March 16 2021 0Comment

வாழ்த்துக்கள்:

வாழ்த்துக்கள்:
 
மிகச்சிறந்த உறவுகளை
 
உனக்காக எதையும் இழப்பேன் என்று ஒரு வகையாகவும்
 
எதற்காகவும் உன்னை இழக்க மாட்டேன் என்று இன்னொரு வகையாகவும்
பிரிக்கலாம்.
 
என் வாழ்க்கையில் பலருக்கு முதல் வகையில் இடம் உண்டு
 
சிலருக்கு இரண்டாம் வகையில் இடம் உண்டு
 
ஒருவருக்கு மட்டும் இரண்டு வகையிலும் இடம் உண்டு என்றால்
 
அது
நான் அதிகம் மதிக்கும், விரும்பும் மற்றும் உழைத்து
ஜெயித்தே ஆகவேண்டும் என்று நினைக்கக்கூடிய
பெருமதிப்பிற்குரிய
எனதருமை பொள்ளாச்சி திருமதி மஞ்சுளா சிவநாதன் அவர்களையே சாரும்.
 
இவர் வாழ்க்கையில் இவர் சந்தித்த துன்பங்களை சங்கடங்களை இன்னொருவர் பார்த்திருந்தாலோ அனுபவித்திருந்தாலோ இந்நேரம் அவர் உயிருடன் இருந்திருக்கவே முடியாது
 
ஆனால் இவர் இன்னும் இருக்கின்றார் என்றால் இவருக்கு இவர் தொழில் மேல் உள்ள அளப்பரிய காதலே
அதற்கு முக்கியமான ஒரே காரணம்.
 
எகத்தாளம்
ஏளனப் பேச்சுகள்
ஏமாற்றம்
 
என
தொடர்ந்து சந்தித்த
சராசரி
பெண்
 
ஒரு சமயம்
உடல்நிலை
மிக
மோசமான
கட்டத்தில்…
 
கட்டங்கள் மாற
விதியை நிர்ணயம்
செய்தவன் இடமே சரணாகதி அடைந்தாள்…..
 
ஒன்பது வாரம்
தொடர்ந்து
நடந்து பழனி முருகனை பார்த்ததன் விளைவு
 
பூஜ்யத்திலிருந்து ராஜ்ஜியத்தை
நோக்கி இவரின்
பயணம் ஆரம்பமாகியது.
 
இவரின்
அசாத்திய கடவுள் நம்பிக்கை தான்
இவரின்
அடுத்தகட்ட
வெற்றி பயணத்துடைய
ஏணி படியின்
முதல் படிக்கட்டாக
முருகனே நின்று
இவரை தூக்கி விட ஆரம்பித்துவிட்டார் என நினைக்கின்றேன்.
 
ஒரு கட்டத்தில் பாதை இல்லை என்று
இவர் கவலைப்பட்டதாக
நினைவு.
 
இன்று இவர் நடக்கின்ற தடமே பல நூறு பேருக்கு நல்ல பாதையாக மாறி இருக்கின்றது.
 
இவருக்கு நான் எப்போதும் சொன்னது:
 
தனித்து நின்றாலும்
சில எழுத்துகளுக்குப் பொருளுண்டு.
 
தனியாக நின்றாலும்
மரங்கள் ஊருக்கே நிழல் கொடுப்பதுண்டு
 
தனி என்று கலங்காதே
 
சமுதாயம் படிப்பதெல்லாம்
தனிமனிதச் சரித்திரங்களைத்தான்…
 
அந்த வகையில்
இவரின் வாழ்க்கையும் ஒருநாள் சரித்திரமாகும்.
 
அதற்கு
ஏற்றார்போல்
இவருக்கு ஒரு மிகப்பெரிய அங்கீகாரம்…
 
இவருடைய
தொழில் பக்திக்கு
இவருடைய
தொழில் அறிவுக்கு
 
பொள்ளாச்சியை சேர்ந்த இரண்டு சிறந்த அமைப்புகள் சேர்ந்து
 
2020- ம் ஆண்டின் மிக சிறந்த தன்னம்பிக்கை பெண்
 
என்கின்ற விருதை
 
கோயம்புத்தூர் Additional Supt., of Police
R.சுஹாசினி
அவர்கள் கையால்
இவருக்கு நேற்று பொள்ளாச்சியில் நடந்த விழாவில் கொடுத்து
கௌரவித்தார்கள்.
 
இவருக்கு இந்த விருதை கொடுத்த
திருமதி பிரியா செந்தில் மற்றும் முகூர்தா அமைப்புக்கு ஆண்டாள் பக்தர்கள் பேரவை தன் நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.
 
நன்றி
என்றும் அன்புடன்
டாக்டர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
Share this:

Write a Reply or Comment

thirteen + 5 =