2014 தமிழ்நாடு பாராளுமன்ற தேர்தல் கருதுக்கணிப்பு முடிவுகள்…

என்றும் அன்புடன்

அனைவருக்கும் வணக்கம்…

24-04-2014 அன்று தமிழ்நாட்டில் நடக்கவுள்ள நாடாளுமன்றத்திற்கான தேர்தல் கருத்து கணிப்பை 4 நாட்களுக்கு முன் நாங்கள் முகநூலில்(Facebook) – ல் வெளியிட்டு இருந்தோம்… அதற்கு நிறைய கண்டனம், நிறைய பாராட்டுகள்….

19-04-2014 அன்று வெளியிட்ட கருத்து கணிப்பு 14-04-2014 வரை நிலவிய சூழ்நிலையின் அடிப்படையில் சொன்னது….

21-04-2014 நிலவரப்படி நாங்கள் ஏற்கனவே பகிர்ந்துகொண்ட தகவல்களில் சில மாற்றங்கள் உண்டு….அதை இத்துடன் வெளியிடுகின்றோம்…

கருத்து கணிப்பை படிப்பதற்கு முன் சில விஷயங்களை உங்கள் பார்வைக்கு வைக்கிறோம்…

  1.  பணம் வாங்கி கருத்து கணிப்பை வெளியிடும் அளவிற்கு எங்களுடைய பொருளாதர நிலைமை இல்லை…
  2.  இந்தக் கணிப்பு முழுக்க முழுக்க எங்களின் தொடர்புகளை மையப்படுத்தியும், நேரடியாக களத்திற்கு சென்று சந்தித்த அனுபவங்களின் அடிப்படையில் சொல்லியிருக்கிறோம்…
  3.  அந்த வகையில் மேலும் கணிப்பிற்கு மெருகுகூட்டி தற்போது வெளியிடுகின்றோம். இது யாரையும் சந்தோஷப்படுத்தவோ, கஷ்டப்படுத்தவோ கிடையாது. எங்களுடைய கணிப்பின் நம்பகத்தன்மை குறித்து உங்களுக்கு ஐயப்பாடு இருந்தால் எங்களை விமர்சிக்கலாம். அதை விடுத்து எந்த அரசியல் தலைவர்களையும் விமர்சித்து கருத்து போட வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கின்றோம்… எந்த கட்சித் தலைவர்களை குறித்து தவறாக, ஆபாசமாக கருத்து தெரிவித்தால் அது நீக்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்…
  4.  எங்கள் குழுவின் தலைவர்  திரு.ஆண்டாள் பி.சொக்கலிங்கம் – த்திற்கு 1996 – ல் இருந்து மனதிற்குள் தேர்தல் கணிப்புகள் இருந்தாலும் முதன் முதலாக அதை நண்பர்களுக்கு வெளிப்படுத்தியது 2006, 2009 தேர்தல்களில்தான்…
  5.  குறிப்பாக 2011 – ம் வருட தேர்தல் பற்றி, ஜெயா தொலைக்காட்சி நிகழ்ச்சியில் திரு.ஆண்டாள் பி.சொக்கலிங்கம் சொன்ன கருத்து கணிப்பு துல்லியத்தின் உச்சக்கட்டம்….
  6.  எங்கள் குழுவின் தலைவர் திரு.ஆண்டாள் பி.சொக்கலிங்கம் அவர்களுக்கு தன்னுடைய தொழில்கள் மூலம் பரந்து ,விரிந்த தொடர்புகள் உண்டு…
  •  தமிழகத்தை பொறுத்தவரை திரு.ஆண்டாள் பி.சொக்கலிங்கம் – த்திற்கு தே.மு.தி.க – வின் மிக முக்கிய முன்னணி தலைவர்களுடனும், தி.மு.க – வின் மிக முக்கிய முன்னணி தலைவர்களுடனும் மிக நெருங்கிய பழக்கம் உண்டு..
  •  அதே போல் திரு.அன்புமணி ராமதாஸ் அவர்களின் மிக முக்கிய நண்பர்களுடன் நெருக்கமான பழக்கமுண்டு.
  •  அதே போல் மிக முக்கிய காங்கிரஸ் தலைவர் ஒருவர் திரு.ஆண்டாள் பி.சொக்கலிங்கம் – த்திற்கு நெருங்கிய சொந்தக்காரர் தான்.
  •  அதே போல் திரு.வைகோ – வை நன்கு தெரிந்த நண்பர்களுடன் திரு.ஆண்டாள் பி.சொக்கலிங்கம்– த்திற்கு நெருக்கமான பழக்கமுண்டு.
  •  அதே போல் பா.ஜ.க – வின் முன்னால் மாநில தலைவர்  குடும்பத்தினருடன் திரு.ஆண்டாள் பி.சொக்கலிங்கம்– த்திற்கு நல்ல நட்பு உண்டு.
  •  அதே போல் அ.தி.மு.க – வின் முக்கிய நபர்களுடன் திரு.ஆண்டாள் பி.சொக்கலிங்கம்– த்திற்கு நல்ல நட்பு உண்டு.
  • அந்த வகையில் தனக்கு உள்ள நல்ல அரசியல் அறிவால் பொது ஜனங்களுக்கு தெரியாத நிறைய உள்விஷயங்களைப் பற்றிய தெளிவும் உண்டு என்பதை உங்களுக்கு சொல்ல கடமைப்பட்டுள்ளோம்…

இந்த தேர்தலைப் பற்றி திரு.ஆண்டாள் பி.சொக்கலிங்கம் – த்தின் சொந்த கருத்துக்கள் கீழ்க்கண்டவாறு…..

  •  தமிழ்நாட்டில் கோவை, மதுரை – யை விட தூத்துக்குடி – யில் மோடி அலை என்பதை கண் கூடாக பார்க்க முடிந்தது…
  1. அ.தி.மு.க: இந்த தேர்தலில் அம்மா அவர்கள் தவறாக முடிவு எடுத்து விட்டார்கள். காரணம் அவர்கள் பா.ஜ.க, கொங்கு ஈஸ்வரன் கட்சி  மற்றும் ம.தி.மு.க – உடன் கூட்டணி சேர்ந்து கீழ்க்கண்டவாறு போட்டியிட்டு இருந்தால் 39/39 –  அ.தி.மு.க  – விற்கே.

அ.தி.மு.க – 30

பா.ஜ.க – 4

ம.தி.மு.க – 4

கொங்கு (ஈஸ்வரன்) – 1

  • காரணம்: மக்களுக்கு அ.தி.மு.க – வின் மேல் கோபம் தான் இருக்கிறதே தவிர வெறுப்பு இல்லை. லஞ்சம், சட்டம், ஒழுங்கு பற்றி பாமர மக்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை..
  • தடையில்லா மின்சாரம் கொடுக்க முடியாததற்கு தி.மு.க  – வும் காரணம் என்கின்ற எண்ணம் மக்களிடையே பரவலாக உள்ளது. v  அம்மாவின் தைரியம் பற்றி நான் சந்தித்த அனைவரும் பெருமைப்பட்டு பேசுகின்றார்கள்…
  • ஆனால் வெற்றி பெற்ற பிறகு பா.ஜ.க – உடன் போய்விடலாம் என்ற காரணத்திற்காக கம்யூனிஸ்ட் கட்சிகளை வெளியேற்றிய பிறகு, கம்யூனிஸ்ட்டுகள் அ.தி.மு.க – வின் வாக்கு வங்கியில் சேதாரம் உண்டு பண்ணுகிறார்கள் (திருப்பூர், தென்காசி, கன்னியாகுமரி, கோவை , திருநெல்வேலி, வடசென்னை);
  • அ.தி.மு.க தொடக்கத்தில் இருந்தே பா.ஜ.க  -வை விமர்சனம் செய்யாத காரணத்தால் 90% முஸ்லீம் மற்றும் கிறிஸ்துவ வாக்குகளை தி.மு.க – விடம் இழக்கிறது.
  • இரண்டு முக்கியமான தலித் கட்சிகளும் தி.மு.க – விடம் உள்ளதால் அ.தி.மு.க தங்களுடைய தலித் வாக்கு வங்கியிலும் பெரிய இழப்பை சந்திக்கிறது.
  • அதே போல் வன்னிய சமுதாயத்தின் மேல் போடப்பட்ட வழக்குகளினால் அ.தி.மு.க  வன்னியர் வாக்குகளையும் இழந்து நிற்கிறது…
  • பெரும்பான்மை கொங்கு மக்கள் திரு.ஈஸ்வரன் கட்சிக்கு ஆதரவாக இருப்பதும் அ.தி.மு.க – விற்கு ஒரு குறையே…
  • ராஜீவ் கொலை கைதிகள் விடுவிப்பு விஷயத்தில் திரு.வைகோ மட்டும் அ.தி.மு.க அணியில் இருந்து இருந்தால் அ.தி.மு.க – வின் நிலையே வேறாக இருந்து இருக்கும்.. அம்மா செய்த இந்த மாபெரும் சாதனையை  கூட அ.தி.மு.க  வினால் உரக்க சொல்ல முடியாமல் போனது வருத்தத்துக்குரிய விஷயம்.
  1. பா.ஜ.க மற்றும் தே.மு.தி.க: அவர்களுடைய பலம் / பலவீனம் இரண்டுமே கேப்டன் அவர்கள் தான்… எனக்கு தெரிந்த வரை தே.மு.தி.க – வினர் சொல்லும் கணக்கு தே.மு.தி.க – விற்கு 15% + பா.ஜ.க – விற்கு 10% + பா.ம.க. – விற்கு 5% + கொங்கு மற்றும் ம.தி.மு.க – விற்கு 5% – ஆக மொத்தம் 30% வாக்கு தங்களுக்கு வரும் என்று சொல்கிறார்கள்…

உண்மையிலேயே சென்ற சட்டசபை தேர்தலில் 100% தி.மு.க எதிர்ப்பலை இருந்ததாலும், அம்மா தான் தி.மு.க – விற்கு சரியான மாற்று என்பதாலும் தான் அ.தி.மு.க கூட்டணி மகத்தான வெற்றி பெற்றது. கேப்டன் – ஆல் அந்த வெற்றி இல்லை என்பது தான் உண்மை…

கேப்டன் அந்த கூட்டணியில் இல்லாமல் இருந்து இருந்தால் கூட அ.தி.மு.க – விற்கு 20 M.L.A அதிகம் கிடைத்து இருப்பார்கள். இந்த உண்மை புரியாமல் தங்களுக்கு 15% வாக்கு வங்கி தமிழகம் முழுவதும் இருக்கிறது என்று பா.ஜ.க – வை நம்பவைத்தது வேண்டுமானால் கேப்டன் – னின் தனி மனித சாதனையாக இருக்கலாம்.. ஆனால் உண்மையிலேயே 5% வாக்கு வங்கி மட்டுமே வைத்து இருக்கும் கேப்டன் தே.மு.தி.க – வை தமிழகத்தில் 3 – வது பெரிய கட்சியாக காட்டிக் கொள்ளவும், 2016 சட்டசபையை மனதில் கொண்டு பா.ஜ.க –வையும், பா.ம.க – வையும், ம.தி.மு.க – வையும் தனக்கு கீழ் கொண்டு வந்து தன்னை தமிழகத்தின் 3 – ஆம் அணியின் முதல்வர் முகமாக காட்டிக் கொள்ளும் வகையில் எடுத்த இந்த முயற்ச்சியால் பா.ம.க – வினர் துவண்டு போய் விட்டனர்….

காரணம்: திரு.இராமதாஸ் அவர்களின் கொள்கையில் எனக்கு வேறுபாடுகள் நிறைய இருந்தாலும் வன்னிய சமுதாயத்தில் திரு.இராமதாஸை போன்ற உண்மையான சமுதாய போராளி இன்னொரு முறை பிறப்பார் என்பது நடக்காத விஷயம்… பா.ம.க – வினால் வன்னியருக்கு கிடைத்த நல்ல விஷயங்கள் நிறைய. இப்படி பின்புலம் உள்ள ஒரு இயக்கத்தை கூட்டணியில் தனக்கு கீழ் தான் இருக்க வேண்டும் என்கின்ற கேப்டனின் தவறான உத்தியால் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், சேலம் போன்ற தொகுதிகள் தே.மு.தி.க – விற்கு கிடைத்திருந்தாலும் சேலம் பா.ம.க வேட்பாளராக அறிமுகம் செய்யப்பட்டிருந்த திரு.அருள் அவர்களின் தொகுதியை தே.மு.தி.க திரு.சுதீஷ் – க்காக எடுத்து கொண்ட விதம் அந்தக் தொகுதியில் பெரும்பான்மையாக உள்ள வன்னிய மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக திரு.அருள் அவர்களுக்கு அனைத்து தரப்பு மக்களிடையே நல்ல அபிமானம் இன்று வரை உள்ளது….

சேலம் தொகுதியை தே.மு.தி.க பெற்ற விதம் தான் திரு. இராமதாஸை பா.ஜ.க கூட்டணியில் ஒன்றிணைந்து தேர்தல் பணி ஆற்ற விடாமல் தடுத்து உள்ளது. தே.மு.தி.க – வினரிடம் இதுபற்றி கேட்டால் பா.ம.க வலுவாக உள்ள எல்லா தொகுதிகளையும் அவர்களுக்கு கொடுத்து விட்டால் அவர்களால் கூட்டணிக்கு என்ன பயன் என்று கேள்வி கேட்பார்கள். அடிப்படையில் தே.மு.தி.க – வே பா.ம.க பகுதிகளில் தான் அதிகம் வலுவாக வளர்ந்த இயக்கம்… பரஸ்பரம் இரண்டு இயக்கங்களுக்கும் நிறைய முரண்பாடுகளும், வெறுப்புகளும், விரோதமும் இருந்து வந்தது… தே.மு.தி.க – வின் இந்த பிடிவாதத்தால் தே.மு.தி.க வாக்கு பா.ம.க – விற்கும், பா.ம.க வாக்கு தே.மு.தி.க – விற்கும் முழுவதுமாக கிடைக்க போவதில்லை. பா.ஜ.க – வும் இந்த விஷயத்தில் தே.மு.தி.க – விற்கு தான் அனுசரணையாக இருந்தது. தே.மு.தி.க 14 தொகுதியை வாங்கியதை வேண்டுமானால் சாதனையாக நினைக்கலாம். ஆனால் 10 தொகுதிகளில் அது எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்த போகின்றது என்பது தான் நடைமுறை உண்மை… இதனால் பா.ஜ.க கூட்டணிக்கு தான் நஷ்டம் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.

  1. பா.ம.க:
  • தனித்து நின்று இருந்தால் கூட ஆரணி, அரக்கோணம், சிதம்பரம், கடலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி போன்ற தொகுதிகளில் வன்னிய மக்களிடையே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி குறைந்தது 3 தொகுதிகளில்  வெற்றி பெற்று இருப்பார்கள்.
  • கேப்டன் முதலமைச்சர் ஆனால் நிறைய நல்லது பண்ணுவார் என்கின்ற மோடியின் வாதம் பா.ம.க – வின் தே.மு.தி.க எதிர்ப்பு அரசியல் நீர்த்து போக செய்து விட்டது…
  • தி.மு.க, அ.தி.மு.க – கூட பா.ம.க – வை அரசியல் ரீதியாக உடைத்து இருக்கலாம். ஆனால் தே.மு.தி.க – வினால் தன் அடித்தளத்தையே பறி கொடுத்துவிட்ட பா.ம.க – வின் எதிர்கால அரசியல் நிலைப்பாடு ஒரு பெரிய கேள்விக்குறிதான்.
  1. ம.தி.மு.க:

திரு.வைகோ – வை பொறுத்தவரை பா.ஜ.க கூட்டணியில் தன்னை வளர்த்து கொள்ள இருக்கிறார்… பா.ஜ.க கூட்டணியில் அதிகம் பலன் பெறப்போகும் ஒரே கட்சி ம.தி.மு.க தான்.

  • 9 பிரதம மந்திரிகளை கேள்வி கேட்ட ஒரு தலைவரை வாக்கு என்கின்ற ஒரு விஷயத்திற்காக, கேப்டன் மக்களிடம் அறிமுகப் படுத்தியது வாக்காளர்களிடம் வைகோ மேல் பரிதாபத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்பது தான் உண்மை…
  • வைகோ விஷயத்தில் இது ஒரு நெருடல் என்றாலும் இதைவிட பெரிய நெருடல் கலைஞர் குடும்ப பிரச்சினையில் உள்நுழைந்து குளிர்காகாய்ந்தது கொஞ்ச நேரம் பத்திரிகை படிப்பவர்களை கூட கூச்சப்பட வைத்து விட்டது…
  1. தி.மு.க:
  • தங்களிடம் இருந்த யாரையும் நழுவவிடாமல் பார்த்து கொண்டது;
  • த.மு.மு.க மற்றும் புதிய தமிழகத்தை சேர்த்து கொண்டது
  • ஓட்டு மொத்த சிறுபான்மை மற்றும் தாழ்த்தப்பட்டவர்களை தன்பக்கம் திருப்பி கொண்டது.
  • தவ்ஹீத் ஜமாத் ஆதரவை 36 தொகுதிகளில் பெற்றது v  காங்கிரஸிடம் இருந்து கழன்று கொண்டது
  • அம்மா – வை பா.ஜ.க மேல் கோபப்பட வைத்தது
  • தளபதி அவர்களின் பிரச்சாரம்
  • கருத்து கணிப்புகளில் முதலில் 5 இடம், பிறகு 10 இடம், கடைசியில் 17 இடம் என கணிக்கும் வகையில் நடந்து கொண்டது சிறப்பு
  • கம்யூனிஸ்ட் – களை சேர்த்து கொண்டு இருந்தால் 5 தொகுதிகளில் கூடுதல் வெற்றி கிடைத்து இருக்கும்.
  • இந்த தேர்தலில் பா.ஜ.க அணி தி.மு.க, அ.தி.மு.க – விற்கு மாற்றாக வெற்றி பெறும் அணி என்கின்ற ஒரே ஒரு விஷயம் தி.மு.க – விற்கு மிகப் பெரிய பலம் ஆகிவிட்டது.

தொகுதிகள்:

1. திருவள்ளூர் (தனி)
ரவிக்குமார் (வி.சி) பி.வேணு கோபால் வி.யுவராஜ் மோ.ஜெயகுமார் ஏ.எஸ்.கண்ணன் (சி.பி.ஜ) BSP / AAP
• அ.தி.மு.க வேட்பாளர் வெற்றி பெறுவதை தடுக்க முடியாது…

2. வட சென்னை
ஆர். கிரிராஜன் டி.ஜி. வெங்கடேஷ் பாபு சவுந்திரபாண்டியன் (தே.மு.தி.க) பிஜுசாக்கோ உ.வாசுகி (சி.பி.எம்) BSP / AAP / பால் கனகராஜ்
• அ.தி.மு.க வெற்றி பட்டியலில் இந்த தொகுதிக்கு இடம் உண்டு.

3. தென் சென்னை
டி.கே.எஸ். இளங்கோவன் ஜெ. ஜெயவர்தன் இல.கணேசன் எஸ்.வி.ரமணி
– BSP / AAP / Traffic ராமசாமி
• தி.மு.க வேட்பாளர் பணமே செலவு செய்யவில்லை என்றாலும் நல்ல வித்தியாசத்தில் வெற்றி பெறக்கூடிய தொகுதி…
• காரணம்: இல.கணேசன் வாங்க போகும் 1.5 லட்சம் வாக்குகளும், ஆம் ஆத்மி பெறப் போகும் 30 ஆயிரம் வாக்குகளும் தி.மு.க – வை வெற்றி கோட்டிற்கு இட்டுச் செல்கின்றது…

4. மத்திய சென்னை
தயாநிதிமாறன் எஸ். ஆர். விஜயகுமார் சி.ரவிந்திரன் (தே.மு.தி.க) சிடி.மெய்யப்பன் – BSP / AAP
• தி.மு.க வெற்றி – உறுதிப்படுத்தப்பட்ட ஒன்று. பல்வேறு காரணங்களுக்காக…

5. ஸ்ரீபெரும்புதூர்
எஸ். ஜெகத்ரட்சகன் கே.என். ராமசந்திரன் மாசிலாமணி (ம.தி.மு.க)
அருள் அன்பரசு – BSP / AAP
• பா.ஜ.க அணியின் வாக்கு பிரிப்பால் தி.மு.க வெற்றி பெறக் கூடிய தொகுதி,

6. காஞ்சிபுரம் (தனி)
ஜி. செல்வம் மரகதம்குமாரவேல் சத்யா (ம.தி.மு.க) டி. விஸ்வநாதன் – BSP
• பா.ஜ.க அணியின் வாக்கு பிரிப்பால் தி.மு.க வெற்றி பெறக் கூடிய தொகுதி.

7. அரக்கோணம்
என். ஆர். இளங்கோ கோ.ஆரி அ.வேலு (பா.ம.க) நா.சே.ராஜேஷ் – BSP / AAP
• பா.ஜ.க அணியின் வாக்கு பிரிப்பால் தி.மு.க வெற்றி பெறக் கூடிய தொகுதி.

8. வேலூர்
அப்துல்ரகுமான் (இ.யு.மு.லீ) பா.செங்குட்டுவன் ஏ.சி.சண்முகம் விஜய். இளஞ்செழியன் – BSP / AAP
• கே.வி.குப்பம் – பகுதியில் தி.மு.க வாக்குகள் ஒழுங்காக தி.மு.க கூட்டணி வேட்பாளர்க்கே விழுந்தால் தி.மு.க கூட்டணி வெற்றி உறுதி.

9. கிருஷ்ணகிரி
பி. சின்னபில்லப்பா கே.அசோக்குமார் ஜி.கே.மணி (பா.ம.க) ஏ.செல்லகுமார் – BSP / JDU
• அ.தி.மு.க வெற்றி பெறும்….

10. தர்மபுரி
ரா. தாமரை செல்வன் பி.எஸ். மோகன் அன்புமணி ராமதாஸ் (பா.ம.க) ராமசுகந்தன் – BSP
• அ.தி.மு.க கண்டிப்பாக வெற்றி பெறும்…
o சமீபத்தில் அ.தி.மு.க – வில் சேர்ந்த பு.தா.இளங்கோவன் அந்த வெற்றிக்கான காரணமாக இருப்பார்

11. திருவண்ணாமலை
சி. என். அண்ணாதுரை ஆர். வனரோஜா எதிரொலி மணியன் (பா.ம.க)
ஏ.சுப்பிரமணியம் – BSP
• பா.ஜ.க அணியின் ஒட்டுப்பிரிப்பாலும், தி.மு.க – வின் தொண்டர் பலத்தாலும், பெருபான்மை முதலியார் வாக்குகளாலும் தி.மு.க வெற்றி பெறும்.

12. ஆரணி
ஆர். சிவானந்தம் வெ. ஏழுமலை ஏ.கே.மூர்த்தி (பா.ம.க) எம்.கி. விஷ்ணுபிரசாத்
-BSP
• பா.ஜ.க அணியின் ஒட்டுப்பிரிப்பாலும், தி.மு.க – வின் தொண்டர் பலத்தாலும் தி.மு.க குறைந்த வாக்குகள் வித்தியாசத்திலாவது கண்டிப்பாக வெற்றி பெறும்.

13. விழுப்புரம் (தனி)
சோ. முத்தையன் எஸ். ராஜேந்திரன் கே.உமாசங்கர் (தே.மு.தி.க) கே.ராணி
ஜி.ஆனந்தன் (சி.பி.எம்) BSP
• அ.தி.மு.க வெற்றி பெறும்….

14. கள்ளக்குறிச்சி
ரா. மணிமாறன் க. காமராஜ் வி.பி ஈஸ்வரன் (தே.மு.தி.க) ஆர்.தேவதாஸ் – BSP / AAP
• அ.தி.மு.க வெற்றி பெறும்…

15. சேலம்
செ. உமாராணி வி. பன்னீர்செல்வம் எல்.கே.சுதீஷ் (தே.மு.தி.க) மோகன் குமாரமங்கலம்
-BSP / AAP
• பா.ஜ.க அணியின் வாக்கு பிரிப்பாலும், தி.மு.க – வின் வேட்பாளர் கொங்கு வேளாளர் என்பதினாலும் வெற்றி பெறக்கூடிய தொகுதி…
• வீரபாண்டி, எடப்பாடி பகுதிகளில் தி.மு.க – விற்கு வாக்கு குறையும்.

16. நாமக்கல்
செ. காந்திசெல்வன் பி. ஆர். சுந்தரம் எஸ்.கே.வேல் (தே.மு.தி.க) ஜி.ஆர் சுப்பிரமணியம் – BSP / AAP
• பெரும்பான்மையினமான வேளாளர் கவுண்டர் இனத்தை சேர்ந்த காந்தி செல்வன் வெற்றி நிச்சயம்…
• மேலும் பா.ஜ.க கூட்டணி வாக்கு பிரிப்பால் தி.மு.க – வின் வெற்றி வித்தியாசம் அதிகமாக இருக்கும்.

17. ஈரோடு
எச். பவித்ரவள்ளி எஸ். செல்வகுமார சின்னையன் அ.கணேச மூர்த்தி (ம.தி.மு.க) பி.கோபி – BSP / AAP
• அ.தி.மு.க வெற்றி பெறும்.

18. திருப்பூர்
எம். செந்தில்நாதன் வி. சத்யபாமா என்.தினேஷ்குமார் (தே.மு.தி.க) ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கே. சுப்புராயன் (சி.பி.ஜ) BSP / AAP
• அ.தி.மு.க வெற்றி பெறும்.

19. நீலகிரி (தனி)
ஆ. ராசா சி. கோபால கிருஷ்ணன் பி.காந்தி – BSP / AAP
• வெற்றி / தோல்வி தீர்மானிக்க முடியாத தொகுதி.
• தொகுதி முழுக்க தி.மு.க வேட்பாளருக்கு செல்வாக்கு இருந்தாலும் Advantage: அ.தி.மு.க – வுக்கே.

20. கோயம்புத்தூர்
கி. கிருஷ்ணகுமார் பி. நாகராஜன் சி.பி. ராதாகிருஷ்ணன் ஆர்.பிரபு பி.ஆர்.நடராஜன் (சி.பி.எம்) BSP / AAP
• சிறுபான்மை சமுதாயத்தால் இந்த தொகுதியில் பெரிய போட்டிக்கிடையே தி.மு.க வெற்றி பெறும்…

21. பொள்ளாச்சி
நா. பழனிசாமி சி.மகேந்திரன் ஈஸ்வரன் (கொ.ம.க) செல்வராஜ் – BSP
• வெற்றி / தோல்வி தீர்மானிக்க முடியாத தொகுதி.
• தொகுதி முழுக்க அ.தி.மு.க வேட்பாளருக்கு செல்வாக்கு இருந்தாலும் Advantage: தி.மு.க – வுக்கே.

22. திண்டுக்கல்
எஸ். காந்திராஜன் எம். உதயகுமார் ஏ.கிருஷ்ணமூர்த்தி (தே.மு.தி.க) என்.எஸ்.வி.சித்தன் என்.பாண்டி (சி.பி.எம்) BSP / AAP
• தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் சிறுபான்மையின ஆதரவோடு தி.மு.க வெற்றி பெறும்.

23. கரூர் 
ம. சின்னசாமி மு. தம்பிதுரை என்.எஸ். கிருஷ்ணன் (தே.மு.தி.க) எஸ்.ஜோதிமணி – BSP / AAP
• வெற்றி / தோல்வி தீர்மானிக்க முடியாத தொகுதி.
• தொகுதி முழுக்க அ.தி.மு.க வேட்பாளருக்கு செல்வாக்கு இருந்தாலும் Advantage: தி.மு.க – வுக்கே.
• குறிப்பு: 24 மனை செட்டியார் சங்க ஆதரவு அ.தி.மு.க – விற்கு உள்ளது.

24. திருச்சிராப்பள்ளி
மு. அன்பழகன் ப. குமார் ஏ.எம்.ஜி. விஜயகுமார் (தே.மு.தி.க) சாருபாலா தொண்டைமான் எஸ்.ஸ்ரீதர் (சி.பி.எம்) BSP / AAP
• வெற்றி / தோல்வி தீர்மானிக்க முடியாத தொகுதி.
• தொகுதி முழுக்க அ.தி.மு.க வேட்பாளருக்கு செல்வாக்கு இருந்தாலும் Advantage: தி.மு.க – வுக்கே.
• குறிப்பு: முத்தரையர் சங்க ஆதரவு அ.தி.மு.க – விற்கு உள்ளது.

25. பெரம்பலூர்
ச. பிரபு (எ) சீமானூர் பிரபு ஆர்.பி.மருதைராஜ் (எ) மருதராஜ டி.ஆர்.பாரிவேந்தர் (ஐ.ஜெ.கே) எம்.ராஜசேகரன் – BSP
• வெற்றி / தோல்வி தீர்மானிக்க முடியாத தொகுதி.
• தொகுதி முழுக்க அ.தி.மு.க வேட்பாளருக்கு செல்வாக்கு இருந்தாலும் Advantage: தி.மு.க – வுக்கே.
• குறிப்பு: முத்தரையர் சங்க ஆதரவு அ.தி.மு.க – விற்கு உள்ளது.

26. கடலூர்
கொ. நந்தகோபல கிருஷ்ணன் ஆ. அருண்மொழி தேவன் சி.ஆர்.ஜெயசங்கர் (தே.மு.தி.க) கே.எஸ்.அழகிரி கு.பாலசுப்ரமணியன் (சி.பி.ஜ) BSP / AAP
• தி.மு.க கண்டிப்பாக வெற்றி பெறும்.

27. சிதம்பரம் (தனி)
தொல். திருமாவளவன் (வி.சி) மா.சந்திரகாசி சுதா மணிரத்தினம் (பா.ம.க) பி.வள்ளல் பெருமாள் – BSP
• திருமாவளவனை தோற்க்கடிக்க வேண்டுமென்று தாழ்த்தப்பட்டவர்களை தவிர தொகுதியில் உள்ள பிற சமுதாயத்தினர் முடிவு எடுத்து வேலை பார்ப்பதால் அ.தி.மு.க வெற்றி பெறும்.

28. மயிலாடுதுறை
ஹைதர் அலி (ம.ம.க) ஆர்.கே. பாரதிமோகன் அகோரம் (பா.ம.க) மணிசங்கரயயர் – BSP
• அ.தி.மு.க வெற்றி பெறும்.

29. நாகப்பட்டினம் (தனி)
எ.கே.எஸ். விஜயன் கே.கோபால் வடிவேலு இராவணன் (பா.ம.க) டி.ஏ.பி. செந்தில்பாண்டியன் கோ.பழனிசாமி (சி.பி.ஜ) BSP
• தி.மு.க மற்றும் அ.தி.மு.க வேட்பாளர்கள் ஒரே பிரிவை சேர்ந்தவர்களாக இருந்தாலும் கம்யூனிஸ்ட் வேட்பாளர் வேறு பிரிவாக இருப்பதால் தி.மு.க வெற்றி பெறும்.

30. தஞ்சாவூர்
டி. ஆர். பாலு கு.பரசுராமன் முருகானந்தம் (பா.ஜ.க) டி. கிருஷ்ணசாமி வாண்டையார் எஸ். தமிழ்செல்வி (சி.பி.எம்) BSP
• தி.மு.க மற்றும் பா.ஜ.க வேட்பாளர்கள் ஒரே பிரிவை சேர்ந்தவர்களாக இருந்தாலும் அ.தி.மு.க மற்றும் காங்கிரஸ் வேட்பாளர் வேறு பிரிவாக இருப்பதால் தி.மு.க வெற்றி பெறும்.

31. சிவகங்கை
சுப. துரைராஜ் பி.ஆர். செந்தில்நாதன் எச்.ராஜா கார்த்தி சிதம்பரம் எஸ்.கிருஷ்ணன் (சி.பி.ஜ) BSP / AAP
• தி.மு.க வெற்றி பெறும்.

32. மதுரை
வ. வேலுசாமி இரா. கோபாலகிருஷ்ணன் சிவமுத்துகுமார் (தே.மு.தி.க) சி.என்.பரத் நாச்சியப்பன் பி.விக்ரமன் (சி.பி.எம்) BSP / AAP
• பா.ஜ.க அணியின் ஒட்டுப்பிரிப்பாலும், தி.மு.க – வின் தொண்டர் பலத்தாலும் தி.மு.க குறைந்த வாக்குகள் வித்தியாசத்திலாவது கண்டிப்பாக வெற்றி பெறும்.

33. தேனி
பொன். முத்து ராமலிங்கம் ஆர்.பார்த்திபன் க.அழகுசுந்தரம் (ம.தி.மு.க) ஜே.எம்.அருண் – BSP / AAP
• அ.தி.மு.க வெற்றி பெறும்.
• சோழவந்தான் மற்றும் உசிலம்பட்டி தொகுதிகளில் தி.மு.க – வினர் சுறு சுறுப்பாக இல்லை.

34. விருதுநகர்
எஸ். ரத்தினவேல் தி. ராதாகிருஷ்ணன் வைகோ (ம.தி.மு.க) மாணிக்தாகூர்
கே. சாமுவேல்ராஜ (சி.பி.எம்) BSP
• வெற்றி / தோல்வி தீர்மானிக்க முடியாத தொகுதி.
• தொகுதி முழுக்க ம.தி.மு.க வேட்பாளருக்கு செல்வாக்கு இருந்தாலும் தி.மு.க வேட்பாளர் நாடார் என்பதாலும், அ.தி.மு.க மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்கள் ஒரே பிரிவை சேர்ந்தவர்களாக இருப்பதாலும், சிறுபான்மை மற்றும் தாழ்த்தப்பட்ட சமுதாயம் தி.மு.க – விற்கு ஆதரவாக இருப்பதாலும் Advantage: தி.மு.க – வுக்கே.

35. ராமநாதபுரம்
எஸ். முகமது ஜலீஸ் அ. அன்வர்ராஜா குப்புராமு திருநாவுக்கரசு ஆர்.டி. உமாமகேஸ்வரி (சி.பி.ஜ) BSP / B.T.அரசகுமார்
• காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க வாக்கு பிரிப்பால் தி.மு.க வெற்றி பெறும்.

36. துத்துக்குடி
பெ. ஜெகன் ஜெ. ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி எஸ்.ஜோயல் (ம.தி.மு.க) ஏ.பி.சி.வி.சண்முகம் அ.மோகன்ராஜ் (சி.பி.ஜ) BSP / AAP
• தமிழ்நாட்டிலே மோடி அலை உண்மையிலே உள்ள தொகுதி தூத்துக்குடி தொகுதி தான். இதனாலும், புஷ்பராயன்(AAP) வாக்கு பிரிப்பாலும், சண்முகம்(காங்கிரஸ்) வாக்கு பிரிப்பாலும் ம.தி.மு.க வெற்றி பெறும்.

37. தென்காசி (தனி)
கிருஷ்ணசாமி (பு.த) வசந்தி முருகேசன் சதன் திருமலைகுமார் (ம.தி.மு.க) கே.ஜெயகுமார் பொ.லிங்கம் (சி.பி.ஜ) BSP
• கிருஷ்ணசாமியை தோற்க்கடிக்க வேண்டுமென்று தாழ்த்தப்பட்டவர்களை தவிர தொகுதியில் உள்ள பிற சமுதாயத்தினர் முடிவு எடுத்து வேலை பார்ப்பதால் தி.மு.க வெற்றி பெறுவது கடினம்.
• வெற்றி / தோல்வி தீர்மானிக்க முடியாத தொகுதி.
• தொகுதி முழுக்க ம.தி.மு.க வேட்பாளருக்கு செல்வாக்கு இருந்தாலும் Advantage: அ.தி.மு.க – வுக்கே.

38. திருநெல்வேலி
சி. தேவதாசுந்தரம் கே.ஆர்.பி.பிரபாகரன் எஸ்.சிவானந்த பெருமாள் (தே.மு.தி.க) எஸ்.எஸ்.ராமசுப்பு – BSP / AAP

• தி.மு.க மாவட்ட செயலாளரின் அசாத்தியமான உழைப்பாலும் சிறுபான்மை மற்றும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தின் ஆதரவாலும் தி.மு.க நல்ல வித்தியாசத்தில் வெற்றி பெறும்.

39. கன்னியாகுமரி
எம். எம். ராஜரத்தினம் டி.ஜான்தங்கம் பொன். ராதாகிருஷ்ணன் எச்.வசந்தகுமார் ஏ.வி. பொல்லார்மின் (சி.பி.எம்) BSP / AAP

• வெற்றி / தோல்வி தீர்மானிக்க முடியாத தொகுதி.
• தொகுதி முழுக்க பா.ஜ.க வேட்பாளருக்கு செல்வாக்கு இருந்தாலும், கம்யூனிஸ்ட், காங்கிரஸ், உதயகுமார்(AAP) கணிசமான வாக்குகள் வாங்குவதாலும் Advantage: தி.மு.க – வுக்கே.

40. புதுச்சேரி
ஏ.எம்.எச்.நாஜீம் எம்.வி.ஓமலிங்கம் ராதாகிருஷ்ணன் (என்.ஆர்.காங்) நாராயணசாமி
ஆர். விஸ்வநாதன் (சி.பி.ஜ) –

• N.R. காங்கிரஸ் ரெட்டியார் மற்றும் வன்னியர்கள் துணைக்கொண்டு வெற்றி பெறும்.

 

எங்கள் கணிப்புப்படி:

தி.மு.க     – 25

அ.தி.மு.க   – 13

ம.தி.மு.க   – 1

N.R.காங்கிரஸ் – 1

தொகுதிகளை கைப்பற்றும்…..  

ஆந்திராவின் YSR காங்கிரஸ்(ஜெகன்) – 25;

TRS(KCR) – 10;

திரிணாமூல் காங்கிரஸ் – 35;

தி.மு.க – 25;

பி.ஜீ.ஜனதாதள் – 10;

SP(முலாயம்) – 20;

NCP(பவார்) – 10

  • இந்த 135 பேரும் கவனிக்க தக்க வகையில் ஒன்றிணைந்து செயல்படுவார்கள்… என்பது என் அனுமானம். ஒருகால் மக்களின் எண்ணத்திற்கு ஏற்ப பா.ஜ.க ஆட்சி அமைக்க முடியாத சூழ்நிலை வந்தால் திரு.சரத்பவார் – பிரதமராவதை யாராலும் தடுக்க முடியாது காங்கிரஸ் மற்றும்  சிவசேனா துணையுடன்.  
Share this:

Write a Reply or Comment

3 × five =