்லை

7. தனது உடலில் வலுவுள்ளவரை உழைக்கின்றன. இரவு அல்லாது மற்ற நேரங்களில் ஓய்வு எடுப்பதில்லை

8. நோய் வந்தால் உண்ணுவதில்லை. சுகமான பின் உணவு எடுத்துக்கொள்கிறது

9. தன் குழந்தைகளுக்கு பரிபூரணமான அன்பை கொடுத்து வளர்க்கின்றன

10. கடுமையான உழைப்பாளிகளாயிருப்பதால், இதயம், கல்லீரல், நுரையீரல் நோய்களால் பாதிக்கப்படுவதில்லை

11. இயற்கைக்கு எதிராக ஒருபோதும் செயலாற்றுவதில்லை. தனது அத்தியாவசிய தேவைக்கு மட்டும் இயற்க்கையிலிருந்து பெற்று கொள்கின்றன

12. தனது கூடு மற்றும் சுற்று சூழல்களை அனுசரனையோடு பாதுகாக்கின்றன

13. ஒருபோதும் தனது மொழியினை மாற்றி வேற்று மொழி கலந்து பேசுவதில்லை

14.பறவைகள் கூடுதலாக கூடுகள் கட்டி வாடகைக்கு விடுவதில்லை.
இதில் சில படிப்பினைகளையாவது நாம் பாடமாக எடுத்துக்கொண்டால் வாழ்வு சிறப்பது திண்ணம்

வாழ்ந்தால் அதோ அந்தப்பறவை போல வாழ வேண்டும்…..

நன்றி திருமதி.தங்கம்…..

என்றும் அன்புடன்

டாக்டர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

 

Share this:

Write a Reply or Comment

three × 1 =