கூண்டுக்குள் சிலை சிறகுகள் 4
நம் நாட்டில் சிலை என்பது மிக முக்கிய குறியீடாக பார்க்கப்படுகின்றது.
நம் நாடு முழுவதும் கடவுள்களுக்கும் சிலை உண்டு.
கடவுள் மறுப்பு பேசியவர்களுக்கும் சிலை உண்டு.
இரண்டும் ஒன்றல்ல.
நாத்திகர்கள் பார்வையில் இருக்கிறதா? இல்லையா? என்ற உறுதியற்ற ஒரு விஷயத்தை ஆத்திகர்கள் இருக்கிறது என்று நிலை நிறுத்த முதல் வகை சிலைகள்.
கண் முன்னே இருக்கும் மக்கள் தான் முக்கியம் என்று பேசி, வாழ்ந்தவர்களின் சித்தாந்தங்கள் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கொண்டு செல்லும் சிலைகள் இரண்டாவது வகை.
இருவகை சிலைகளுக்கும் இந்தியாவில் எப்போதும் அரசியல் முக்கியத்துவம் உண்டு.
சிலை அரசியலில் பல ஆண்டுகள் முன்பிருந்தே தமிழகத்தில் பல்வேறு தலைவர்களின் சிலைகள் சிறையில் வைக்கப்பட்டுள்ளன.
அதிலும் குறிப்பாக ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து வந்து நம் தேசத்தின் மொத்த மக்களுக்குமான சட்டத்தை வகுக்குமளவுக்கு உயர்ந்து நின்று சமூக விடுதலை பேசி, அனைத்து மக்களும் ஏற்று கொள்ளக்கூடிய வகையில் இந்திய நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தை எழுதிய டாக்டர்.பீமா ராவ் அம்பேத்கர் சிலையையும்,
தமிழ் கடவுளான முருகனாகவே வாழ்ந்து முருகனாக மாறிப்போன பசும்பொன் முத்துராமலிங்க தெய்வம் போன்று மக்களுக்காகவே உதாரணமாக வாழ்ந்து சென்ற ஏனைய பிற தலைவர்களின் சிலைகளையும்
#Ambedkar Caged
கூண்டுக்குள் தான் இன்றும் வைத்து இருக்க வேண்டும் நம் நாட்டில் என்பது சாதிய சிந்தனை மட்டுமே உடைய சிலருடைய சிந்தனை குறைபாட்டால் நடக்கும் நிகழ்வாக நான் பார்க்கிறேன்.
இது பெரும்பான்மையானவர்களுடைய விருப்பம் இல்லை என்பதால் இவ்விஷயத்தில் மத்திய மாநில அரசாங்கங்கள் துணிச்சலாக சில முடிவுகள் எடுத்தாக வேண்டும்
1. சிறையில் இருக்கும் சிலைகளின் கூண்டுகளை அகற்ற வேண்டும்
2. சில மக்கள் மாறும் வரை சிலைகளை அசிங்கப்படுத்தாமல் அவமானப்படுத்தாமல் இன்றைய நவீன தொழில் நுட்பத்தின் மூலமாக சிலைகளை கண்காணிக்க வேண்டும்
3 அதையும் மீறி சிலைகளை அசிங்கப்படுதும்
அயோக்கியர்களுக்கு சட்டபடி உச்சகட்ட தண்டனை கொடுக்கவேண்டும்.
இதை செய்தால் தான் நமக்காக வாழ்ந்த சகாப்தங்களுக்கு நாம் சரியான மரியாதை கொடுத்து நன்றியுடன் வாழ்ந்தோம் என்று வரலாறு நம்மை பதிவிடும்.
இல்லாவிட்டால் ஆள பிறந்த தமிழர்களின் அடுத்த கட்ட அயோக்கியத்தனம் இது என்று எதிர்காலம் நம் அனைவரையும் காரி உமிழும்.
என்றும் அன்புடன்
Dr. ஆண்டாள் P சொக்கலிங்கம்
Share this: