தூங்கா நகரத்தில் தூக்கம் தெரியாதவன்:
16/12/2020 சாப்பாட்டு பிரியர்கள் மதுரையில் பிறக்காவிட்டால் அது முன்ஜென்ம பாவமே. அதுவும் அசைவ பிரியர்கள் என்றால் சொல்லவே வேண்டாம். இருந்தாலும் சைவம் ஆகி போனபிறகு எனக்கு பிடித்த தூங்கா நகரத்து தெருவோர உணவகத்தில் சூடான இட்லி, வெங்காய பொடி தோசையை லேசான மழை சாரல் மற்றும் கொசுக்கடிக்கு நடுவிலே சாலையை பார்த்தவாறு, மக்களின் நகர்தலை ரசித்தவாறு சாப்பிடும் போது கிடைக்கும் ருசி வேறு எங்காவது கிடைக்குமா???!!! நன்றாக படித்தவன் நன்றாக குடித்தவன் ஒன்றுமே இல்லாதவன் எல்லாம் உள்ளவன் யாராக இருந்தாலும் ஒரு நாள் தெருவுக்கு வந்துதானே ஆக வேண்டும் என்பதை முழுவதும் உணர்ந்ததால் தான் சித்தம் இழந்து தெருவிலேயே நான் எப்போதும் நிற்கின்றேன் என்று சொல்லாமல் சொல்லிச் சென்ற சக மனுஷனை சற்று சன்னமாக கூப்பிட்டு அவரின் உணவுத் தேவைக்கான ஒரு விஷயத்தை பூர்த்தி செய்துவிட்டு உணவை தொடர்ந்த போது தான் தெரிந்தது உணவின் ருசி அதிகரித்து இருந்த உண்மை… அவனை நான் அறிந்தேன் அவனை அறிந்த பிறகு வாழ்க்கையில் தான் தொலையும் ஒருநாள் என்ற நம்பிக்கையையும் வந்தது…. புத்தனுக்கு போதி மரம் சொக்கனுக்கு சாலை ஓரம் வேறு யாருக்கு கிடைக்கும் இந்த சுகானுபவம்…. நன்றி ஆண்டாளுக்கு நன்றி மதுரை மண்ணுக்கு என்றென்றும் அன்புடன் டாக்டர் ஆண்டாள் P சொக்கலிங்கம்