மனிதனே கடவுள்
சிறகுகள் 15
இன்று(05/12/2021) நான் வசிக்கும் சென்னை முகலிவாக்கம் பகுதியில் கண்ட காட்சி என்னைக் நெஞ்சுருகிப் போக செய்து விட்டது.
மொத்த சாலையையும் அடைத்தவாறு ஒரு பசு தன் குட்டி குழந்தைக்கு பால் ஊட்டி கொண்டிருந்தது.
குட்டியின் அவசர அகோர பசியினால் அது குடித்ததை விட பாலை சாலையில் சிந்த விட்டது தான் அதிகம்
பசுவின் மேற்புறம் ஒரு கார் நின்றுகொண்டிருந்தது சாலையின் நடுவே.
மறுபுறத்தில் இருந்து நான் செல்கின்றேன் அப்போது நடந்து வந்து கொண்டிருந்த ஒருவர் காரில் அமர்ந்திருந்த ஓட்டுநரிடம்
என்னப்பா சாலை நடுவே வண்டியை நிறுத்தி என்ன
செய்து கொண்டிருக்கின்றாய்
என்று கேட்டபோது
இல்லை அய்யா நான் நேரா போகணும்
போனா தாய்க்கும் பசியோட பால் குடிக்கும் கன்றுக்கும் இடைஞ்சலா இருக்கும்
அதனாலதான் கன்று பால் குடித்து முடிக்கும் வரைக்கும் காத்திருக்கின்றேன்
கேள்வி கேட்ட தருமி அதிர்ந்து போய்விட்டார்
மீனாட்சியின் கணவர் சுந்தரேஸ்வரரை பார்த்த மகிழ்ச்சியுடன் அவர் அமர்ந்திருந்த காரை தொட்டு வணங்கிவிட்டு!!!!!!
பூரிப்புடன் அந்த இடத்தை கடந்தார்
வாடகைக்கு வாகனம் ஓட்டுபவன் கடவுள் ஆனா கூட பரவாயில்லை
அவன் அமர்ந்திருந்த வாகனமே கடவுளாக மாறிப்போனது அவனுடைய மனிதத்தால்
கடவுள் தூணிலும் இருப்பார்
கடவுள் கல்லிலும் இருப்பார்
கடவுள் காரிலும் இருப்பார்
என்பது எனக்கு புரிந்து
போவதற்கு முன்
நடந்து சென்றவனுக்கு முதலில் புரிந்து போனதால்
அவனும் கடவுள் தான்
கடவுளால் தானே கடவுளைப் புரிந்து கொள்ள முடியும்
நான் நிறைய மாற வேண்டும் என்கின்ற உணர்வு எனக்கு எப்போதும் இருக்கும்
இந்த சம்பவத்திற்கு பிறகு சற்று தூக்கலாகவே இருக்கின்றது
கடவுளை உணர்ந்து கொள்ள மாற்றம் ஒன்றே மாற்றம் இல்லாதது என்பதற்காக என்னையே நான் சீர்தூக்கிப் பார்த்துக் கொள்ள கிடைத்த ஒரு வாய்ப்பாக இதை எடுத்துக் கொண்டு கவனத்துடன் அடுத்த படியில் கால் வைக்க யோசித்துக் கொண்டிருக்கிறேன் யோசிப்பதற்கு முன்னே எனக்கு தெரிந்த விஷயம்
கடவுள் வேறு
மனிதன் வேறு
இப்பொழுது மனிதனே கடவுள் என்ற சிந்தனையுடன் பயணம் தொடர்கின்றது…..
என்றும் அன்புடன்
Dr ஆண்டாள் P சொக்கலிங்கம்
Share this: