October 28 2018 0Comment

96 vs 86

96
திரை அரங்கு சென்று 96  படம் பார்த்தேன்.
என் கதையை திருடி 
விஜய் சேதுபதி, த்ரிஷாவை 
வைத்து எடுக்கப்பட்ட படம்
என ஒவ்வொருவரும் சொல்லாமல்
சொல்லும் வகையில் உள்ளது படம்.
தியேட்டர்ல த்ரிஷா 
வருவதற்கு எல்லாம் 
கை தட்டி கொண்டாடும் 
மக்கள் உள்ளத்தை
பார்த்தபோது
எவரும்  
சிறு வயது 
காதலை 
மறக்கவில்லை என்பதை
அனுமானிக்க முடிகின்றது…
காமம் இல்லாத
காதலை
கொடுத்த இயக்குனருக்கு
பாராட்டுக்கள்
யமுனை ஆற்றிலேயே
எடுத்துவிட்டு
ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்
என மாற்றி, 
படத்திற்கு 86
என்று பெயர் 
வைத்து இருந்தால்
நிச்சயமாக 
இயக்குனர்
பெரிய
சட்ட போராட்டத்தை
சந்தித்திருந்து இருப்பார்.
Dr.ஆண்டாள் P சொக்கலிங்கம்
Share this:

Write a Reply or Comment

six + four =