தலைச்சங்காடு அல்லது திருதலைச்சங்க நாண்மதியம் எனப்படும். இங்கு பெருமான் சங்காரண்யேஸ்வரர் என்ற பெயரில் எழுந்தருளியுள்ளார்.இத்திருத்தல ம் வைணவ ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பெற்ற (பாடப்பட்ட) 108 திருக்கோயில்களில் ஒன்று.
கோயில் தகவல்கள்:
மூலவர்: நாண்மதியப் பெருமாள் (கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம்).
உற்சவர்: வெண்சுடர்ப் பெருமாள்
தாயார்: தலைச்சங்க நாச்சியார்
உற்சவர் தாயார்: செங்கமலவல்லி
தீர்த்தம்: சந்திர புஷ்கரணி
பிரத்யட்சம்: சந்திரன், தேவப்பிருந்தங்கள்
மங்களாசாசனம்
பாடல் வகை: நாலாயிரத் திவ்யப்பிரபந்தம்
செய்தவர்கள்: திருமங்கையாழ்வார்
விமானம்: சந்திர விமானம்
கல்வெட்டுகள்: உண்டு
தல மரம் :புரசு
பெயர்க்காரணம் :
பழந்தமிழர்கள் இயற்கைத் தாவரங்களின் பெயரிலேயே நிலத்திற்கும்அதனை சார்ந்த ஊருக்கும் பெயர் வைத்திருக்கின்றனர் .எனவே தலைச்சங்காடு தலை+சங்கு+காடு என பிரித்து பார்த்தால் பொருள் விளங்கும்.சங்கு பூக்கள் தோட்டங்களில் மிகுதியாகப் பயிரிட்டு இவ்வூர்க் கோயில்களுக்கும், இதனைச் சுற்றியுள்ள கோயில்களுக்கும் மிகுதியாக அனுப்பப்பட்டன. இந்தப் பூந்தோட்டங்களை ஒட்டியே தலைச்சங்காடு என்ற பெயர் உருவாகி இருக்க வேண்டும் எனக் கல்வெட்டுச் செய்தி கூறுகிறது.
தல வரலாறு :
திருமால் இவ்வுலக உயிர்களை காப்பதற்காக சங்காரண்யேஸ்வரரை பூஜை செய்து தனது ஆயுதமாக சங்கை பெற்றுள்ளார். இதனால் இத்தலத்தில் மகாவிஷ்ணுவுக்கு தனி சன்னதி உண்டு. திருமாலுக்கு பாஞ்சசன்யம் எனும் சங்கினை வழங்கிய காரணத்தினால் சிவபெருமான் சங்காரண்யேஸ்வரர், சங்கவனநாதர் என்றும் அழைக்கப்பெறுகிறார்.
முன்பு, 40 ஆண்டுகாலம் வழிபாடின்றி இருந்த இத்திருத்தலத்தை வடுக நம்பி சீரமைக்க முயன்று, அவருக்குப் பின்னர் அவரது சீடர் சுந்தர ராமானுஜ தாசர் திருப்பணி செய்து அமைத்த திருக்கோயிலே இப்போதுள்ளது.
அமைந்துள்ள இடம் :
மயிலாடுதுறை – தரங்கம்பாடி சாலையில் மயிலாடுதுறையில் இருந்து 18 கி.மி. தூரத்தில் திருதலைச்சங்க நான்மதியம் எனப்படும் இத்திருத்தலம் உள்ளது.
Share this: