September 18 2019 0Comment

#திருத்தேவனார்த் தொகை:

திருத்தேவனார்த் தொகை என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் #திருநாங்கூர் பதினொரு திருப்பதிகளுள் ஒன்று.
இதனைக் #கீழ்ச்சாலை என்றும் குறிப்பிடுவர். திருநாங்கூரிலிருந்து சுமார் 1 மைல் தொலைவில் மன்னியாற்றின் தென்கரையில் இக்கோயில் அமைந்துள்ளது.
திரு நாங்கூரில் பதினொரு திருப்பதிகளிலும் கோயில் கொண்டுள்ள நாராயணனைச் சேவிக்க தேவர்கள் வந்த போது தேவர்கள் இந்த இடத்தில் கூட்டம் கூட்டமாய் அவை கூடி நின்றதால் தேவனார்த் தொகை ஆயிற்று.
#திருத்தேவனார்த் தொகை
பெயர்: மாதவப் பெருமாள் கோயில்
திருத்தேவனார்த் தொகை
அமைவிடம்
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:நாகப்பட்டினம்
அமைவு:கீழ்ச்சாலை, திருநாங்கூருக்கு அருகில்
#கோயில் தகவல்கள்:
கட்டடக்கலை வடிவமைப்பு:
திராவிட கட்டிடக்கலை
விவரம் பெயர்:இறைவன் தெய்வநாயகன், மாதவநாயகன்,இறைவி கடல்மகள் நாச்சியார்
தீர்த்தம்: சோபன புஷ்கரணி மற்றும் தேவஸபா புஷ்கரணி
விமானம் :சோபன விமானம்
Share this:

Write a Reply or Comment

2 × two =