முத்தாலம்மன் திருக்கோவில்:
பக்தர்கள் கேட்டதையும், நினைத்ததையும் நடக்க இச்சா, கிரியா, ஞான சக்தியை அருளும் மூன்று அம்பிகையுமுள்ள அருள்மிகு முத்தாலம்மன் திருக்கோவில் திண்டுக்கல் மாவட்டம் அகரத்தில் உள்ளது.
மூலவர் : முத்தாலம்மன்
உற்சவர் : கிளி ஏந்திய முத்தாலம்மன்
தல விருட்சம் : அரசு
பழமை : 500-1000 வருடங்களுக்கு முன்
தல வரலாறு :
வடநாட்டில் வசித்த சக்கராயர் அய்யர் என்ற பக்தர் விஜயநகரப்பேரரசு காலத்தில் தென்திசைக்கு வந்தார். அப்போது தான் தினமும் வணங்கி வந்த அம்பாள் கோவிலில் இருந்து சிறிது #மண் எடுத்து வைத்துக் கொண்டார்.
அம்பிகை தான் விரும்பும் இடத்தில் மண்ணை வைத்து தன்னை வணங்கும்படி உத்தரவிட்டாள்.
அதன்படி பக்தர் இவ்விடத்தில் அம்பிகை உத்தரவுப்படி மண்ணை வைத்தார். அங்கு ஒரு கல்லை மட்டும் வைத்து அம்பிகையை வணங்கி வந்தார்.
பிறகு இங்கு வசித்த பக்தர் ஒருவர் மூன்று அம்பிகையர் சிலை வடித்து பிரதிஷ்டை செய்து கோவில் எழுப்பினார்.
அம்பிகைக்கு #முத்தாலம்மன் என்ற பெயர் ஏற்பட்டது. முத்தாலம்மனுக்காக தோன்றிய முதல் தலமாக கருதப்படுவதால், தமிழ் எழுத்துக்களில் #அகரமே முதன்மை என்பதன் அடிப்படையில் ஊருக்கு அகரம் எனவும் பெயர் ஏற்பட்டது.
தல பெருமை :
பூதராஜா, பூதராணி உத்தரவு :
அம்பாள் சன்னதிக்கு இருபுறமும் பூதராஜா, பூதராணி ஆகிய காவல் தெய்வங்கள் உள்ளனர்.
இக்கோவிலில் விழா துவங்க பூதராணியிடம் உத்தரவு கேட்கின்றனர். பக்தர்கள் தங்கள் பிரார்த்தனை நிறைவேற,புதிதாகச் செயல்களைத் துவங்க, நிலம், வீடு தொடர்பான பிரச்சனைகள் நீங்க பூதராஜாவிடம் உத்தரவு கேட்கின்றனர்.
இவ்வாறு வரும் பக்தர்கள் பூதராஜா முன் நின்று கொண்டு தங்கள் பிரார்த்தனையைச் சொல்வர்.
அப்போது பல்லி சப்தமிட்டால் அதை தங்களுக்கு அம்பிகை இட்ட உத்தரவாகக் கருதி அச்செயலை துவங்குகின்றனர்.
மூன்றும் தரும் அம்பிகையர் :
எந்தச்செயலைச் செய்வதாக இருந்தாலும் மூன்று விஷயம் அடிப்படையாகத் தேவைப்படும்.
முதலில் செய்ய வேண்டிய செயலைப் பற்றி ஆசைப்பட வேண்டும். பின் ஞானத்துடன் அதை செயல்படுத்த வேண்டும். இவையே இச்சா (ஆசை) சக்தி, கிரியா (செயல்) சக்தி, ஞான (அறிவு) சக்தி எனப்படும்.
இம்மூன்றையும் தரும் மூன்று அம்பிகையர் மூலஸ்தானத்தில் உள்ளனர். இம்மூவரும் நின்றபடி
கையில் அட்சய பாத்திரம் ஏந்திய தவக்கோலத்தில் இருக்கின்றனர்.