January 22 2020 0Comment

திருமதி. நிர்மலா சீதாராமன்

திருமதி. நிர்மலா சீதாராமன்

நான் எத்தனையோ மிக பிரம்மாண்டமான அரசியல் தலைமைகளுடன் பல்வேறு தருணங்களில் பல்வேறு காலக்கட்டங்களில் பணியாற்றி இருக்கின்றேன்.

இருந்தாலும் நான் தனிப்பட்ட முறையில் பழக முடியவில்லை என்கின்ற ஆதங்கம் திரு.கலைஞர் மற்றும் செல்வி.ஜெயலலிதா அம்மாவின் விஷயத்தில் எப்போதும் உண்டு.

காரணம் என்னுடைய அனுபவத்தில் நான் மிகவும் வியந்த இரு அரசியல் ஆளுமைகள் என்றால் இவர்கள் மட்டும்தான்.

அதிலும் குறிப்பாக

திரு.கலைஞர் அவர்களின் தனிச்சிறப்பு என்று அவரின் ஞாபக சக்தியையும், புள்ளி விவரத்துடன் கூடிய பேச்சையும் குறிப்பிடலாம்.
செல்வி.ஜெயலலிதா அம்மாவின் பெரிய திறமை என்று அவரின் தைரியத்தையும் மற்றும் ஆளுமையையும் குறிப்பிடலாம்.

எதற்காக இந்த விஷயத்தை இப்போது குறிப்பிடுகின்றேன் என்றால்…

சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற கூட்டத்தில் திருமதி.நிர்மலா சீதாராமன் அவர்களின் பேச்சை கேட்ட போது மேற்சொன்ன இரண்டு மிகப்பெரிய அரசியல் தலைவர்களின் ஒருங்கிணைந்த ஒரே ஆளுமை போல் திருமதி.நிர்மலா சீதாராமன் அவர்களை பார்க்க நேரிட்டது.

தமிழக மக்கள் / அரசியல்வாதிகள் இவரை இன்னும் சரியாக புரிந்து கொள்ளவில்லை என்கின்ற வருத்தம் எனக்கு இவரை சந்தித்த பிறகு ஏற்பட்டுள்ளது.

மாற்றம் ஒன்றே மாறாதது. மக்கள் மாறுவார்கள் வெகுவிரைவில் என்ற நம்பிக்கையில் நான் இருப்பேன்…

சமீபத்தில் சென்னையில் நடந்த ஒரு மிகப்பெரிய நிகழ்ச்சியில் திருமதி.நிர்மலா சீதாராமன் அவர்களை கவுரவிக்க எனக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பை ஆண்டாள் கொடுத்த வாய்ப்பாக நான் கருதுகின்றேன்.

இவர் பணி தொடரட்டும்…
இந்தியா வல்லரசாக்க எடுக்கப்படும் முயற்சிகள் வெல்லட்டும்…

அனைவரும் இப்பூமியில் நிம்மதியாக
நிறைவாக
மகிழ்ச்சியாக வாழ என் அன்பான வாழ்த்துக்கள்…
Dr.ஆண்டாள் P.சொக்கலிங்கம்

Share this:

Write a Reply or Comment

twenty + three =