வாஸ்து – விடை தெரியா மர்மங்கள் – நானும், அவளும்: – கடிதம் – 2

ஸ்ரீ

Vastu - I got question

என்னிடம் பாடம் படிக்க நினைத்தவள் படமாகி போவாள் இத்தனை சீக்கிரத்தில் என நான் கனவில் கூட நினைக்கவில்லை. கடைசியாக அவளை நான் சந்தித்தபோது நான் மறுத்தும் ஆவி பறக்க பால் குடிக்க வைத்து அனுப்பினாள். ஆனால் இன்று அவள் இறந்து, அவளுக்கு யாரோ பால் ஊற்றி, ஆவியாக சுற்ற வைத்து விட்டார்களே??????

இவள் நமக்கு எதுவும் நிச்சயமில்லை என்று எனக்கு புரிய வைத்தவள்.

இவளே எனக்கும் எதுவும் நிச்சயமில்லை என்று அறிய வைத்து தெளியவும் வைத்தவள்.

இவள் மரணம் ஒரளவு வாஸ்து தெரிந்த எனக்குள் எழுப்பிய கேள்விகள் உங்கள் பார்வைக்காக: –

  1. இவள் என்னை சந்திக்காமலேயே இறந்து போயிருக்கலாமே? ஏன் என்னை சந்திக்க வேண்டும்.
  2. வீடு தவறு; தொழில் நிறுவனமும் தவறு. வீட்டில் சிறிய அளவில் மாற்றங்கள் செய்யப்படுகின்றது. அது தொழிற்சாலையில் பெரிய அளவில் மாற்றத்தை கொடுக்கின்றது. இருந்தாலும் நான் முதன் முதலாக வீட்டை பார்க்கும் போதே அவர்கள் ஏன் தொழிற்சாலையை பார்க்க கூட்டி செல்லவில்லை?????
  3. தொழிற்சாலைக்கு என வாஸ்து பார்க்க போனபோது அதன் சிறிய அளவிலான பிரம்மாண்ட தவறு என் கண்ணில் பட்டு அதை சரி செய்ய சொல்லியும் என்னை முழுவதும் நம்பியவர்கள் ஏன் சரி செய்யவில்லை????
  4. ஆண்டாளுக்கும், ஊருக்கும் அள்ளி, அள்ளி கொடுத்தார்களே அதை எந்த தெய்வமும் ஏன் கணக்கில் கொள்ளவில்லை?????
  5. அவர்கள் சாகப் போகிறார்கள் என அவர்களுக்கும் தெரியாது. எனக்கும் தெரியாது.ஆனால் ஆண்டாளுக்கு அது தெரியும். அப்படியிருக்க அவர்களிடம் இருந்து பணத்தை மட்டும் ஏன் ஆண்டாள் வாங்க வேண்டும்??????
  6. முதல் நான் ஐவரும் இறக்க மருந்து குடிக்கிறார்கள். அடுத்த நாள் காலை 12 வயது பையன் மட்டும் இறந்து கிடக்கின்றான். அரை மயக்கத்தில் அதை பார்த்த பின் நொடி பொழுதும் தாமதிக்காமல் அவள், அவள் பெண் பிள்ளையுடன் கிணற்றில் ஓடி விழுந்து மரணத்தை ஏற்படுத்தி கொள்கின்றாள். எனக்கு தெரிந்தவரை அவள் சொக்கத் தங்கம். அப்படிப்பட்டவளுக்கு தெய்வங்கள் மரணத்தை நேரடியாக கொடுத்திருக்கலாமே! அதை விடுத்து அவள் உயிராக வளர்த்த அவள் செல்ல பையனின் மரணத்தை பார்த்து அதன்பின் இவளை இறக்க வைத்தது எந்த விதத்தில் நியாயம்??????
  7. கணவரின் அஜாக்கிரதை போக்கிற்கு எந்த தவறும் செய்யாத அவளும், அவளின் செல்லப் பிள்ளைகளும் பலியானது எந்த ஊர் நியாயம்???????
  8. இறந்து போகணும் இவர்கள் அனைவரும் என்கின்ற விதி உண்மையானால் ஏன் அவர்களை பாதாளத்திற்கு தள்ளி பின் அதனிலிருந்து மீட்டு வந்து மீண்டும் அதே பாதாளத்திற்கு தள்ள வேண்டும்???????
  9. அற்ப ஆயுசு வாழ்க்கைக்கு ஏன் இரண்டு குழந்தைகள் பிறப்பு எடுக்க வேண்டும்??????
  10. என் அப்பா கூட சில சமயம் தான் நினைவுக்கு வருவார்கள். என் காதலி கூட எப்போதோ ஒரு சமயம் தான் நினைவுக்கு வருவார்கள். ஆனால் தினமும் என் நினைவில்  இருக்க கூடிய ஒரே விஷயம் இவள் மரணம் தான். அண்ணே! என்று பாசத்தோடு கூப்பிட தங்கை என் கூட பிறக்கவில்லை. நடுவில் அப்படி ஒருத்தி வந்தாள் – இவள் ரூபத்தில். அவள் நடுவிலே என்னை விட்டு சென்றது எந்த விதத்தில் நியாயம்?????
  11. சாக போகிறவள் எதுக்கு வெட்டியாக வாஸ்து பார்த்து வீட்டை  மாற்றி லாபம் ஈட்டி பின் அனைத்தையும் இழந்து, அனைத்தையும் இழந்த சூழ்நிலையிலும் ஊருக்கே அவளை அன்னதானம் போடவைத்து கடைசியாக கொடுமையான முறையில் மரணத்தை அவளை எதிர்கொள்ள வைத்து…….. என்ன வாழ்க்கையாடா இது என்று என்னை தினமும் இம்சிக்கின்ற இந்த கேள்விகள் அனைத்திற்கும் எனக்கு தெரிந்த வாஸ்துவிலும் விடை கிடையாது.மனிதர்களாலும் விடை சொல்ல முடியாது. விடை தெரிந்த அவன் ஒருவனும் வாய் திறந்து சொல்லப் போவதில்லை.

இதுவும் கடந்து போகும் – அவள் நினைவுகளுடன்.

கிருஷ்ணார்ப்பணம்…..

கிருஷ்ணார்ப்பணம்…..

கிருஷ்ணார்ப்பணம்…..

 

திருவே தஞ்சம்; திருவரங்கனே தஞ்சம்;

தஞ்சமடைந்த நம் ராமநுஜனே தஞ்சம்

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!!

நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!!

 

வாழ்க வளமுடன்

என்றென்றும் அன்புடன்

ஆண்டாள் பி. சொக்கலிங்கம்

Share this:

1 comment

  1. THIS DEPICTS HOW DESTINY IS ULTIMATE SIR. CERTAIN EXPERIENCES ARE PAINFUL YET IT IS A MYS TRY WHY WE COME ACROSS SUCH HAPPENINGS IN LIFE.

    Reply

Write a Reply or Comment

1 + ten =