சங்கர் கபே, ஏத்தாப்பூர்
ஆத்தூரிலிருந்து சேலம் செல்லும் போது ஏத்தாப்பூர் சாம்பமூர்த்திஸ்வரர் கோயில் அருகிலுள்ள சங்கர் கபே, சென்று உணவருந்தி பாருங்கள்.
மிக சுத்தமான தரமான பிராமண சாப்பாடு உங்களுக்கு பிடிக்கும் என்றால் அதுவும் இரைச்சல் இல்லாமல் பரபரப்பு இல்லாமல் சாப்பிட வேண்டுமென்றால் அதற்கான சரியான தேர்வாக சங்கர் கபே இருக்கும்.
எனக்கு தெரிந்தவரை மிகச்சிறந்த சைவ உணவகமாக சில உணவகங்களை பட்டியலிட்டால் அதில் முதன்மையான உணவகமாக சங்கர் கபேவை சொல்வேன்.
கள்ளக்குறிச்சியில் இருந்து சேலம் செல்ல இருப்பவர்கள் நிச்சயமாக இந்த உணவகத்தை தேடிச்சென்று சுவைத்துப் பாருங்கள்.
அதிலும் இவர்கள் சொந்தமாக தயாரித்து விற்கும் மைசூர்பாகுவின் சுவை வேற லெவல்.
நன்றி நல்ல உணவகத்தை நடத்தும் நல் உள்ளங்களுக்கு.
நல்லதை தொடர்ந்து சொல்வேன்.
என்றும் அன்புடன்
Dr ஆண்டாள் P சொக்கலிங்கம்
,8, Agraharam, Ethapur, Tamil Nadu 636117
09894505755.
https://goo.gl/maps/aeWEDd3xTY2JXFXA8
Share this: