சுர்ஜித் வில்சன்:
நண்பர்களே!!
கடந்த நான்கு நாட்களாக தொடர்ந்த சோகம் சோகமாகவே முடிந்துவிட்டது.ஆனால் இதிலிருந்து நாம் முக்கியமான விஷயம் ஒன்றை கவனிக்கவேண்டியுள்ளது?
ஊடகங்கள் ஒரு அரசை ஆள்கின்றன என்ற வசனங்களை பல இடங்களில் பலரும் கேள்விபட்டிருப்பாேம்.
ஆனால் இன்று நம் கண்ணால் நேரில் காண்கிறோம்? ஆம் அதுதான் கடந்த நான்கு நாட்களாக கண்ட காட்சி.
ஒரு அரசாங்கம் மீடியா உ்பட அனைத்தை யும் தன்கட்டுக்குள் வைத்து நிர்வகிக்க வேண்டும் .
ஆனால் மீடியாக்கள் தன்கட்டுப்பாட்டில் நான்கு நாட்களாய் அரசாங்கத்தை இயங்கச்செய்தன என்றால் அது மிகையாகாது.
என்னதான் எடப்பாடியார் மிகவும் திறமையாக ஆட்சி நடத்திவருகிறார் என நாம்பாராட்டினாலும் .இது போன்ற மீடியாக்களின் வலையில் தமிழக அரசு நான்கு நாட்கள் கட்டப்பட்ட அவலங்கள் வெட்கக்கேடானது.
நடந்தது ஒரு சோக சம்பவம் என்பதிலோ அதில் அரசுக்கு மீட்கும் கடமை முழுமையாக உண்டு என்பதையும் யாரும் மறுக்க முடியாது.
எனினும் நாட்டின் ஏதோ ஒரு குக்கிராமத்தில் அந்தக்குடும்பத்தின் அலட்சியத்தால் ஏற்பட்ட தவறினால் நடந்த சம்பவத்தை நாட்டின் பெருவாரியான மக்கள் கொண்டாடும் ஒரு முக்கிய நாளில் வேண்டு மென்றே தன்னுடைய அனைத்து நிகழ்ச்சிகளை ரத்து செய்து
(விளம்பரங்கள் மட்டும் ரத்து செய்யவில்லை என்பதையும் கவனிக்கவேண்டும்.)
ஒரு மாநிலத்தையே திட்டமிட்டு சோக மாயையில் ஆழ்த்திவிட்டன .
அதைவிட அரசாங்கத்தை தன்பிரச்சார பலத்தை வைத்து நான்கு நாட்களாய் நடுக்காட்டுப்பட்டியை கவனக்கும்படி வைத்தன.
இதில் ஆளும் கட்சியும் மீடியாவின் மிரட்டலுக்கு பணிந்து விட்டனர் காரணம் ஓட்டு அரசியல் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.
என்ன காரணமாக இருந்தாலும் இதுபோன்ற மீடியாவின் விருப்பத்திற்காக நடவடிக்கை எடுத்தது அரசாங்கம் மீடியாவின் காலடியில் வீழ்ந்து விட்டதை காட்டுகிறது.
அப்படியெனில் குழந்தையை மீட்க தீவிர நடவடிக்கை எடுத்தது தவறா என்று பலர் கேட்பார்கள்.
நிச்சயமாக நடவடிக்கை தீவிரமாக எடுப்பது அரசின் கடமைதான் . அதற்கு அந்த மாவட்ட ஆட்சியரும் சம்பந்தப்பட்ட பகுதியின் தீயனைப்பு படையினரும் உள்துறையின் மந்திரியின் குழந்தையை மீட்க தேவையான அனைத்து நடவடிக்கையும் எடுங்கள் என்ற ஒரு உத்திரவும் மட்டுமே போதுமானது.
இப்படி மூன்று மந்திரிகள் மூன்றுநாளாய் ஒரு கிராமத்தில் முகாமிட்டு எதிர்கட்சியின் ஸ்டாலின்தவிர அனைத்து தலைவர்கள் வரை எங்கே நாம் அங்கு செல்லாவிட்டால் நாளை அதை வைத்து நமக்கு எதிராக பிரச்சாரம் செய்வார்களோ என்று பயந்து அனைவரும் சென்று?
இவையனைத்துக்கும் காரணம் எது?
மந்திரிகள் மனதில் , எதிர்கட்சி தலைவர்கள் மனதில் குழந்தை மீதான கரிசனமா?
இல்லை தங்கள் செல்வாக்கை நிலை நிறுத்திக்கொள்ளும் சுய நலம் காரணமா?
இதை தீர்மானிக்கும் பொறுப்பை உங்களிடமே விட்டு விடுகிறேன்.
இவையெல்லாவற்றையும் விடமீடியாவின் அக்கிரமம் என்பது பல கோடிமக்கள் கொண்டாடும் தீபாவளியை ஈடு வைத்து பிரச்சாரம் தீவிரமாக நடந்ததுதான்.
இந்த ஆண்டில் மட்டுந்தான் ஒரு குழந்தை மரணத்துக்கு போராடியதா?
மரணமே இல்லாத ஒரு தீபாவளியை யாராவது சுட்டிக்காட்ட முடியுமா?
ஆனால் சுர்ஜித் வில்சனுக்கும் தீபாவளிக்கும் எந்த சம்பந்தமுமில்லை என்பதையும் .அவன் இயல்பாய் இருந்தாலும் வில்சன் தீபாவளி கொண்டாட மாட்டான் என்பதும் தெரிந்தும் வில்சனுடன் தீபாவளியை இந்தக்குழந்தையுடன் தொடர்பிட்டு குழந்தை மீட்கப்படாத வரை தீபாவளி கொண்டாட மாட்டோம் என்று பரப்புரை செய்ததன் மூலம் பலகோடி மக்களை சில ஊடகங்கள் திட்டமிட்டு செயல்பட்டிருக்கின்றன.
இப்படியான மக்களை தங்கள் நிலைக்கு இழுக்கும் ஊடகங்கள் எதிர்காலத்தில் நினைத்தால் தேசத்தின் ஒற்றுமை, அமைதி , பாதுகாப்பு ஆகியவற்றுக்கு எமனாகி விடுவார்கள் என்பதில் எந்த சந்தேகமுமில்லை !
மத்திய மாநில அரசுகள் மீடியாவை தங்கள் கட்டுக்குள் வைக்கவேண்டும்
தவறினால் மீடியாவை தன்கைக்குள்வைத்திருக்கும் சில அந்நிய சதியாளர் நாட்டை துண்டாடுவதை பிற்காலத்தில் தவிர்க்கவே இயலாது என்பதை அரசுகள் உணர்ந்து விரைவான நடவடிக்கை எடுக்கவேண்டும்.
Share this: