January 02 2018 0Comment

17.#திருக்கண்ணங்குடி:

லோகநாதப் பெருமாள் கோவில்,  திருக்கண்ணங்குடி என்னும் ஊரில் அமைந்துள்ள விஷ்ணு கோவிலாகும். இக்கோவில் #108 திவ்ய தேசங்களில் ஒன்று. மேலும் இது #பஞ்சகிருஷ்ண தலங்களிலும் ஒன்றாகும்.

பெயர்: லோகநாதப் பெருமாள்

திருக்கோவில்,திருக்கண்ணங்குடி

#மாவட்டம்: நாகப்பட்டினம் மாவட்டம்

#கோயில் தகவல்கள்:

#மூலவர்: லோகநாதர், சியாமளமேனி

#பெருமாள் (விஷ்ணு)

#உற்சவர்: தாமோதர நாரயணன்

#தாயார்: லோகநாயகி (லட்சுமி)

#உற்சவர் தாயார்: அரவிந்தவல்லி

#மங்களாசாசனம்

பாடல் வகை: நாலாயிரத் திவ்யப்பிரபந்தம்

#மங்களாசாசனம் : திருமங்கை ஆழ்வார்

#விமானம்: தல விருட்சம் மகிழம்

#கல்வெட்டுகள்: உண்டு

#மூலவர்:  லோகநாதப் பெருமாள்

இவர் சியாமளமேனிப் பெருமாள்என்றும் அழைக்கப்படுகிறார். பெருமாள் இங்கு நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கிக் காட்சி தருகிறார்.

#தீர்த்தங்கள்: ராவண புஷ்கரணி தீர்த்தம்,

#தல வரலாறு:

வசிஷ்ட முனிவர் வெண்ணையால் கிருஷ்ண விக்கிரகம் செய்து வழிபட்டு வந்தார். அவரது ஆழ்ந்த பக்தியின் காரணமாக அந்த விக்கிரகம் உருகாமல் இருந்து வந்தது. ஒரு நாள் கிருஷ்ணர் சிறுவனாக வசிஷ்டரின் வீட்டுக்குள் நுழைந்து வெண்ணைய் விக்கிரகத்தைச் சாப்பிட்டு விட்டு வெளியே ஓடினார். ஓடிய சிறுவனைத் துரத்திச் சென்றார் வசிஷ்டர். சிறுவன் ஓடிய வழியில் ஒரு மகிழ மரத்தடியில் சில முனிவர்கள் அமர்ந்து கிருஷ்ணரைத் தியானம் செய்துகொண்டிருந்தனர்.

ஓடிவந்த சிறுவன் கிருஷ்ணரே என அவர்கள் புரிந்து கொண்டனர். சிறுவனாய் வந்த கிருஷ்ணர் அவர்களின் பக்தியில் மகிழ்ந்து, அவர்களுக்கு ஒரு வரம் தருவதாகச் சொல்ல, அவர்கள் கிருஷ்ணரை அவ்விடத்திலேயே தங்கிவிடுமாறு வேண்டினர்.

அவரும் அங்கேயே தங்கிவிட்டார். துரத்தி வந்த வசிஷ்டரும் கிருஷ்ணர் நடத்திய லீலையை அறிந்து கொண்டார். இந்நிகழ்வு நடந்ததாகக் கூறப்படும் இடம்தான் திருக்கண்ணன்குடி. அவ்விடத்தில் லோகநாதப் பெருமாள் கோவில் கோபுரத்துடன் எழுப்பப்பட்டது.

#அமைவிடம் :

இக்கோவில் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள திருக்கண்ணங்குடியில் அமைந்துள்ளது. நாகப்பட்டினம்-திருவையாறு சாலையில் நாகப்பட்டினத்திலிருந்து சுமார் 8 கிமீ தொலைவிலும் சிக்கலில் இருந்து 2 கிமீ தூரத்திலும் இந்தக் கோவில் உள்ளது.

Share this:

Write a Reply or Comment

thirteen − 2 =