மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் கவனத்திற்கு
சென்னை நந்தனம் Extension 5 th மெயின் ரோட்டில் அமைந்துள்ள
எங்கள் அலுவலகத்திற்கு எதிரே உள்ள மரம் மழையால் கீழே விழுந்தவுடன் அதை அப்புறப்படுத்துகின்றேன் என்று சம்பந்தமே இல்லாமல் எங்கள் அலுவலகத்தில் ஒரு வாகனம் கூட நிறுத்த முடியாத அளவிற்கு குறுக்கே தள்ளி விட்டுவிட்டு பின் எங்களின் தொடர் முயற்சி காரணமாக நேற்று மரத்தை வெட்டி அப்புறப்படுத்த கார்ப்பரேஷன் அலுவலகத்திலிருந்து சிலர் வந்தார்கள்.
மரத்தை வெட்டிக் கொண்டு இருந்தவர்கள் சார்பாக ஒருவர் வந்து மரம் வெட்டுவதற்கு லஞ்சம் கேட்ட பொழுது அது எங்களால் மறுக்கப்பட்டது.
உடனே வெட்டிய மரத்தை அப்படியே விட்டுவிட்டு வேறு வாகனம் வந்து மரத்தை எடுத்து செல்லும் என்று கூறிவிட்டு சென்று விட்டார்கள்
இன்று காலை சம்பந்தப்பட்ட AE ஒருவரிடம் இதுகுறித்து தகவல் சொன்ன பொழுது வரவேற்கத்தக்க அளவில் அவர் உண்மையிலே பொறுப்பாக பதில் அளித்தார். மரம் விழுந்து 6 நாள் ஆன விஷயம் அவருக்கு மூன்று நாள் முன்னதாக தான் தகவல் சொல்லப்பட்டதாக கூறினார்.
நேற்று வந்தவர்கள் என்ன வேலை செய்தார் என்கின்ற விவரத்தை வாட்ஸ் அப்பில் செய்தியாக அனுப்ப சொன்னார். அனுப்பிவிட்டோம்.
இருந்தாலும் மரம் எப்போது அகற்றப்படும் என்பது அந்த மரத்தையும் மனிதனையும் படைத்த ஆண்டவன் ஒருவனுக்கே தெரியும் என்பது போல் இருந்தது நேற்றைய லஞ்சம் கேட்ட மனிதரின் நடவடிக்கை.
ஏறத்தாழ பிரதான சாலையாக உபயோகப்படுத்தப்படும் இந்த சாலைக்கே இந்த கதி என்றால்?
லஞ்சம் கொடுக்கப்படாமல் மரம் அகற்றப்படுகின்றதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
தனிப்பட்ட முறையில் என்னை பொருத்தவரை தமிழக முதலமைச்சர் நல்ல விஷயங்களை செய்ய நினைத்தாலும், செய்ய நினைத்து செயல்பட்டுக் கொண்டிருந்தாலும் ஊழல் பெருச்சாளிகளை வீட்டுக்கு அனுப்பாமல் அது சாத்தியப்படுமா என்பது ஒரு கேள்விக் குறியே?
தமிழக முதல்வர் அவர்களே எதிர்க்கட்சிகளும் போற்றக் கூடிய அளவிற்கு ஆட்சி நடத்தும் தங்கள் ஆட்சியில் இந்த மழை பணி சுணக்கம் உங்களுடைய நல்லாட்சிக்கு ஒரு கரும்புள்ளியாக மாறி விடக்கூடாது என்பதால் இந்த மடல் நல்லது நடக்கும் என்கிற நம்பிக்கையில் ஊழலுக்கு மற்றும் லஞ்சத்திற்கு எதிரான போரில்
என்றும் அன்புடன்
ஸ்ரீஆண்டாள் பக்தர்கள் பேரவை
Share this: