திருநாகை சௌந்தர்யராஜன் திருக்கோயில் 108 வைணவத் திருத்தலங்களில் 19வது திவ்யதேசம்.
கோயில் தகவல்கள்:
புராண பெயர்(கள்): சௌந்தர்ய ஆர்ணயம், சுந்தராரண்யம்
பெயர்: திருநாகை சௌந்தர்யராஜன் (சவுந்தரராஜப்பெருமாள்) திருக்கோயில்
ஊர்: நாகப்பட்டினம்
மூலவர்: நீலமேகப் பெருமாள் (நின்ற திருக்கோலம்)
உற்சவர்: சௌந்தர்யராஜன்
தாயார்: சௌந்தர்யவல்லி
உற்சவர் தாயார்: கஜலஷ்மி
தீர்த்தம்: சாரபுஷ்கரிணி
பிரத்யட்சம்: நாகராஜன் (ஆதிசேடன்),துருவன், திருமங்கையாழ்வார், சாலிசுக சோழன்
மங்களாசாசனம்
பாடல் வகை: நாலாயிரத் திவ்யப்பிரபந்தம்
திருமங்கையாழ்வார்
விமானம்: சௌந்தர்ய விமானம் (பத்ரகோடி விமானம்)
கல்வெட்டுகள்: உண்டு
தலவரலாறு:
நான்கு யுகங்களிலும் வழிபடப்படும் தலம். ஆதிசேஷன் தவம் புரிந்து பெருமாளின் சயனமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட திருத்தலம். ஆதிசேஷன் வழிபட்ட காரணத்தாலேயே இவ்வூர் நாகன்பட்டினம் என்றாகி, பின்னர் நாகப்பட்டினம் என மாறியது. திரேதாயுகத்தில் பூமாதேவி தவமிருந்த திருத்தலம், துவாபரயுகத்தில் மார்க்கண்டேயர் தவமிருந்த திருத்தலம்.
பிரம்மாண்ட புராணம்:
இத்திருத்தலம் குறித்த தகவல்கள் பிரம்மாண்ட புராணத்தின் உத்திர காண்டத்தில் 10 அத்தியாயங்களில் சௌந்திர ஆரண்ய மகிமை என்ற பெயரில் உள்ளன.
பேருந்து வசதி:
இத்திருக்கோயில் அருகாக, மயிலாடுதுறையிலிருந்து நாகப்பட்டினம் செல்லும் பேருந்துகள் செல்கின்றன. சென்னையில் இருந்து வருகிறவர்கள் நாகப்பட்டினம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து இறங்கி, வேளாங்கண்ணி அல்லது திருவாரூர் மார்க்கத்தில் செல்லும் நகரப்பேருந்தில் பயணம் செய்து வந்தால் 2 கி.மீ தொலைவிலுள்ள பெருமாள் கோவில் பேருந்து நிறுத்தத்தில் இறங்கினால் எதிர்ப்படுவது நம்பெருமாள் கோவில் ஆகும்.
கோயம்புத்தூர் மதுரை திருச்சி தஞ்சாவூர் மார்க்கத்தில் வருபவர்கள் பேருந்து பழைய பேருந்து நிலையம் வழியாக வந்தால் பழைய பேருந்து நிலையத்தின் முந்தைய நிறுத்தமான பெருமாள் கோவில் பேருந்து நிறுத்தத்தில் இறங்கலாம். பேருந்து புதிய பேருந்து நிலையத்திற்குச் சென்றால் கோட்டை வாசப்படி என்கிற பேருந்து நிறுத்தத்தில் இறங்கி அங்கிருந்து மிக அருகில் உள்ள கோயிலை 10 நிமிட நடை பயணத்தில் வந்தடையலாம்.