ஞானபழத்திற்கும் நாயகனுக்கும் நன்றி
இந்த உலகின்
மிகப் பெரிய
நம்பிக்கை துரோகம்
மீனுக்கு உணவு
என இடப்படும்
தூண்டில் தான்……
என் தந்தை
எப்போதும் மீனாகவே
இருந்து இருக்கின்றார்
அவரின் வாழ்நாள்
முழுவதும் தூண்டிலிடம்…….
என்னை பொறுத்தவரை
நம்பிக்கை துரோகம்
என்பது தகுதியற்ற
ஒருவரை நம்பியதற்கு
நம்பியவனுக்கு கிடைத்த
பரிசு என்பேன் …….
இதை என்
அப்பாவின் வாழ்க்கையில்
பல பேர்
அவர் இறக்கும்
வரை இருந்து
உணர்த்தி இருக்கின்றார்கள்
அவரின் வழியில்
அவருடைய மகனும்
இன்று வரை
பல துரோகிகளுடன்……
இருந்தாலும் வாழ்க்கை
வசப்பட்டு கொண்டு
தான் இருக்கின்றது
தொடர செய்து
கொண்டு இருக்கும்
துரோகங்களுக்கும் நன்றி
நான் சிகரெட்
பிடித்ததை பார்த்து
என் தந்தையிடம்
ஒருவர் புகார்
சொன்ன போது
புகார் சொன்ன
நபரிடம் அவர்
சொன்னது என்
பிள்ளை தப்பு
என்றால் அவனே
விட்டு விடுவான்.
எனக்கு சிகரெட்
விற்ற அண்ணாச்சியிடம்
அவனுக்கு நல்ல
சிகரெட் ஆக
கொடுங்கள் என்று
வித்தியாசமாக வளர்த்தவர்
என் அப்பா….
குடி, அராஜகம்
என மற்றவர்
என்னை பற்றி
புறம் சொன்னபோதெல்லாம்
என் மகன்
வருவான் சரியாக
என எப்போதும்
எனக்கு ஊக்கமும்
ஆக்கமும் கொடுத்தவர்
நாங்கள் உச்சகட்ட
கஷ்டத்தில் இருந்தபோது
கடவுள் நம்பிக்கை
அறவே இல்லாத
என் தந்தை
அதிலும் குறிப்பாக
எல்லாவற்றையும் என்
போக்கிற்கே விட்டவர்
முதல் முறையாக
என் விருப்பத்திற்கு
மாறாக எதிராக
திருச்செந்தூர் சென்று
வா திருப்பத்துடன்
என்றது தான்
என் வாழ்க்கையின்
போக்கையே திசை
மாற்றிய தெய்வ
செயல் என்பேன்……
அன்றிலிருந்து இன்றுவரை
ஏற்பட்ட திருப்பங்களுக்கும்
ஏற்பட உள்ள
திருப்பங்களுக்கும் செந்தூரில்
பிச்சையிட்டவனே சாட்சி.
காட்சிக்கும் சாட்சிக்கும்
என்ன பொருத்தம்
என்கின்ற சூட்சுமம்
சொன்னவனுக்கும் செய்தவனுக்குமே
விளங்கும் தெளிவாக…..
அடுத்து என்ன
என்று சும்மா
இருந்தவனை கிடந்தவனை
இயல்பாக்கி திருப்பம்
ஏற்படுத்தி கொடுத்த
என் நாயகனுக்கும்
நாடகத்தை நன்கு
இதுவரை நடத்தி
துரோகங்களை மீறி
வெற்றி பெற
வைத்த ஞானப்பழத்திற்கும்
இந்த Ph.D யை
காணிக்கை ஆக்குகின்றேன்
என்றும் அன்புடன்
சிக்மண்ட் சொக்கு @
ஆண்டாள் P சொக்கலிங்கம்
தமிழகத்தின் முதல் உளவியல் குழந்தை