July 29 2020 0Comment

இந்தப் புகைப்படம் என் வாழ்க்கை ஓட்டத்தில் எனக்கே எனக்கென்று நான் தேர்ந்தெடுத்த தலைசிறந்த ஐந்து படங்களில் ஒன்று….

அன்பு நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
இந்தப் புகைப்படம் என் வாழ்க்கை ஓட்டத்தில் எனக்கே எனக்கென்று நான் தேர்ந்தெடுத்த தலைசிறந்த ஐந்து படங்களில் ஒன்று….
மணப்பெண் மோகனூரை சேர்ந்தவர்.
மணமகன் நாமகிரிப்பேட்டையை சேர்ந்தவர்.
வெவ்வேறு தருணங்களில்
வெவ்வேறு வருடங்களில் வெவ்வேறு
தளங்களில்
இவர்களின் பெற்றோர்களை சந்திக்கின்றேன்
12 ஜூலை 2020 இவர்களுக்கு நிச்சயதார்த்தம் நல்லபடியாக நடந்தது.
ஆச்சரியம் என்னவென்றால்
இது எப்படி நடக்கும்
என்று நினைத்த பெற்றோர்களின் எண்ணங்களுக்கு நடுவே
திருச்செந்தூர் முருகனின் திருவிளையாடலே இந்த நல்ல நிகழ்வுக்கு காரணம்.
ஆண்டாள் தங்க விமான திருப்பணியை  விட
ஆயிரம் மடங்கு மேலான பணியாக
இவ்விஷயத்தை நான் கருதுகின்றேன்.
நான் அவ்வாறு கருத பல காரணங்கள் இந்த திருமண விஷயத்தில் உள்ளடங்கி இருக்கின்றது.
விவரிக்க இப்பொழுது விரும்பவில்லை.
எத்தனையோ காதல்கள் என்னால் பிரிக்கப்பட்டிருக்கின்றன.
எத்தனையோ காதல்கள் என்னால் சேர்க்கப்பட்டிருக்கின்றன.
எத்தனையோ திருமணங்கள் என்னால் நடத்தப்பட்டிருக்கின்றன.
இது நடந்தது, நடக்கின்றது,
நடக்கப் போவது
என
எல்லாவற்றையும்
விட
சிறப்பானது
மேலானது…
காரணம் திருச்செந்தூர் முருகன்.
அதனால்தான் என்னவோ இந்த திருமணம் மாணிக்கம்பாளையம் நல்ல குமாரசாமி
கோயிலில் வைத்து நடைபெற உள்ளது
நிச்சயதார்த்த நிகழ்வு நாமக்கல் பொறியாளர் திரு. இளமுருகன் அவர்களால் மிக சிறந்த முறையில் கட்டப்பட்ட மணப்பெண்ணின் இல்லத்தில் வைத்து இனிதே நடைபெற்றது.
மணமக்கள் நீடூடி வாழ நாவலடியான் துணை நிற்பார்.
இந்த மொத்த விஷயத்தில் எனக்கு ஒரு பெரிய சந்தோஷம் என்னவென்றால் இந்த நிச்சயதார்த்தம் மிக எளிமையாக மிக முக்கியமானவர்கள் முன்னிலையில் மிக சிறப்பாக நடைபெற்றது.
திருமண மண்டபம் இல்லை.
தேவையில்லாத இசை இல்லை.
தேவையில்லாத கூட்டமில்லை.
தேவையில்லாத செலவில்லை.
அனைவருக்கும் ஒரு வேண்டுகோள்:
ஊரடங்கு முடிந்தாலும்  நீங்களும்
தேவையில்லாத கூட்டத்தை கூட்டி பெரிய பெரிய மண்டபங்களில் திருமண விழா நடத்துவதைத் தவிர்த்து
பண்டைய முறையை பின்பற்றும் பட்சத்தில் உறவுகள் மேம்படும் வாழ்க்கை நம் வசப்படும்.
வெற்றிவேல் வீரவேல்
 
Share this:

Write a Reply or Comment

one × 3 =