மாடு மேய்க்கும் கண்ணா
ஏனோ எந்த பாடலும் தராத நிம்மதி, அருணா சாய்ராம் அவர்கள் லயித்து உருகி மாடு மேய்க்கும் கண்ணா பாடும் போது கிடைக்கும்
நான் எப்போதும் விரும்பும் மிக சிறந்த இந்த பாட்டின் வரிகள்;
யசோதை:
மாடு மேய்க்கும் கண்ணா நீ போக வேண்டாம் சொன்னேன் (இரண்டு முறை)
காய்ச்சின பாலும் தரேன் – கற்கண்டு சீனி தரேன் (மூன்று முறை)
கைநிறைய வெண்ணெய் தரேன் – வெய்யிலிலே போக வேண்டாம் (இரண்டு முறை) (மாடு)
கண்ணன்:
காய்ச்சின பாலும் வேண்டாம் – கற்கண்டு சீனி வேண்டாம்
உல்லாசமாய் மாடு மேய்த்து ஒரு நொடியில் திரும்பிடுவேன்
போக வேண்டும் தாயே தடை சொல்லாதே நீயே (இரண்டு முறை)
யசோதை:
யமுனா நதிக்கரையில் எப்பொதும் கள்வர் பயம்
கள்வர் வந்து உனை அடித்தால் கலங்கிடுவாய் கண்மணியே (இரண்டு முறை) (மாடு)
கண்ணன்
கள்ளனுக்குள் கள்ளனொன்று கண்டதுண்டோ சொல்லும்மா
கள்ளன் வந்து எனை அடித்தால் கண்ட துண்டம் செய்திடுவேன்
போக வேண்டும் தாயே தடை சொல்லாதே நீயே (இரண்டு முறை)
யசோதை:
கோவர்த்தன கிரியில் கோரமான மிருகங்களுண்டு
கரடி புலியைக் கண்டால் கலங்கிடுவாய் கண்மணியே (இரண்டு முறை) (மாடு)
கண்ணன்
காட்டு மிருகங்களெல்லாம் என்னைக் கண்டால் ஓடி வரும்
கூட்டம் கூட்டமாக வந்தால் வேட்டையாடி ஜெயித்திடுவேன்
போக வேண்டும் தாயே தடை சொல்லாதே நீயே (இரண்டு முறை)
யசோதை:
பட்ஷம் உள்ள நந்தகோபர்
பாலன் எங்கே என்று கேட்டால்
என்ன பதில் சொல்வேனடா என்னுடைய கண்மணியே (இரண்டு முறை) (மாடு)
கண்ணன்:
பாலருடன் வீதியிலே பந்தாடுறான் என்று சொல்லு
தேடியே நீ வருகையில்
ஓடி வந்து நின்றிடுவேன்
போக வேண்டும் தாயே தடை சொல்லாதே நீயே (இரண்டு முறை)
மாடு மேய்க்கும் கண்ணா நீ போக வேண்டாம் சொன்னேன்
போக வேண்டும் தாயே தடை சொல்லாதே நீயே (இரண்டு முறை)
போக வேண்டும் தாயே (high pitch)
உங்கள்
வாழ்க்கை
வெகு
விரைவில்
மாற்றம் அடைய
என்றும்
விரும்பும்
உங்கள்
ஆண்டாள் பி சொக்கலிங்கம்
Share this: