ஒத்தஇறகு சிறகுகள் 16
எனக்கு மனதில் தோன்றிய விஷயங்களை படம் பிடிப்பதில் ஆர்வம் அதிகம் உண்டு
அந்த வகையிலே
நான் எடுத்த புகைப்படத்திலேயே சிறந்த புகைப்படம் என்றால் இந்த ஒத்த இறகு புகைப்படம் தான்.
இறகுடன் பறவையை பார்த்தால் கூட அதன் அழகு தெரியாது –
ஒத்தையாக அனாதையாக விழுந்து கிடக்கும் இறகை பார்க்கும் போது தான் அதன் உண்மை உங்களுக்கு முழுமையாக புரியும்;
ஒத்த இறகை விட்டுச் சென்று விட்டு எங்கேயோ பறந்து கொண்டிருக்கும் அந்த பறவையின் அழகு….
ஒத்த இறகு எனக்கு எப்போதும் ஒரு ஆறுதலை கொடுக்கக் கூடியது
நீ கூட்டத்தில் ஒருவன் அல்ல தனி ஒருவன் என்கின்ற உண்மையை உரக்கச் சொல்லிக்கொண்டே இருப்பது இந்த ஒத்த இறகு தான்.
ஆட்டம் முடிந்ததும் எல்லோரும் குப்பை தான் என்கின்ற உண்மையையும் எப்போதும் என்னுள் உரக்க சொல்லி கொண்டே இருப்பதும் இந்த ஒத்த இறகு தான்.
வந்ததை வரவில் வைப்போம் சென்றதை செலவில் வைப்போம் என்று கடந்து போக முடியாத விஷயம் ஒன்று உண்டு என்றால் அது இந்த ஒத்த இறகை தான்
கல்லுக்குள் ஈரம் இருக்கின்றதா என்றால் எனக்கு தெரியாது
ஆனால் இந்த இறகுக்குள் நேசம் இருப்பது எனக்கு நன்றாகவே தெரிகின்றது
வருடினாலும் மிதித்தாலும் மென்மையாகவே இருந்துவிட்டு போ என்பதை எனக்கு அழுத்தமாக சொல்லிக்கொண்டே இருப்பது இந்த ஒத்த இறகு தான்
நீங்களும் அப்படியே இருக்கின்ற பட்சத்தில் நெஞ்சுக்கு வலியும் இல்லை
நெஞ்சு கல்லாக மாறவும் வாய்ப்பும் இல்லை
கரைந்து போகப் போகின்றோம் சூடனை விட வேகமாக
வெகு விரைவில்
என்பதால்
தன்மையாகவே இருந்து விட்டுப் போய் விடுவோம் இறகை விட மென்மையுடன்
என்றென்றும் அன்புடன்
Dr. ஆண்டாள் P சொக்கலிங்கம்
Share this: