விலகு
பணம் கொஞ்ச
காலம் காப்பாற்றும்.
பகவான் எப்போதும் காப்பாற்றுவான்.
– காஞ்சிப் பெரியவர்.
உங்களுக்கு எது பிடிக்கவில்லையோ அதனிடம் இருந்து விலகி நில்லுங்கள். பொருளானாலும், உறவானாலும். அதையே நினைத்து உடலையும் உள்ளத்தையும் வருத்திக் கொள்ளாதீர்கள். அதனால் பாதிக்ப்படுவது நீங்கள் மட்டுமே.
உங்களுக்கு துரோகம் இழைத்தவர்களை நீங்கள் பழி வாங்காதீர்கள். அதை காலத்திடம் ஒப்படைத்துவிட்டு அமைதியாக இருங்கள். ஏனென்றால் காலம் போல் மிகக் கொடூரமாய் பழிவாங்க உலகில் யாராலும் முடியாது.
யாருக்கும் தெரியாமல் நீங்கள் சிந்தும் ஒவ்வொரு கண்ணீர் துளிகளையும் இறைவன் பார்க்கிறார்.
ஆகவே உங்களுக்கு யாரும்
இல்லை என்று ஒருபோதும் கவலைப்படாதீர்கள்.
தனித்து,அமைதி காக்கவும்….
கடவுள் தீர்ப்பு வாசிக்கும் போது வேடிக்கை பார்க்க மட்டுமே நமக்கு அனுமதி….
நினைவிருக்கட்டும் தனித்து அமைதி காக்கவும்….
என்றும் அன்புடன்
டாக்டர் ஆண்டாள் P சொக்கலிங்கம்