ஸ்ரீ
ஆண்டாள் கோவில் தங்க விமான திருப்பணிக்கு ஒரு கிலோ தங்கம் கொடுத்து வர வேண்டும் என்ற நினைப்பில் செப்டம்பர் 8, 2015 காரில் ஸ்ரீவில்லிபுத்தூர் புறப்பட்ட நான் அன்றிரவு ஆண்டாள் கோவிலில் தங்க நேரிட்டதன் பலனாக கொடுத்த தங்கத்தின் அளவு என்ன? விரிவான, அதிசய தகவல்களுடன் அடுத்த கடிதத்தில் கூறுவதாக கூறி இருந்தேன்.
அதிலும் குறிப்பாக விழுப்புரம் சகோதரியை சந்தித்த சந்தோஷத்தில் சென்று கொண்டிருந்த போது ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது என்றும், அந்த தொலைபேசி அழைப்பு என்னை மேலும் சந்தோஷத்தில் ஆழ்த்தி விட்டது என்றும் சொல்லி இருந்தேன். அன்று நான் ஒரு கிலோ தங்கம் கொடுக்க முடியும் என நம்பி தான் பிரயாணப்பட்டேன். ஆண்டாள் தான் ஒன்றை பலதாக்குபவள் ஆயிற்றே.
வாஸ்து பயிற்சி வகுப்பு – I (VPT – I) ஆல் நண்பர் ஆன திரு.சித்தார்த் அவர்கள் தான் என்னை கோயம்புத்தூரில் இருந்து கூப்பிட்டார். அவர் என்னிடம் சொன்னதை அப்படியே எழுதுகின்றேன்.
சார், எனக்கு நாளை கொஞ்சம் சென்னையில் வேலையிருக்கின்றது. நான் சனிக்கிழமை, என் பிள்ளைகளுடன் போய் தங்கம் கொடுத்துடுறேன் சார். கிட்டத்தட்ட ஒரு கிலோ தங்கம் நான் கொடுத்துடுறேன் சார் என்றார்.
நான் சொன்னேன்
சார் கொடுக்கிறவர்களின் பெயர்களை தெளிவாக எழுதி வைத்து தங்கத்தை ஒப்படைக்கவும் என்றேன். அதற்கு இல்லை சார். நானே சொந்தமாக ஒரு கிலோ தங்கம் கொடுத்துடறேன் என்று அவர் சொன்னதை கேட்டவுடன் நான் ஆனந்தத்தின் எல்லைக்கே போய்விட்டேன். காரணம் திரு.சித்தார்த் அவர்கள் பெரிய பின்புலம் உள்ள மனிதர் என்பது ஒரு பக்கம் இருந்தாலும் எத்தனை பெரிய மனிதர்களுக்கு இந்தளவிற்கு பரந்த மனம் இருக்கும்?? என்கின்ற கேள்வி இந்த இடத்தில தொக்கி நிற்பதை தவிர்க்க இயலாது என்பதை இங்கு பதிவிட விரும்புகின்றேன்.
பணம் இருக்கலாம்; மனம் இருக்கலாம்; பிராப்தம் இருக்க வேண்டுமல்லவா?!! – இந்த தெய்வீக கைங்கர்யத்தில் ஒருவர் ஈடுபட.
ஆண்டாள் அந்த பிராப்தத்தை திரு.சித்தார்த் அவர்களுக்கு கொடுத்திருக்கின்றார் என்பதை மனப்பூர்வமாக நம்புகின்றேன்.
அவரும் சொன்னபடி ஒரு கிலோ தங்கத்துடன் தன்னையும் சேர்த்து கொடுத்துவிட்டார் ஆண்டாளுக்கு – சரணாகதி தத்துவத்தின் உச்ச கட்ட நிகழ்வாக அடைந்து போனது இந்த நிகழ்வு….
இந்த விபரத்தை என் உறவினர் திரு.லக்ஷ்மி நாராயணன், சென்னை அவர்களிடம் சொன்ன போது சரிண்ணே! நானும் ஏதாவது பண்ணி விடுகின்றேன் என்றார். சொன்னதோடு நிற்காமல் அண்ணே! 18 – ந்தேதி Flight ticket போட்டாச்சு வெள்ளிக்கிழமை கோவிலுக்கு போய் ஏதாவது பண்ணிவிட்டு வந்துவிடுவோம். ரெடியாக இருங்க என்று சொல்லிவிட்டு சொன்னபடியே 18 – ந்தேதி கோவிலுக்கு கூப்பிட்டு சென்றார்.
(இவ்விடத்தில் ஒரு சிறிய பெட்டி செய்தி… திருப்பதி பெருமாள் வருடத்தில் 364 நாட்களும் ஆடை, ஆபரண அலங்காரத்துடன் தான் இருப்பார். ஆனால் வருடத்தில் ஒரே ஒரு நாள் எந்தவித ஆடை, ஆபரண அலங்காரமும் இன்றி வேஷ்டி உடன் மட்டும் இருப்பார். ஆனால் அவர் மார்பில் மட்டும் 2 விஷயங்கள் இருக்கும்.
- ஆண்டாள் சூடிக் கலைந்த மாலை
- ஆண்டாள் தோள் மேல் சாத்தி எடுக்கப்பட்ட படி கிளி
வாழ்க்கைனா வத, வதவென்று வாழக் கூடாது. ஒரு நாள் வாழ்ந்தாலும் நமக்கான அங்கீகாரத்துடன் வாழ வேண்டும் என்பதை நமக்கு எடுத்து சொல்லும் நிகழ்வு. இது என்னுடைய ஒரே குருநாதர் ஆண்டாளின் அண்ணன் ராமானுஜரால் ஏற்படுத்தப்பட்ட விஷயம்)
செப்டம்பர் 18, 2015 ஆண்டாள் திருவிளையாடலின் உச்சகட்ட நிகழ்வை நான் பார்த்த / உணர்ந்த நாள்.
கோவிலை அடைந்த உடன் நானும், திரு.லக்ஷ்மி நாராயணனும் மற்றும் அவருடன் வந்த அவருடைய இரண்டு நண்பர்களும் கோவில் தக்கார் அறைக்கு அழைத்து செல்லப்பட்டோம். உங்களுக்காகத் தான் wait பண்றோம். வாங்க என்று ஒரு கூடையை தூக்க சொன்னார்கள்.
நான், அண்ணன் லக்ஷ்மி நாராயணன் மற்றும் அவருடைய இரண்டு நண்பர்கள், தமிழக காங்கிரஸ் கட்சியின் மிக முக்கிய பிரமுகர் மதுரை திரு.முருகேசன் என ஐந்து பேரும் அந்த கூடையை கோவில் வாசலில் இருந்து உற்சவர் இருக்கும் இடம் வரை தூக்கி கொண்டு சென்றோம் – மேள, முழக்கத்துடன். தூக்கி செல்லும் போது நிறையபேர் அந்த கூடையை கண்ணீர் மல்க வணங்கினார்கள். எல்லோரும் பயபக்தியுடன் வணங்கிய அந்த கூடையில் இருந்தவை என்ன தெரியுமா??
- திருப்பதி பெருமாள் வருடம் ஒரு முறை சாத்திக் கொள்ளும் ஆண்டாள் சூடிக் கலைந்த மாலை, ஆண்டாளுக்கு சாத்திய புடவை, ஆண்டாளுக்கு சாத்திய இரண்டு கிளிகள்.
அந்த கூடையை தூக்கி கொண்டு செல்லும் போது எனக்கு ஏற்பட்ட உணர்வு
உலகமே பெருமாளை தூக்கி பிடித்து கொண்டாடினாலும், ஆண்டாளுக்கு சாத்தப்பட்ட மாலையும், கிளியும், புடவையும் தானே பெருமாளுக்கு போகின்றது. நம் ஆண்டாளுடன் தானே ஒரு நாள் அவர் இருந்து ஆக வேண்டும்; பெருமாள் அவை எல்லாவற்றையும் அணியப் போகின்றார் என்றால் நம் ஆண்டாள் எவ்வளவு பெரியவள்.
இவ்வளவு சிறப்பு வாய்ந்த நிகழ்வில் அந்த கூடையை என்னையும் வைத்து தூக்க வைத்து விட்டாளே!! இந்த உலகை ஆள்பவனையே ஆண்டாள் ஆண்டாலும் என்னையும் நினைவில் வைத்து பெருமைப்படுத்தி விட்டாளே!! என்கின்ற எண்ணத்துடன் மிகப் பெரிய கர்வத்துடன் கூடிய பெருமிதத்துடன் ஆண்டாள் மாலையை திருப்பதி அனுப்பிவிட்டு அலுவலகம் வந்து அண்ணன் லக்ஷ்மி நாராயணனும், அவருடன் வந்த அவரின் நண்பர்கள் இரண்டு பேரும் அவர்கள் எடுத்து வந்த தங்கத்தை கோவிலில் ஒப்படைத்தார்கள். அந்த தங்கத்தின் எடை ஒரு கிலோ.
மெய்சிலிர்த்து போய் விட்டேன் – அவர்கள் தங்கத்தை கொடுப்பதை பார்த்த உடன்.
வெற்றி கோட்டை Just Like that தொட்ட உணர்வு மேலோங்கி நின்றது.
ஆக மொத்தம் கடந்த வாரத்தில் ஆண்டாள் பக்தர்கள் தங்க விமான திருபணிக்காக கொடுத்த தங்கம் கிட்டத்தட்ட 2.8 கிலோ.
இந்த இலக்கை அடைய உதவியவர்கள் விபரம் கீழ்கண்டவாறு: –
Gold: –
Sl. No. | Name | Place | Weight (Gms) – 22ct | Weight (Gms) – 24ct | |
1 | Meena Jayakumar | Coimbatore | 16 | 0 | |
2 | R.K.Madheswaran, Kanmani Ramachandran | Chennai | 0 | 40 | |
3 | C.Manicka Karpaga Valli | Chennai – 128 | 0 | 8 | |
4 | C.Akil Shanmuga Sriram | Chennai – 128 | 0 | 8 | |
5 | M.Subramanian | Chennai – 41 | 0 | 8 | |
6 | Abuthalif | Chennai – 20 | 0 | 8 | |
7 | Dr.Arjun Sairam | Chennai – 33 | 0 | 8 | |
8 | Maithreay Sabesan | Chennai | 40 | 0 | |
9 | Giri | Thirukalukundram | 0 | 3.5 | |
10 | Gurumoorthy | Thirumullaivoyal | 0 | 3 | |
11 | Kavitha Radhakrishnan | Coimbatore | 0 | 7 | |
12 | Chitra | Malaysia | 0 | 1 | |
13 | Ramanandham | Coimbatore | 0 | 2 | |
14 | Dhanalakshmi Sureshbabu | Hosur | 19 | 2 | |
15 | Parthiban | Sattur | 8 | 0 | |
16 | Pravin Kumar | Sattur | 8 | 0 | |
17 | C.R.Lakshminathan | Singapore | 0 | 5 | |
18 | A.S.Ulaganathan | Tiruppur | 0 | 17 | |
19 | S.Karthikeyan | Tiruppur | 0 | 1 | |
20 | Raji | Tiruppur | 2.4 | 0 | |
21 | Senthil Raja and Chitra | Thiruchengodu | 11 | 0 | |
22 | Narayanan | Salem | 0 | 2 | |
23 | K.Selvakumar | Dharmapuri | 8 | 0 | |
24 | R.Shanmugam | Dharmapuri | 2 | 0 | |
25 | Muthulakshmi | Dharmapuri | 1 | 0 | |
26 | Kumar.G | Dharmapuri | 24 | 0 | |
27 | Poomani Shanmuga Sundaram | Erode | 0 | 12 | |
28 | Muthukumar Kalaiselvi | Pollachi | 1 | 0 | |
29 | Annasamy | Pennagaram | 4 | 0 | |
30 | Kalimuthu | Pollachi | 1 | 0 | |
31 | Mailatthal | Pollachi | 1 | 0 | |
32 | S.Selvaraj | Pollachi | 0.5 | 0 | |
33 | Akilandeshwari | Pollachi | 1 | 0 | |
34 | R.V.Selvakani | Pollachi | 1 | 0 | |
35 | M.Rohit | Pollachi | 1 | 0 | |
36 | A.Selthil Kumar | Pollachi | 4 | 0 | |
37 | Ranganathan | Salem | 1.5 | 0 | |
38 | Tamilselvan | Kanniyakumar | 0 | 3 | |
39 | Sarala | Vellore | 0 | 2 | |
40 | Srikanth | Chennai | 0 | 3 | |
41 | Rajkumar | Chennai | 0 | 2 | |
42 | Sampath | Bangalore | 0 | 1 | |
43 | Boopathy | Tiruppur | 24 | 0 | |
44 | C.P.Radhakrishnan | Tiruppur | 31 | 0 | |
45 | Nagendran | Tiruppur | 12 | 0 | |
46 | Nataraj | Perambalur | 8 | 0 | |
47 | Prem | Perambalur | 1 | 0 | |
48 | Jainika | Rajapalayam | 1.3 | 0 | |
49 | Vaitheesh, CPR – SIL | Tiruppur | 8 | 0 | |
50 | K.Subramaniyam | Madurai | 2.5 | 0 | |
51 | Sekar | Thirupathur | 2.7 | 0 | |
52 | Sivakumarar | Thirupathur | 10 | 0 | |
53 | Aakshy | Pollachi | 2 | 0 | |
54 | Saravanan | Chennai | 0 | 1 | |
55 | Kavitha Karunakaran | Canada | 0 | 4 | |
56 | Banumathi Anandakrishnan | Chennai | 12 | 0 | |
57 | Megala Jewahar | Villupuram | 11 | 0 | |
58 | Malini | Chennai | 8 | 0 | |
59 | R.Vijyakumar | Chennai | 2.8 | 0 | |
60 | A.C.Gowrishankar | Chennai | 16.6 | 0 | |
61 | A.C.Dhanasekaran | Chennai | 1.1 | 0 | |
62 | Ranganayagi | Kanchipuram | 4 | 0 | |
63 | Padmavathi | Sriperumbathur | 2 | 0 | |
64 | Vasanthi | Sriperumbathur | 2.6 | 0 | |
65 | Shobha Jayaram | Chennai | 2 | 0 | |
66 | Karpagam.G.S | Chennai | 2 | 0 | |
67 | Sathya | Chennai | 3 | 0 | |
68 | Kavitha | Chennai | 1 | 0 | |
69 | Latha | Chennai | 2 | 0 | |
70 | Kala | Chennai | 8 | 0 | |
71 | P.Iyappan | Chennai | 8.4 | 0 | |
72 | Hari Mani Kannan Saamundi | Chennai | 2.5 | 0 | |
73 | Suriyakala | Chennai | 50 | 0 | |
74 | Sangamithra Dinesh | Chennai | 5.6 | 0 | |
75 | Bharathi Gurusamy | Perambalur | 0.5 | 0 | |
76 | Duraisamy Selvi | Perambalur | 0.5 | 0 | |
77 | Senthil Nathan | Perambalur | 0.5 | 0 | |
78 | Chella Muthu Vinoth Kumar | Perambalur | 1 | 0 | |
79 | Jaiganesh Banumathi | Perambalur | 1 | 0 | |
80 | Devadaas Atchaya Sri | Perambalur | 1 | 0 | |
81 | Subha Uma Maheshwari | Perambalur | 0.9 | 0 | |
82 | Ilamurugan | Namakkal | 8 | 0 | |
83 | Tamilarasi | Chetpet | 11 | 0 | |
84 | Karthikeyan | Chetpet | 8 | 0 | |
85 | Andal Shanmugam | Perambalur | 2 | 0 | |
86 | Kaviyarasu | Perambalur | 2 | 0 | |
87 | Anbunithi | Madurai | 3.85 | 0 | |
88 | Meenakshi Raja | Thanjavur | 1 | 0 | |
89 | Dr.Saravanan | Sathyamangalam | 0 | 3 | |
90 | Sriram | Chennai | 0 | 8 | |
91 | Senthil Raja | Namakkal | 4 | 0 | |
92 | Divya | Tiruppur | 0 | 9.4 | |
93 | Abirami, Mahalakshmi | Chennai | 0 | 2.12 | |
94 | Anbalagan | Salem | 0 | 5 | |
95 | Yuvaraj, Gunasekaran, Paramasivam, Kanagaraj | Pudupatti | 0 | 2.631 | |
96 | Dhanasekaran | Thiruchengodu | 0 | 2 | |
97 | Jayapal | Maniyanur | 0 | 1 | |
98 | S.S.Visutha | Thiruchengodu | 0 | 2 | |
99 | Saravanan | Pudupatti | 0 | 11.27 | |
100 | N.Jayakrishna, N.Akshaya | Salem | 0 | 2.066 | |
101 | Velusamy | Namakkal | 0 | 2 | |
102 | Senthil Kumar | Pollachi | 0 | 4 | |
103 | Meena Sivaraman | Chennai | 0 | 30 | |
Total | 447.75 | 235.987 | 683.737 | ||
Cash: –
Sl. No. | Name | Place | Amount (Rs.) |
1 | G.Kalyani | Trichy | 300 |
2 | S.Gayathiri | Trichy | 100 |
3 | S.Muthuvel | Trichy | 100 |
4 | C.R.Lakshminathan | Singapore | 850 |
5 | S.Gurumurthi | Chennai | 510 |
6 | Kavitha Radhakrishan | Coimbatore | 190 |
7 | Chitra | Malaysia | 1648 |
8 | Tamilselvan | Kanniyakumari | 1510 |
9 | Srikanth | Medavakkam | 1510 |
10 | Dr.Arjun Sairam | Chennai | 1500 |
11 | Murugasamy | Dharmapuri | 500 |
12 | Sendhamarai Siddhan | Dharmapuri | 101 |
13 | Ponmudi | Dharmapuri | 501 |
14 | Chinnavel, Chennamal | Dharmapuri | 501 |
15 | Mithra | Dharmapuri | 500 |
16 | Vikraman Padmavathi | Krishnakiri | 501 |
17 | Govindaraj Rajeshwari | Dharmapuri | 101 |
18 | D.Seenivasan | Madurai | 1005 |
19 | P.Vimal | Tiruppur | 1000 |
20 | T.N.Prabhakaran | Tiruppur | 1000 |
21 | M.R.Sivasaai Karthik | Pollachi | 200 |
22 | G.Sankar | Tirunelveli | 100 |
23 | B.Sivi Prasath | Pollachi | 250 |
24 | B.Harsavarthini | Pollachi | 250 |
25 | Selvakumar Savithiri | Nagapattinam | 1001 |
26 | R.Paari Jegaseelan | Thiruppathur | 250 |
27 | D.Saavithri Sri | Thiruppathur | 1001 |
28 | Dr.Saravanan | Sathyamangalam | 1960 |
29 | Jayasankar | Tiruppur | 1000 |
30 | Padma | S.K.Patti | 5000 |
Total | 24940 |
இதுவரை ஸ்ரீ ஆண்டாள் தங்க விமான திருப்பணிக்கு தங்கம் மற்றும் பணம் கொடுத்த அனைத்து மனிதர்களுக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றி…. நன்றி…. நன்றி…
திருவே தஞ்சம்; திருவரங்கனே தஞ்சம்;
தஞ்சமடைந்த நம் ராமாநுஜனே தஞ்சம்
ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!!
நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!!
வாழ்க வளமுடன்
என்றென்றும் அன்புடன்
ஆண்டாள் பி. சொக்கலிங்கம்
December 20, 2015
I am tiupathi balaji devotee