திருப்பாவை
பாடல் 20:
(நப்பின்னையை உதவுக எனல்) முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று கப்பம் தவிர்க்கும் கலியே! துயிலெழாய்! செப்பமுடையாய் திறலுடையாய் செற்றார்க்கு வெப்பம் கொடுக்கும் விமலா! துயிலெழாய்! செப்பன்ன மென்முலைச் செவ்வாய் சிறுமருங்குல் நப்பின்னை நங்காய்! திருவே! துயிலெழாய் உக்கமும் தட்டொளியும் தந்துன் மணாளனை இப்போதே எம்மை நீராட்டலோர் எம்பாவாய்.
விளக்கம் :
முப்பத்து முக்கோடி தேவர்கள் இருந்தாலும் பக்தர்களுக்கு ஒரு துயரம் என்றால் முன்னின்று துயரத்தை தீர்க்கும் பெருமையை உடையவனே! துயில் எழுக… செம்மை உடையவனே! வலிமை உடையவனே! பகைவர்களுக்கு அச்சத்தை உண்டாக்கும் தூயவனே! துயில் எழுவாயாக… பொற்கலசம் போன்ற மென்மையான தனங்களும், சிவந்த வாயும், சிற்றிடையும் கொண்ட நப்பின்னை பிராட்டியே! திருமகளுக்கு நிகரானவளே! துயில் எழுவாயாக… எங்களுக்கு விசிறி, கண்ணாடி ஆகியவற்றையும், உன் கணவனாகிய கண்ணனையும் தந்து இப்போதே எங்களை அருள்மழையில் நனையச் செய்வாயாக….!
Source:web