காசி
ஆண்டாளை நேசிக்க துவங்கிய பிறகு இந்த நொடி வரை வேறு எந்த கடவுளிடமும் நான் மிக நெருங்கியதில்லை…
இன்னும் ஒருபடி மேல் சென்று சொல்ல வேண்டுமென்றால்
ஆண்டாளை தவிர வேறு சிந்தனையே இல்லாத நிறைகுடம் ஆகத் தான் என்னை நான் பார்க்கின்றேன்….
ஆண்டாள் மேல் ஏன் இப்படி ஒரு காதல்
ஆண்டாள் மேல் ஏன் இப்படி ஒரு பாசம்
ஆண்டாள் மேல் ஏன் இப்படி ஒரு மரியாதை
ஆண்டாள் மேல் ஏன் இப்படி ஒரு ஆசை
எனக்குள் இருக்கும் பதில் இல்லாத கேள்விகளுக்குள் முதன்மையான கேள்வி இது.
ஆண்டாளை நினைக்கும் போதெல்லாம் இந்த உடலுக்குள் உயிருக்கான அவசியம் இனி இல்லை என்கின்ற எண்ணமே தொக்கி நிற்கும்.
அது ஏனோ இன்று வரை வேறு எந்த கோவிலுக்கு சென்றாலும் எந்த தெய்வத்தை நினைத்தாலும் இந்த எண்ணம் எனக்கு வந்ததே இல்லை – ஆயிரம் முறை சொல்வேன் இந்த உண்மையை உரக்க…
ஐந்து நாள் பயணமாக காசி மற்றும் அயோத்தியா சுற்றுப்பயணத்தில் இருந்து இப்போது ஒரு சிறிய மாற்றத்துடன் மற்றொரு உண்மையை என் வாழ்நாளில் கண்டுபிடித்து இருக்கின்றேன்.
காசி ஊரோ
காசி கோவிலோ
பெரிய அளவில் என்னை கவர்ந்து இழுக்க வில்லை என்பது ஒருபுறம் இருந்தாலும்
ஆண்டாளிடம் ஒவ்வொருமுறை தோன்றும் அதே உணர்வு கங்கையிலே
படகிலே படுத்துக் கொண்டு வெள்ளம் வரும் திசைக்கு எதிர் திசையில் படகிலேயே கண்ணை மூடி பயணித்தபோது இந்த உடலுக்குள் உயிருக்கான அவசியம் இனி இல்லை என்கின்ற எண்ணமே விஞ்சி நின்றது..
கடலும்
காசி கடவுளும்
கொடுக்காத விஷயத்தை
கங்கை கொடுத்ததில் எனக்கும்
வியப்பு ஏதுமின்றி பெரும் மகிழ்ச்சியே…..
பயணியின்
பயணம்
முடியும் வரை
பயணம்
தொடரும்……
என்றும் அன்புடன்
Dr. ஆண்டாள் P சொக்கலிங்கம்
Share this: