January 08 2018 0Comment

23.திருச்சிறுபுலியூர்:

108 திவ்ய தேசங்களில் இருபத்தி மூன்றாகும்.

கோயில் தகவல்கள்:

வேறு பெயர்(கள்): கிருபா சமுத்திர பெருமாள்

பெயர்: தலசயன பெருமாள்

உற்சவர்: கிருபா சமுத்திரப் பெருமாள்

கட்டடக்கலை வடிவமைப்பு: திராவிடக் கட்டிடக்கலை

தெற்கு நோக்கி காட்சி தரும் கோயிலின் மூலவர் பெயர் ஸ்தலசயனப்பெருமாள். தாயார் பெயர் திருமாமகள் நாச்சியார். உற்சவர் பெயர் கிருபா சமுத்திரப் பெருமாள் (அருள்மாகடல்) – உற்சவ தாயார் பெயர் தயாநாயகி. தீர்த்தக் குளம் – மானஸ புஷக்ரிணி. விமானம் – நந்தவர்த்தன விமானம். கருவறையில் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் வியாசர், வியாக்கிரபாதர், கங்கையுடன் காட்சியளிக்கிறார்.

திருமங்கையாழ்வாரால் 10 பாசுரங்களால் மங்களசாசனம் செய்யப்பட்ட கோயில் ஆகும்.

பெயர்க் காராணம்:

சிதம்பரம் நடராசர் அருளியபடி வியாக்கிரபாதர், திருச்சிறுபுலியூர் ஸ்தலசயனப்பெருமாளை வணங்கி மோட்சம் பெற்றதால் இத்தலத்திற்கு திருச்சிறுபுலியூர் எனப் பெயராயிற்று.

சிறப்புகள்:

திருமங்கை ஆழ்வாருக்காக பெருமாள் பெரிய வடிவில் புஜங்கசயனத்தில் பள்ளி கொண்டுள்ளார்.
கருடனுக்கு பெருமாள் அபயமளித்த இடம்.
இங்கு பூமிக்கு கீழ் கருடனுக்கு சன்னதியும், மிக உயர்ந்த இடத்தில் ஆதிசேடனுக்கும் சன்னதி உள்ளது.
திருமங்கையாழ்வாரால் மட்டும் 10 பாசுரங்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட்ட பெருமாள் கோயில் ஆகும்.
நாக தோசம் நிவர்த்திக்கும் மற்றும் மக்கட்பேற்றுக்கும் இத்தலத்திற்கு ஏற்பட்ட தனிப் பெருமை உண்டு.
இத்தலத்தின் பெருமானை பூஜித்து வைகுந்தம் அடைந்த வியக்ரபாதரை, பெருமாளின் திருவடிகளுக்கு அருகிலேயே பிரதிட்டை செய்துள்ளனர்.

விழாக்கள் :

வைகுண்ட ஏகாதசி
வைகாசி மாதம் பிரம்மோற்சவம்
ஐப்பசி மாதம் மணவாள மாமுனி விழா
மாசி மாதம் அனந்தாழ்வார் விழா

திருவாரூர் மாவட்டத்தில் மயிலாடுதுறை – திருவாரூர் செல்லும் இருப்புப்பாதையில், கொல்லுமாங்குடி தொடருந்து நிலையத்திலிருந்து 2 மைல் தொலைவில் உள்ள திருச்சிறுபுலியூர் எனும் கிராமத்தில் அமைந்த

Share this:

Write a Reply or Comment

19 + 2 =