மார்கழி திருவாதிரை …!!
சிவனுக்கு உகந்த விரதங்களுள் மிக முக்கியமானது திருவாதிரை விரதம்.
மார்கழி திருவாதிரை என்பது மார்கழி மாதத்தில் திருவாதிரை நட்சத்திரத்தோடு கூடிய பௌர்ணமியில் கடைபிடிக்கப்படும் வழிபாடாகும்.
மார்கழி மாதம் தட்சிணாயனத்தின் கடைசி மாதமாகும். தேவர்களுக்கு இது அதிகாலைப் பொழுதாகும். இந்த காலமானது தேவர்களுக்கு பிரம்மமுகூர்த்த காலமாகும்.
இவ்வேளையில் தில்லையில் குடிகொண்டு அருள்புரியும் எம்பெருமான் நடராஜனைக் காண தேவர்கள் கூடுவதாக ஐதீகம்.
மார்கழி திருவாதிரை நாளில், அதிகாலை நான்கு மணிக்கே எழுந்து நீராடி, சிவநாமம் ஜெபித்து திருநீறு பூச வேண்டும்.
சிவாலயம் சென்று நடராஜரையும், சிவகாமி அம்மனையும் தரிசிக்க வேண்டும். காலையில் நடக்கும் தாண்டவ தீபாராதனையைக் காண வேண்டும்.
சுவாமிக்கு களி படைத்து குழந்தைகளுக்கு வழங்க வேண்டும்.
பகலில் சாப்பிடக்கூடாது.
சிவபுராணம், தேவாரம், திருவாசகத்தை பக்தியுடன் படிக்க வேண்டும்.
இரவில் எளிய உணவு சாப்பிட்டு விரதம் முடிக்கலாம்.
இந்த விரதத்தை ஒவ்வொரு மாதமும் திருவாதிரை நட்சத்திரத்தன்று தொடரவும் செய்யலாம்.
ஒரு வருடம் திருவாதிரை விரதமிருந்தால், வாழ்வுக்குப் பின் கயிலாயத்தில் வாழும் பேறு பெறலாம் என்பது நம்பிக்கை.
நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியவற்றை பஞ்சபூதங்களின் சேர்க்கையாக இந்த உலகம் இருக்கிறது.
இந்த ஐந்திற்கும் உரிய இடங்களாக ஐந்து திருத்தலங்களானது சிதம்பரம் (ஆகாயம்), திருவண்ணாமலை (நெருப்பு), திருவானைக்காவல் (நீர்), காளஹஸ்தி (காற்று), காஞ்சிபுரம் அல்லது திருவாரூர் (நிலம்) ஆகியவை.
இதில் முதன்மையான ஆலயத்தில் சிதம்பரத்தில் நடராஜன் ஆடும் ஆனந்த தாண்டவத்தை தரிசிப்பவர்கள் முக்தி நிலையை அடைவார்கள்.
January 9, 2020
Simply wish to say your article is as amazing. The clarity for
your put up is just excellent and that i can suppose you are a professional in this subject.
Well with your permission allow me to clutch your feed to keep
up to date with coming near near post. Thanks 1,000,000 and please continue the
rewarding work.
January 9, 2020
I’m extremely inspired together with your writing
abilities as smartly as wih the format too your weblog.
Is that this a paid subject maztter orr did you modify it your self?
Either way keep up the nice high quality writing, it’s rare to see a nice blog like this onne nowadays..