அட்டை பூச்சிகளும் அன்னதானமும் : –

ஸ்ரீ

Srivi - Rice Thief

“மூன்று வேலை சோறு போட்டு நன்கு பார்த்து, பார்த்து வளர்த்தாலும் அமாவாசையன்று மட்டும் சொல்லி வைத்தாற்போல் காணாமல் போய்விடும் காக்கா” என்று கிராமங்களில் சொல்வார்கள்…

காக்காவின் அமாவாசை செயலே பரவாயில்லை என்று மெச்சும் அளவிற்கு ஒரு கீழ்த்தரமான செயலை சமீபத்தில் நான் கடந்து வர நேரிட்டது.

எனக்கு பிடித்த கோவில் ஒன்றில் அன்னதானத்திற்காக அரிசி கேட்டிருந்தார்கள். கேட்டதை திரட்டி கொடுத்தேன். கடைசியில் கொடுக்கப்பட்ட அரிசியில் 85% அன்னதானத்திற்கு உபயோகப்படுத்தாமல் அதை என்னிடம் வாங்கியவர்கள் தங்கள் சொந்த  உபயோகத்திற்கு எடுத்து கொண்டுவிட்டார்கள் என்கின்ற உண்மை தற்போது எனக்கு தெரிய வந்திருக்கின்றது. ஏழைகளின் பசியாற்ற ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தார்கள் என்கின்ற என் சந்தோஷத்தை ஒரு நொடியில் அழித்து விட்டார்கள் மாபாவிகள். நான் வணங்கும் ஆண்டாளிடம் நான் கேட்க விரும்புவது ஒரே ஒரு கேள்வியை தான்.

“இந்த பொறுக்கிகள் செய்யும் பாவத்திற்கு என்னை ஏன் துணை போகச் செய்தாய்? ரத்தத்தை உறிஞ்சி உயிர் வாழும் அட்டை பூச்சியை விட கேவலமான இந்தப் பிறவிகளுக்கு நல்ல பாடத்தை கொடுத்து பின் நல்ல புத்தியை கொடு – தயவு செய்து….

 

திருவே தஞ்சம்; திருவரங்கனே தஞ்சம்;

தஞ்சமடைந்த நம் ராமநுஜனே தஞ்சம்

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!!

நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!!

 

வாழ்க வளமுடன்

என்றென்றும் அன்புடன்

ஆண்டாள் பி. சொக்கலிங்கம்

Share this:

1 comment

  1. Sir i wish to share this informn.
    I frequently visit Oongarakudil agasthiar sanmargasangam THURAIYUR. I request pl visit this place once where they feed more than 20000 people every day twice. They also feed nearby villages also provide medical educational and water facilities. I visited these villages while they were feeding people.

    Once before going to kudil i climbed 2800 steps on perumal malai to prey .when i told them they said van carrying food just left for perumal malai u could have gone with them without climbing steps . I was taken aback and told them i was there around 7 o , clock could find no one how come u feed . They replied they are feeding animals there in the hill also showed pictures showing monkeys sitting in a row and taking food like humans.

    This place is filled with peace and harmony they take donations which is immeditely turned into rice pulses etc.

    I wish pl visit this place once .

    Reply

Write a Reply or Comment

eighteen + 13 =